Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 12 டிசம்பர், 2015

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகி மீது வழக்கு!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக 
அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகி மீது வழக்கு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட பல முஸ்லிம் இயக்கங்கள் இரவும் பகலுமாக செயல்பட்டு மக்களுக்கு நிவாரண பொருட்கள்,பகுதியை தூய்மை செய்தல் போன்ற பல பணிகளை செய்து வருகிறது என்பது நீங்கள் அறிந்ததே!
ஒருசில நாட்களுக்கு முன்பு News 7 தொலைக்காட்சி
விவாதத்தில் பா.ஜ.க வின் எஸ்.ஆர்.சேகர் RSSயிடமிருந்து TNTJ 5,000 வாட்டர் கேன்களை பிடிங்கி விநியோகித்ததாக கூறினார்.முற்றிலும் பச்சை பொய்யை தொலைக்காட்சியில் மனசு உருத்தலின்றி கூறிய இந்த பொய்க்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழக்கு தொடர்ந்துள்ளது!
சத்தியம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யவும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக