Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 28 டிசம்பர், 2015

நமது மாவட்டம் நமது சுற்றுலா தளம் ...



வாய்க்கால் தண்ணீருக்கே வக்கில்லாத பெரம்பலூர் மாவட்டத்தில், ஆறேழு வருடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் செல்லுகிற, ஐந்தாறு ஆறுகளும் உள்ளதென்பது ஆச்சர்யமூட்டும் தகவலாகும்...!
கல்லாறு, சின்னாறு, மருதையாறு, கோனேரியாறு, வேதநதி, வெள்ளாறு என்றிருந்தாலும், காற்றழுத்தத்தாழ்வு நிலைகளின்போது கருத்தரித்து, கரைபுரண்டு கடலுக்குச் சென்று காணாமல்போவதே அதன் கடந்தகால வரலாறுகளாகும்...!

விடிய விடிய பெருக்கெடுத்துச் சென்று, வீணாகும் தண்ணீரை விசுவக்குடியிலேயே தேக்க வேண் டுமென வெள்ளைக்காரன் காலத்தி லேயே வேண்டுகோள் எழுந்தது.

மலையாளப்பட்டி அருகே அணை கட்ட மறுப்புதெரிவித்ததால், விசு வக்குடிக்கு அந்தவாய்ப்பு வீடு தேடியே வந்தது. மற்றபடி கொட்டும் மழைநீரை நம்பியே கொட்டரை நீர்த்தேக்கம் என்பதெல்லாம் தரேஷ்அகமதுவால் நமக்குத் தாரைவார்க்கப் பட்டது தான்.

விரும்பிய கோரிக்கையொன்று விசுவக்குடியில் நிறைவேறியதால் திரும்பிய திசையெல்லாம் இனி அரும்பிய பயிராகும், அதனால் நிரம்பிய வயிராகும் என்பது ஏழை விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்பது எத்தனை பேருக்குத்தான் தெரியும்...

செவந்துநிற்கும் செம்மலையைப் பரந்துவிரிந்த பச்சை(மலை) தேகத் துடன் பற்றியிருக்கி, கருங்கல் கரங் களால் கட்டியணைத்து நிற்கும் காளையைப் போன்றதொரு கண் கொள்ளாக் காட்சிதான் கண்முன் தெரிகிறது...

விடுமுறை நாட்களை வீட்டாருடன் சேர்ந்தே விரும்பிக் கழிக்கிற, பெரம் பலூர் மாவட்டத்தினருக்குப் பெரு மகிழ்வைத் தருகிற, சுகமானதொரு சுற்றுலாத் தலம் இதுவாகும். விட லைகளுக்குக் கடலைப்போல காட்சி தரும் கல்லாறு அணைக்கட்டு...!!!

-ஜே.வில்சன், பெரம்பலூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக