Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 18 டிசம்பர், 2015

பாகம் 2 – அமெரிக்காவை சூழ்ந்திருக்கும் “முஸ்லிம்” அரசியல்! – ஆரூர் யூசுஃப்தீன்


பாகம் 2 – அமெரிக்காவை சூழ்ந்திருக்கும் “முஸ்லிம்” அரசியல்! – ஆரூர் யூசுஃப்தீன்

சில நாட்களுக்கு முன்பு மூன்று செய்திகள் அமெரிக்க முஸ்லிம்களின் பிரச்னைகளையும் அதன் தீர்வையும் உலக மக்களுக்கு வெளிக் கொணர்ந்துள்ளது.
வேர்ணன் என்ற பள்ளிக்கூடத்தில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரத்தையும் இனவெறியையும் தடுக்கும் வகையில் ஒரு முயற்சியை எடுத்தனர்.
அம்முயற்சியின் வெளிப்பாடாக அப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் அல்லாத
மாணவிகள் சக முஸ்லிம் மாணவிகள் அணியும் முக்காடை அணிய விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஒருவர் அணியும் ஆடையை வைத்து அவரை எடை போடக்கூடாது என்ற கருத்தை பெரும்பாலான மாணவிகள் கூறினர்.
இந்நிகழ்வைப் பற்றி பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், “தற்போதைய காலகட்டத்தில் முஸ்லிம் மாணவராக வாழ்வது அமெரிக்காவில் மிகவும் கடினமான ஒன்று. இம்மாணவிகளின் முயற்சியால் எம் பள்ளியில் இப்பொழுது அப்படிப்பட்ட நிலையில்லை” என்று தெரிவித்தார்.
முஸ்லிம் அல்லாத மாணவி ஒருவர் கூறுகையில், “தற்போது எனக்கு இஸ்லாம் என்னும் மார்க்கத்தின் மீது அதிகம் மரியாதை வந்துள்ளது. அவர்கள் போல் ஹிஜாப் அணிய மிகவும் ஆர்வமாக உள்ளேன். முஸ்லிம்கள் பற்றிய பொய்கள் இனி என்னிடம் செல்லாது” என்றார்.
கலிஃபோர்னியா நகரில் உள்ள ஓர் இஸ்லாமிய இறையில்லத்தை சில மதவெறி பிடித்த கும்பல் தீயிட்டது. கடந்த வெள்ளியன்று நடைபெற்ற இந்நிகழ்வைப் பற்றி பள்ளிவாசல் இமாம் பேசுகையில், “இந்நிகழ்வுக்கு டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சுதான் காரணம். டொனால்டின் மதவெறிப் பேச்சின் காரணமாக சிலர் இஸ்லாமியர்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்படும் எதிர்மறைத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது கண்டன உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்:
“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கும் பிற இன குழுக்களுக்கும் இடையே நடக்கும் சண்டையை யாரும் இஸ்லாத்திற்கும் மேற்குலகத்திற்கும் இடையே நடக்கும் போர் போல் எண்ண வேண்டாம்.
ஐ.எஸ். என்பது இஸ்லாம் அல்ல. அமெரிக்க முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் அல்ல. இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் வார்த்தை தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரும் அமெரிக்காவை அதிகம் நேசிக்கின்றனர். நாட்டிற்காக பல தியாகங்களையும் செய்ய தயாராகவுள்ளனர்.”
இவ்வாறு அவர் தனது உரையில் கூறினார்.
ஆரூர் யூசுஃப்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக