Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 21 டிசம்பர், 2015

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்தின் பொது அறிவிப்பு ...


பொது அறிவிப்பு லெப்பைக்குடிக்காடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது முதல் ஜூம்ஆவில்
17600 ரூபாய் வசூலானது அதன் பிறகும் நல்லுள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் வெள்ள நிவாரணத்திற்கு பணம் தந்து கொண்டே இருந்தனர் அதன் காரணமாக தாருஸ்ஸலாம் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருள்கள் வாங்க 50000 ஐம்பதாயிரம் ரூபாய் முன் பணமாக அனுப்பி வைக்கப்பட்டது மேலும் இன்னும் அதன் பணிகள் முடியவில்லை இதன் பணிகள் முழுமை பெற்ற பிறகு அதனுடைய முழு வரவு செலவு கணக்குகள் வெளியிடப்படும் தாருஸ்ஸலாம் நிர்வாகத்தில் எந்தப்பணியாக இருந்தாலும் அதனுடைய முழு வரவு செலவு கணக்குகள் நோட்டீஸ் போர்டில் ஒட்டப் பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றதுவீண் வதந்திகளையும் பொய்யர்களையும் நம்ப வேண்டாம் கூடுதல் தகவல் அறிய தாருஸ்ஸலாம் நிர்வாகத்தை நேரில் அனுகவும் .
தாருஸ்ஸலாம் நிர்வாகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக