திங்கள், 30 நவம்பர், 2015
ஞாயிறு, 29 நவம்பர், 2015
சனி, 28 நவம்பர், 2015
நமதூரில் நடைபெற உள்ள குடும்பவியல் ஆய்வரங்கம் ..
லெப்பைகுடிக்காடு கிழக்கு மஹல்லா மற்றும் நகர ஜமாஅத்துல் உலமா இணைந்து நாளை (29/11/2015) ஞாயிற்றுக்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு கிழக்கு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் மாபெரும் குடும்பவியல் ஆய்வரங்கம் நடைபெறுகிறது .
இனிய இல்லற வாழ்வில் இடையூறு அளிப்பது கணவனா?.. மனைவியா?.. உறவினர்களா?… என்ற தலைப்பில் உலமாக்கள் பங்கு பெரும் மாபெரும் பட்டிமன்றம் நடைபெறுகிறது …
நமதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நடத்தும் உலக எய்ட்ஸ் தின விழா அழைப்பிதழ் ...
லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வருகின்ற 01/12/2015 செவ்வாய் கிழமை அன்று உலக எய்ட்ஸ் தினம் கொண்டாட இருப்பதால் விழாவில் பொது மக்கள் உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். நலிவடைந்த மக்களுக்கு எச் ஐ வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
வியாழன், 26 நவம்பர், 2015
புதன், 25 நவம்பர், 2015
சிட்டி ஆஃப் லைஃப் – திரைப்பட விமர்சனம் (யாசர் அரஃபாத்)
இந்தப் படத்தையெல்லாம் பார்க்க முடியுமா என்று நான் ஒதுக்கிவைத்த படத்திலொன்றுதான் CITY OF LIFE. நீண்ட இடைவெளிக்குப்பிறகு சரி இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கு பார்ப்போமே என்று பார்த்தேன், இந்தப்படத்தையா இவ்வளவு நாட்கள் பார்க்காமல் போனோம் என வருத்தப்பட வைக்கும் அளவிற்கு மிக அருமையானதொரு படமாக இருந்தது.
முக்கியமாக நான்கு கதாபாத்திரத்தங்களை சுற்றி பின்னப்பட்டிருக்கும் படம். முழுக்க முழுக்க அமீரகத்தில் (UAE) எடுத்தப்படம்..
உள்ளூர் செல்வாக்கு, பணம் மிகுந்த அரபியைச் சுற்றியும், இந்தியா குஜராத்திலிருந்து வந்து டாக்ஸி ஓட்டும் ஒரு இளைஞர் துபாயில் எடுக்கும் பாலிவுட் படத்தில் வாய்ப்பு தேடி அலைபவரை சுற்றியும், இத்தாலி நாட்டிலிருந்து ஏர்வேஸில் பணிபுரியும் பெண்ணும், அவருடைய அமெரிக்க காதலனை சுற்றியும், பிலிப்பைன் நாட்டிலிருக்கும் ஒருவர் அட்டை குப்பைகளை எடைக்கு போடுபவரை சுற்றிதான் கதைகள்.
துபை, ஷார்ஜா, அபூதாபியில் SDPI மாநில தலைவர் பங்கேற்ற கருத்தரங்குகள்! – இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி ஏற்பாடு!
இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி அமீரகத்தில் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகின்றது.அதில் ஓர் அங்கமாக இந்தியாவின் அரசியல் சூழல் குறித்தும், தமிழகத்தின் நிலை குறித்தும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.
தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக
சகிப்பின்மைக்கு எதிராக அமீர்கான் மற்றும் நந்திதா தாஸ் கண்டனம்!.
இந்தியாவில் பாஜக ஆட்சியின் கீழ் நிலவுவதாகக் கூறப்படும் சகிப்பின்மைச் சூழலைக் கண்டித்து எழுத்தாளர்கள்,கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தமக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திரும்பத்தரும் போராட்டத்தில் திரையுலகக் கலைஞர்களும் குதித்துள்ளனர்.
இந்தியத் திரையுலகைச் சேர்ந்த 24 பிரமுகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளைத் திருப்பி அளிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் புக்கர் விருதுபெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும் இணைந்தார்.
யுத்தங்களின் குருதி வழிந்தோடும் புகைப்படங்கள்!.
மத்திய கிழக்கு நாடுகளில் வழமையாக நடக்கும் கசமுசா சண்டை என்றுதான் இந்த உலகம் முதலில் சிரிய யுத்தத்தை நினைத்தது, 2010 அரபுலக மக்கள் புரட்சிக்கு பின்னர் வளைகுடாவில் அடிக்கடி ஏற்படும் அரசியல் சண்டைகளில் ஒன்றாக எல்லோரும் சிரியாவையும் பரிதாமமாக பார்த்துவிட்டு அவரவர்களுடைய வேலைகளில் மூழ்கிப்போனது ஒட்டுமொத்த உலகமும்.
ஞாயிறு, 22 நவம்பர், 2015
வியாழன், 19 நவம்பர், 2015
புதன், 18 நவம்பர், 2015
நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை! – (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
ஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர் நிலைகளை கட்டமைத்து ஒவ்வொரு வருடமும் தனது உழைப்பின் பயனை இத்தகைய நீர் நிலைகளில் சேமித்து வைத்து கோடை காலத்திலும் மக்களுக்கு உதவிய தண்ணீர் கொடையாளியான மழை இன்று உக்கிர கோபத்தில் கொந்தளித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி பகுதி முழுவதையும் தனது உக்கிர போராட்டத்தால்
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட புரட்சிப்பாடகர் கோவன் ஜாமீனில் விடுதலை!.
மதுவுக்கு எதிராக தனது பாடல்கள் மூலம் பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கலகத்தைச் சேர்ந்த புரட்சிகர பாடகர் கோவனை சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸார் அக்டோபர் 30-ம் தேதி அதிகாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.
கோவனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை பெருநகர தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற
இந்தியாவின் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்ற முடியாது : மத்திய அரசு மனு தாக்கல்
இந்தியாவுக்கு, ‘பாரத்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் எனக்கூறி, நிரஞ்ஜன் பட்வால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
இந்திய அரசு சட்டம் 1935-ஐ ரத்து செய்து இந்திய சுதந்திர சட்டம் 1947-ஐ அமல்படுத்தியதும், நமது நாட்டுக்கு ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்திய நாட்டுக்கு ‘பாரத்’, ‘இந்துஸ்தான்’, ‘இந்த்’ அல்லது ‘பரத்வருஷ்’ என்பது போன்ற சமஸ்கிருத பெயர்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்
சனி, 14 நவம்பர், 2015
புதன், 11 நவம்பர், 2015
திங்கள், 9 நவம்பர், 2015
பீகார் தேர்தல்: "அண்ணன் பிரதமர் மோடி"க்கு தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கரின் பகிரங்க கடிதம்
நமது குன்னம் தொகுதி MLA வின் மனம்திறந்த மடல்
சென்னை: பீகார் தேர்தலை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அக்கடிதம் விவரம்: அன்பிற்குரிய அண்ணன் பிரதமர் மோடி அவர்களுக்கு, நமோஸ்கார். உங்களுக்கு ஹிந்தியில் சொன்னால் தானே பிடிக்கும். நான் ஷாங்காய் சென்றதில்லை, ஆனால் நல்ல காலமாய் அகமதாபாத் வந்திருக்கிறேன். அதனால்
பீகார் தேர்தல் முடிவுகள் – ஒரு முழுமையான அலசல்
பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் 5 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்தே தேசிய அரசியல் சூடுபிடிக்க தொடங்கியது. பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
பீகார் சட்டசபை தேர்தல், தேசிய அரசியலில் பெரிய தாகத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் பொருளாதார கொள்கை மற்றும் முக்கிய சட்டங்களின் விதியையும் தீர்மானிக்கும் என்பதே அரசியல் கட்சிகள் மற்றும் நடுநிலையாளர்களின் கருத்தாக இருந்தது.
மாட்டுக்கறி சாப்பிடுவது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை – கமலஹாசன்
நடிகர் கமல்ஹாசன் தனது 61வது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். இதனை ஒட்டி அவரது நற்பணி இயக்கத்தின் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவிட்டு பேசும்போது
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள்.
சனி, 7 நவம்பர், 2015
ஒரு கலைஞன்! ஒரு நடிகன்!! ஒரு டஜன் மூடர் கூடம்!!!
இந்த முகமூடிகள் அவிழ்ந்து விழுந்த தருணம் அற்புதமானது, ஒரு மகா நடிகரையும் மற்றுமொரு மகா கலைஞரையும் பற்றி தெரிந்து கொல்லுங்கள். இருவரின் பெயரும் முஸ்லிம் பெயர்கள் போல்தான் இருக்கும்.
ஒருவர் தனது பிறந்த நாள் அன்று இவாறு பிரகடனம் செய்தார், ‘நான் ஒரு தேசப்பற்றுள்ள இந்தியன். இங்கே நடக்கும் பிரச்சினைகள் என்னைக் கவலைகொள்ள வைக்கின்றன.
வியாழன், 5 நவம்பர், 2015
புதன், 4 நவம்பர், 2015
மில்லத் IAS & IPS வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மில்லத் IAS & IPS வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் தொகுப்பு
தொழுதூர்:அரங்கூர் ( ராஜா ) வாய்க்காலில் மினிலாரி கவிழ்ந்து கோரவிபத்து.
02-11-15 தொழுதூர் அருகே அரங்கூர் பாலத்தில் இருந்து வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியானார்கள். உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
அரியலூர் மாவட்டம் முதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி
தோட்டக்காரனின் கடவுள்!.
இப்பிரபஞ்சத்தின் படைப்புகளிலேயே மிகச்சிறந்த படைப்பாக இங்கு மனித சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கான அருட்கொடைகளும், வளங்களும் உலகம் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. அல்லாஹ் இந்த உம்மத்திற்கும் அதன் அங்கத்தவர்களாக இருக்கும் முஸ்லிம்களுக்கும்
அவனுடைய நிஃமத்துகளின் கதவை தாராளமாக திறந்து வைத்துள்ளான்.
21-ம் நூற்றாண்டின் மனிதர்களுக்கு இன்றும் திருக்குர்ஆன் அதனுடைய
ஞாயிறு, 1 நவம்பர், 2015
Caste on the Menu Card (காஸ்ட் ஆன் தி மெனு கார்ட்) ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை!
மாட்டிறைச்சி உண்ணும் பழக்கவழக்கங்களை காட்டும் ஆவணப்படத்தை திரையிட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) புதுடெல்லியில் ஜீவிகா ஆசியா லைவ்லிஹுட் ஆவணப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால், ஆவணப்படத்தை ஒளிபரப்ப தணிக்கை வாரியச் சான்றிதழ் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதுல் ஆனந்த் என்ற திரைப்பட இயக்குநர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)