Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 22 நவம்பர், 2015

நமதூரில் கொட்டி தீர்க்கும் அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) ....


இன்று (22-11-2015) அதிகாலையிலிருந்து நமதூரில் தற்போது இரவு 9 மணி வரை நல்ல மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் இன்று நமதூரில்
இயல்பு வாழ்க்கை பொரிதும் பாதிக்கப்பட்டன. இரண்டு வாய்க்காலிலும் (ஒகழுர் மற்றும் ராஜா) தண்ணீர் கரை புறண்டு ஓடுகின்றன.
தற்போது இரவு 9 மணியளவில் நமதூர் ஆற்றில் தண்ணீர் திறப்பதாக ஓர் முன்னெச்சரிக்கையாக நமதூர் பள்ளி வாசலில் அறிவிப்பு செய்யப்பட்டது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் மாறும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 
தற்போது மழை என்றும் பாராமல் நமதூர் மக்கள் குடை எடுத்து கொண்டு ஆற்றங்கரை பக்கம் சென்று வேடிக்கை பார்க்க செல்வதாக நமது நிருபருக்கு அதிகார பூர்வ தகவல்கள் வந்துள்ளன.
இது போன்ற சமயங்களில் நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமதூர் ஜமாத்துக்கள் மற்றும் இயக்கங்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லாஹ் தான் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். 























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக