Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 28 நவம்பர், 2015

நான் ஏன் இணையத்துக்குள் நுழைந்தேன்?

நான் ஏன் இணையத்துக்குள் நுழைந்தேன்?
சில வருடங்களுக்கு முன்பு 10 அல்லது 15 நிமிடம் தின மலரில் முக்கிய செய்திகளை படித்து விட்டு வேறு வேலைகளின் பக்கம் சென்று விடுவேன்.
அப்போது நேசகுமார் என்ற இந்துத்வவாதி இஸ்லாத்தைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு பதில் சொல்ல அன்று ஒரு சில இஸ்லாமிய பதிவர்களே இருந்தனர். இஸ்லாத்தின் மீதான தாக்குதலுக்கு நாமும் களத்தில் இறங்கினால் என்ன? என்ற எண்ணம் வரவே எனது ஓய்வு நேரத்தை இந்துத்வாவாதிகளுக்கு பதில் கொடுப்பதற்காக மாற்றிக் கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு நேசகுமாரே தனது பக்கத்தில் 'இஸ்லாத்தை குறை காண போய் என்னை சிறுக சிறுக இஸ்லாம் ஆட்கொள்கிறது' என்று தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். அதன் பிறகு அவர் எழுதுவதையும் விட்டு விட்டார். ஒருகால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை.
அதன் பிறகு கால்கரி சிவா, ம்யூஸ், ஜெயராமன், கோவி கண்ணன், டோண்டு ராகவன், என்று ஒரு பட்டாளமே எனக்கு எதிராக கிளம்பியது. தமிழ் மணத்தில் நான் பதிவு போட்டால் மைனஸ் ஓட் குத்த தயாராக காத்திருப்பர். எனது பழைய பதிவுகளை படித்தால் இந்த விபரங்கள் எல்லாம் கிடைக்கும். இது பற்றி நான் அன்று வரைந்த கார்ட்டூனைத்தான் மேலே பார்கிறீர்கள்.
அன்று ஆரம்பித்த பயணம் இன்று வரை தொடர்கிறது. இதுவரை ப்ளாக்கரில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 867753. பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் 16117. இதுவரை நான் எழுதிய பதிவுகள் 2668. ப்ளாக்கரில் எனது ஃபாலோயர்கள் 387.
சென்ற இரண்டு வருடங்களாகத்தான் எழுதிய பதிவுகளை முகநூலிலும் பதிந்து வருகிறேன். தற்போது முக நூலில் 4900 நண்பர்களை பெற்றுள்ளேன். இலக்கை தொடுவதற்கு இன்னும் 100 தான் பாக்கி. பல பதிவுகள் முக நூலில் 1000 ஷேர்களையும் தாண்டி சென்றுள்ளது. இதனால் மேலும் மேலும் எழுத ஆர்வம் ஏற்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு தமிழகத்தில் அவர்களின் செய்திகள் மாற்றாரையும் அடைய ஊடுக வசதி இல்லாதது பெருங்குறை. அந்த குறையை இணையம் பூர்த்தியாக்குகிறது என்றே சொல்வேன்.
இன்று போல் என்றுமே இணையத்தில் எழுத வாய்ப்பும் வசதிகளும் கிடைத்து பூரண உடல் நலத்துடனும் இருக்க உங்கள் பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! நம்பிக்கை கொண்டவர்களே!! பிரார்த்தனை செய்யுங்கள்; "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட எங்களால் தாங்க முடியாத சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; ஏக இறைவனை மறுக்கும் கூட்டத்தாரின் மீது நாங்கள் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக