Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 நவம்பர், 2015

பெரம்பலூரில் சிறப்பாக நடைபெற்ற TNTJ வின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்...


TNTJ பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகர கிளை சார்பாக 28-11-15 அன்று மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அஷ்ரஃப் அவர்கள் முன்னிலை வகித்தார், துவக்க உரையாக சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் "மஹ்ஸரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். பின்பு மாநில தலைவர் ஃபக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் சிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.பெரம்பலூர் நகர மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இப்பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.







நன்றியுரை: பெரம்பலூர் நகர கிளை தலைவர் ரசூல் அஹ்மது அவர்கள் ஆற்றினார்கள்...

அல்ஹம்துலில்லாஹ்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக