Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 19 டிசம்பர், 2015

நிலவேம்பு கசாயம் நமதூர் கிழக்கு பகுதி முழுவதும் வினியோகம் - SDPI கட்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 17-12-2015 பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு SDPI கட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் கிழக்கு பகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று நமதூர் மக்களுக்கு வழங்கப்பட்டது . ஆரம்பமாக கிழக்கு பிலால் (ரலி) தெரு வழியாக ஆரம்பித்து சுபஹானியா நகர், நாட்டாண்மை நகர், அக்பர் நகர், அல்ஷா நகர், பிஸ்மில்லாஹ் நகர், கிழக்கு ஜெய்லானி தெரு, கிழக்கு நடுத்தெரு (அக்பர் அலி தெரு), இறுதியாக கிழக்கு மெயின் ரோடு (அல்லமா இக்பால் சாலை) வழியாக பேருந்து நிலையத்தில்

நிறைவு செய்தனர். இதில் நமதூர் கிழக்கு பகுதி மக்கள் அதிகமாக பயன் அடைந்தனர். இன்ஷா அல்லாஹ் நாளை மற்றும் நாளை மறுதினம் சனி கிழமை மேற்கு பகுதிகளுக்கு வழங்கப்படும்.

அல்ஹம்துலில்லாஹ் ...
குறிப்பு நமதூர் கோயிலிலும் வழங்கப்பட்டது.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக