Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 26 நவம்பர், 2015

கன்னத்தில் அறை: சிவசேனா அறிவிப்பிற்கு போட்டியாக தமிழ்நாடு தவ் ஹித் ஜமாத் அமைப்பு



சகிப்பின்மை விவகாரத்தில் ஆமிர்கானை கன்னத்தில் அறைபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்ற சிவசேனா அறிவிப்பிற்கு போட்டியாக தமிழ்நாடு தவ் ஹித் ஜமாத் அமைப்பும் அறிவிப்பு வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை பிரச்சினையால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என்று மனைவி கிரண் தன்னிடம் கேட்டதாக இந்தி நடிகர் ஆமிர் கான் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நேற்று விளக்கம் அளித்த அமீர்கான், நாட்டை விட்டை வெளியேறும் எண்ணமில்லை என்றாலும் சகிப்பின்மை குறித்த தம்முடைய கருத்தில் மாற்றமில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வலுத்து வருகிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பேசிய சிவசேனையின் பஞ்சாப் மாநில தலைவர் ராஜிவ் தாண்டன் ஆமீர்கானை கன்னத்தில் அறைந்தால், அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என தெரிவித்தார். சிவசேனாவின் இந்த கருத்திற்கு கடும் கண்டனம் எழுந்து  வருகிறது.

இந்த நிலையில் சிவசேனாவின் அறிவிப்பிற்கு போட்டியாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ராஜ் தாக்ரேவை கன்னத்தில் அறைபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு என அறிவித்துள்ளது.  

மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவை, சிவசேனா தலைவர் என்று அந்த அறிக்கையில் தவ்ஹித் ஜமாஅத் துணைப் பொதுச் செயலாளர் தவ்ஃபிக் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.


தேசிய அளவில் கவனம் பெறக்கூடிய ஒரு விஷயத்தில், தவறான தகவல்களோடு அறிக்கை வெளியிட்டிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி நீயூஸ்7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக