Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 23 மே, 2012

முதல் இடம் பிடித்த முகமது யூனுஸ்

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த லப்பைக்குடிகாடு முகமது யூனுஸ்

பெரம்பலூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் டாக்டர் ஆவதே லட்சியம் என்று தெரிவித்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் 55 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 3,685 மாணவர்கள், 3,469 மாணவிகள் என மொத்தம் 7,154 பேர் 21 மையங்களில் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தட்டி சென்றனர்.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் முகமது யூனுஸ் 1200க்கு 1175 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இவர் பாடவாரியாக தமிழ் 193, ஆங்கிலம் 189, கணிதம் 200, இயற்பியல் 200, வேதியியல் 199, உயிரியியல் 194 மதிப்பெண் பெற்றுள்ளார். குன்னம் தாலுகா, லப்பைக்குடிகாட்டை சேர்ந்த இவரது பெற்றோர் முகமது ஜக்கரியா, செல்வகனி. முகமது யூனுசிற்கு முகமது இஸ்மாயில்(15), அஸ்மிதா(14) ஆகிய தம்பி, தங்கைகள் உள்ளனர். இவர்களது தந்தை முகமது ஜக்கரியா மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வருகிறார். மருத்துவ படிப்புக்கு தேவையான கட்ஆப் மதிப்பெண் (196.75) பெற்றுள்ள முகமது யூனுஸ் டாக்டராவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

இதே பள்ளியை சேர்ந்த மாணவர் பட்டுராஜ் 1,174 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக தமிழ் 196, ஆங்கிலம் 189, கணிதம் 198, இயற்பியல் 195, வேதியியல் 199, உயிரியியல் 197 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் மருத்துவ படிப்புக்கு தேவையான கட்ஆப் மதிப்பெண் 197 பெற்றுள்ளதால் டாக்டராக ஆவதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இப்பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவர் மாதவன் 1,173 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக தமிழ் 194, ஆங்கிலம் 186, கணிதம் 199, இயற்பியல் 195, வேதியியல் 200, உயிரியியல் 199 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவர் மருத்துவ படிப்புக்கு தேவையான கட் ஆப் மதிப்பெண் 198.25 பெற்றுள்ளதால் டாக்டராக ஆவதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக