Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 9 நவம்பர், 2015

பீகார் தேர்தல் முடிவுகள் – ஒரு முழுமையான அலசல்

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் 5 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்தே தேசிய அரசியல் சூடுபிடிக்க தொடங்கியது. பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
பீகார் சட்டசபை தேர்தல், தேசிய அரசியலில் பெரிய தாகத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் பொருளாதார கொள்கை மற்றும் முக்கிய சட்டங்களின் விதியையும் தீர்மானிக்கும் என்பதே அரசியல் கட்சிகள் மற்றும் நடுநிலையாளர்களின் கருத்தாக இருந்தது.

பாஜகவை எதிர்க்கும் அனைத்து முக்கிய கட்சிகளான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஓர் அணியிலும், பாஜக மற்றும் சிறிய கட்சிகள் ஓர் அணியிலும் பீகார் தேர்தலில் போட்டியிட்டன. ஆனால் ஆரம்பத்தில் மெகா கூட்டணியில் இருந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி பின்னர் தனித்து போட்டியிட போவதாக அறிவிதிருகிறது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி கட்சியிடம் படுதோல்வி அடைந்த பின்னர் நடைபெறும் முதல் மாநில தேர்தல் என்பதால், பீகார் சட்டசபை தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது. மோடியின் ஆதரவு அலை முடிவடைந்து விட்டது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த தேர்தலில் ப.ஜ.க வெற்றி பெற்றால் பிரதமர் மோடியின் அரசு, பல பொருளாதார கொள்கைகளை நிறைவேற்ற இது உதவியாக இருக்கும் என்றும் நம்பப்பட்டது.
இந்நிலையில் பீகார் மாநிலத்திற்கு ரூ 1.25 லட்சம் கோடி நிதியுதவி அறிவித்ததோடு மட்டுமல்லாமல், பல மேம்பாட்டு முயற்சிகளையும் மோடி வாரி வழங்கினார் அதோடு, பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வசதியாக இருக்கும் என அக்கட்சி தெரிவித்தது.
பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2013ம் ஆண்டு 17 வருட கூட்டணியை துண்டித்து காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொண்டார் நிதிஷ் குமார். ஆனால், கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியை அமைக்க செய்த நிதிஷ், தனது நீண்ட கால அரசியல் எதிரியான லாலு பிரசாத் யாதவை சந்தித்து மோடிக்கு எதிரான ஒரு அணியை உருவாக்கினார்.
ஆனால், நிதிஷ் குமாருக்கு விசுவாசமாக இருந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுபினர்கள் அவரை விட்டு பாஜகவில் இணையத் தொடங்கினர். இந்நிலையில், நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான அணியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று முடிவு செய்த நரேந்திர மோடி, அதற்கான பொறுப்பை அவரின் நம்பிக்கைக்குரிய பாஜகவின் தலைவர் அமித் ஷாவிடம் வழங்கினார்.
அதன் பிறகு பீகார் மாநிலத்தில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து பேசியது மட்டுமல்லாமல் பீகார் மாநிலம் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
பாஜகவையும் மோடியையும் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இருந்த நிதீஷ் குமார் – காங்கிரஸ்- லாலு பிரசாத் யாதவ் கட்சி இணைந்து மெகா கூட்டணி இன்று ளியாகிவரும் தேர்தல் முடிவுகளில், பல்வேறு இடங்களில் இந்த கூட்டணி முன்னிலையில் உள்ளது. தங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, மத்திய அரசின் வெறுப்பிற்கு மக்கள் கொடுத்த தக்க பதிலடி. வேற்றுமையி்ல் ஒற்றுமை என்பதற்கு சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரம் வரை நிதிஷ்குமாரின் வெற்றி உறுதியாகிவிட்டது. அவர் மூன்றாவது முறையாக பீகார் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக