Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 24 மே, 2012

மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து


உணவுக்கட்டுப்பாடு தான் மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து...!
.

மஞ்சள் காமாலை அறிகுறிகள்:-
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் மற்றும் உடல் மஞ்சளாக இருக்கும். சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை மற்றும் சிறுநீர் மஞ்சளாக வெளியேறும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் கடுமையாக இருக்கும், அவர்களுக்குப் பசி எடுக்காது. இதனை ஆரம்பத்திலே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
தவிர்க்க வேண்டியவை:-

மஞ்சள் காமாலை வந்தால் மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்க வேண்டும்.
சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. கொழுப்புத் சத்து நிறைந்த உணவுகளை ஒதுக்க வேண்டும். மஞ்சள் காமாலை வந்தால் 5 மாதங்கள் வரை அசைவ உணவுகளை தொடவே கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.
உடலுக்கு ஏற்றது:-
மஞ்சள் காமாலை வந்தவர்கள் மாவுச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உண்ண வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மோர் ஆகியவற்றை உண்டால் உடலுக்கு சிறந்தது. மேலும் அவர்கள் தினமும் 3 இளநீர் குடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் பொருட்களை உண்பது நல்லது.
சிலர் சூடு போடுவதால் இது சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். சூடு போட்டால் உடல் தான் புண் ஆகுமே தவிர சரியாகாது. ஆகவே சிந்தித்து செயல்பட்டு, உணவுக்கட்டுப்பாட்டுடன் இருங்கள், மஞ்சள் காமாலை பறந்து போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக