Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 24 மே, 2012

கோடைகால பயிற்சி முகாம்


கோடை கால விடுமுறையை மாணவ, மாணவியர்கள் வீணான பொழுதுபோக்கில் கழிக்காமல் அதை பயனுள்ளதாக ஆக்கி கொள்ளும் வகையில் நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் கற்றுக் கொடுக்கும் கோடை கால பயிற்சி முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் இம்மாதத்தில் நடத்தி வருகின்றது 
அந்த வகையில் நமதூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 11/05/2012 முதல் 21/05/2012 வரை நடைபெற்றது. 
மாணவர்களுக்கான வகுப்புகளை சகோ அபுல் கலாம் ஆசாத் (மாவட்ட மாணவரணி செயலாளர்) அவர்களும் பெண்களுக்கான வகுப்புகளை ஆலிமாக்களும் சிறப்பாக நடத்தினர்.
இம்முகாமில் டாக்டர் யாஸர் அரபாத் அவர்கள் மருத்துவத்துறையைப்  பற்றியும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும் விவரித்தார்,இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.

மேலும் மங்கலமேடு காவல் துறை ஆய்வாளர் செல்வம் அவர்கள் காவல்துறையைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் விவரித்தார் இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். இறுதி நாளன்று நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
நன்றி : TNTJ LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக