Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

இன்று ஒரு காக்கா பார்த்தேன் அதன் நிறம் கருப்பு'

இன்று ஒரு காக்கா பார்த்தேன்
அதன் நிறம் கருப்பு' 

- இப்படி ஒரு ஸ்டேடஸ். அதற்கு 1000+ லைக்குகள் 250+ ஷேர்கள். காரணம், அந்த ஸ்டேடஸ் போட்டது ஒரு பெண்.

அதேப்போன்று தான் நம்ம ஆட்களும் கொஞ்ச பேரு பொம்பளப் புள்ளைங்க பேருல என்ன வந்தாலும் அதை லைக்கோ லைக்கு என லைக்குவதும், ஷேரோ ஷேர் என ஷேருவதும். ஒரு பொண்ணு கீழே உள்ள படத்தில் இருப்பதை போட்டதும் 500+ லைக்குகள் 300+ ஷேர்கள். யார் என்பது ஓரளவிற்கு அனைவரும் ஊகிக்கக்கூடியதே.

என்ன எழுதியிருக்கிறது? அதன் கருத்து என்ன என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். முஸ்லிம் இயக்கங்களுக்கு, கட்சிகளுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள் என்ற கோரிக்கை தான் அவர்களுக்கு முக்கியம்.
'முஸ்லிம்களுக்கு தலைவர் முஹம்மது நபி(ஸல்) மட்டுமே. எனவே நீங்கள் முஸ்லிம்களுக்கு நீங்கள் ஓட்டுப் போடாதீர்கள்.'
திரும்பவும் படியுங்கள்.. திரும்பவும் படியுங்கள்... ஒண்ணுமே புரியலையா... கண்ண கட்டுதா... ரைட்டு... அதே தான்...

நான் தேர்தல்களில் வாக்களித்திருக்கிறேன். கருணாநிதியையோ அல்லது வேறுயாரையுமே நபி(ஸல்) போன்ற தலைவர் என்று நினைத்து வாக்களித்ததில்லை. எண்ணியதுமில்லை. ஆனால், இதை ஷேர் பண்ணியிருப்பவர்கள் தேர்தல்களில் வாக்களித்திருந்தால் இப்படி எண்ணியிருந்திருப்பார்களோ???
சகாயம் ஐபிஎஸ், நேர்மையான அதிகாரி. அவரின் நேர்மையை சிலாகித்து இதுபோன்றவர்கள் தான் நாட்டை ஆளவேண்டும் என ஒரு கூட்டம் மக்கள் பிரசிங்கித்து வருவதை காண்கிறோம். அதற்கு பின்னால் உள்ள அரசியல் வேறு. நமக்கு தேவையற்றது.
ஆனால், ஒரு ஆட்சியாளன் அல்லது மக்களின் பிரதிநிதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஜாதி, மத, இன பேதமின்றி தன் உயிரையும் பணயம் வைத்து கழுத்தளவு நீரில் சென்று உதவியவர்களைத் தவிர வேறு யார் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். உதவியது பலனை எதிர்பார்த்து அல்ல. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சும்மா இருந்த நேரத்தில் களத்தில் இறங்கிய மக்கள், நாளை மக்கள் பிரதிநிதிகளாக இருப்பார்களேயானால் அவர்களே சரியான நேரத்தில் உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு அடிப்படை அறிவு அற்றவர்களா இதுபோன்றவற்றை பகிரக்கூடியவர்கள்?
தகுதியற்றவர்கள் என அரசியல்வாதிகளை நாம் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால், தகுதியானவர்கள் வந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். இதற்குப் பெயர் என்ன?
இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இந்த பெண்ணின் கணவர்தான் பெண்கள் பெயரில் இருக்கும் ஐடிகளில் 'நல்ல' ஆண்கள் பலர் இன்பாக்ஸில் வந்து தொந்தரவு கொடுக்கின்றனர் என கொஞ்ச நாள் முன்பு இங்கே வந்து பலமுறை கூறியவர். இதை லைக் மற்றும் ஷேர் செய்தது கூட 99 சதவீதம் பேர் ஆண்களே. அதில் அவர் கணவர் லைக்கவும் இல்லை. ஷேரவும் இல்லை. (???)
அதில் ஒருவர் கேட்கிறார், 'வாக்களிப்பதற்கும், நபி(ஸல்) தான் தலைவர் என கூறுவதற்கும் என்ன சம்பந்தம் என்று?' உடனே, இன்னொருவர் கூறுகிறார் 'சகோதரியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை.. இதுபோல விமர்சிக்காதீர்கள்' என்று. உடவே அவர் 'தெரியாமல் சொல்லிவிட்டேன்' எனச் சொல்ல... இவர் 'அப்படியானால் என்னை மன்னிவிடுங்கள்' எனச் சொல்ல... ஐயோ... கொடுமையே!!!
வெள்ள நிவாரணப் பணிகளில் முஸ்லிம்களின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்ததில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறதை அனைவரும் அறிவோம். அதேப் போல வெளிவந்த பங்களிப்புகளிலும் நுண்ணரசியல் இருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உளவுத்துறையின் கைப்பாவையாக இயங்கும் சிலர் இது போன்று இனியும் உளறலாம்... அதற்கு என்ன பெயர்களில் வேண்டுமானாலும் அவர்கள் வரலாம்..
என்னைப் பொறுத்தவரை 'காக்கா கறுப்பு' என்பதை லைக், ஷேர் செய்தவர்களுக்கும், இதை லைக் ஷேர் செய்தவர்களுக்கும் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக