Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 26 டிசம்பர், 2015

ஏர்வாடி படுகொலை:முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு டி.ஜி.பி.யுடன் சந்திப்பு...


ஏர்வாடி படுகொலை:முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு டி.ஜி.பி.யுடன் சந்திப்பு

நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீனின் திட்டமிட்ட கொலை தொடர்பாக, இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று தமிழக காவல்துறை டிஜிபி அசோக்குமாரை சந்தித்தனர். அப்போது, தமிழக உளவுத்துறை ஐ.ஜி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், உளவுத்துறை டி.ஐ.ஜி ஈஸ்வர மூர்த்தி, எஸ்.பி. அருளரசு ஆகியோரும் உடனிருந்தனர்.
நெல்லை ஏர்வாடி பகுதியில்
அதிகரித்து வரும் மதவாத சக்திகளின் அச்சுறுத்தல் குறித்தும், காவல்துறையின் மெத்தனப் போக்கு குறித்தும் டிஜிபியிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இளைஞர் காஜா முகைதீன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து ஏர்வாடி பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டும். விசாரணையை திசை திருப்பும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கொலை செய்யப்படவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் டிஜிபியிடம் தலைவர்கள் முறையிட்டனர்.
இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஹனீஃபா, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், தமுமுக, மமக தலைவர்கள் பேரா.ஜவாஹிருல்லா, ஜே.எஸ்.ரிஃபாயி, அப்துல் சமது, மறுமலச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் ஃபரூக், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத் தலைவர் முனீர், பாப்புலர் ஃப்ரண்டின் ரசாக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு சங்பரிவார அமைப்புகள் தமிழகம் முழுவதும் இதுபோன்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதையும், அதன் ஒருபகுதியாகவே இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், ஆகவே, அதற்கான தகுந்த மென்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.
தலைவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த டி.ஜி.பி இரண்டு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வதாகவும், அதற்கு அவகாசம் தருமாறும் கேட்டுக்கொண்டதோடு காஜா முகைதீன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்.

நன்றி புதிய விடியல்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக