Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 5 நவம்பர், 2015

அவள் – குறும்படம் விமர்சனம்! – எழுத்தாளர் தாழை மதியவன்! -


‘‘அவள்’’ – ஆனால் அவளாக இல்லை
அப்படியானால் – அவள் அவளாக இருந்தால்
‘’அவள்’’

பர்தா – முகத்திரை அனிய வேண்டியவள்
அவளோ தெருக்களில் – கடைவீதிகளில் அதை அணியமால் செல்கிறாள்
அவளிடம் பர்தா இல்லையா
அது கடையில் வாங்கி அட்டைப் பெட்டியிலே இருக்கிறது.
‘‘என்றாலும் அது அட்டைபெட்டி மூடியில் அறிவுறை வழங்குகிறது – நல்லயுக்தி’’
‘’அவள்’’
பர்தா அணியாமல் செல்லும்போது ஒரு முஸ்லிம் மூதாட்டியை பார்க்கிறாள்
-
அடுத்து ஒரு நாள் ஒரு முஸ்லிம் சிறுமியை பார்க்கிறாள்
மூதாடியும் – சிறுமியும் பர்தாவில்
அவர்கள் இருவருமே பர்தா அணிவதை தம் உரிமை என கூறுகின்றனர்.
கடமை என்று கூறவில்லை, அதற்கு மேலே அது எங்கள் உரிமை என உரைக்கின்றனர்.
‘’அவள்’’
சலனப்பட அதன் பின் பர்தாவை நாடுகிறாள்
‘’அவள்’’ எவளாக இருக்க வேண்டுமோ அவளாகிறாள்
இதுவே ‘’அவள்’’ எனும் குறும்படம்
‘’காட்சி அமைப்பும், மிகக் குறைவான வசனமும், படபிடிப்பும், நடிப்பும் படத்தை பாலமாக்குக்கின்றன’’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக