Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 26 ஆகஸ்ட், 2015

மக்கள் தொகை கணக்கெடுப்பு உண்மையும் ,பொய்யும் ....


முஸ்லிம் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரித்திருப்பதாகக் காலையில் பத்திரிகைகளில் செய்தி வந்தது .சில மணி நேரங்களுக்கு முன் 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த விரிவான ஆய்வு உண்மை நிலையை விளக்குகிறது. காலைப் பத்திரிகைச் செய்திகள் எப்படித் திரிக்கப்பட்டவை என்பதை விரிவான படங்களுடன் இது விளக்குகிறது.
உண்மை நிலை இதுதான்:
1. முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் குறைந்து கொண்டே வருகிறது.
2. இந்து மக்கள்தொகை பெருக்கவீதம் குறைவதைக் காட்டிலும் வேகமாக முஸ்லிம் மக்கள் தொகைப் பெருக்க வீதம் குறைகிறது
3..இன்னும் கூட முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பு வீதம்தான் இந்து மக்கள் தொகை அதிகரிப்பு வீதத்தைக் காட்டிலும் அதிகம் என்றாலும் அந்த இடைவெளி படிப்படியாகக் குறைந்து கொண்டே போவதுதான் உண்மை. முஸ்லி்ம் மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் இந்து மக்கள் தொகை அதிகரிப்பு வீதத்தைக் காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதற்குக் காரணம் முஸ்லிம்கள் மத்தியில் படித்தவர்களின் எண்ணிக்கையும், வசதி மிக்கவர்களின் எண்ணிக்கையும் குறைவு என்பதுதான். இந்தியாவில் தலித்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார அடிப்படைகளில் பின் தங்கியுள்ளதைச் சச்சார் அறிக்கை நிறுவியுள்ளது.
4. இன்று முஸ்லிம்களின் மத்தியிலும் மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் குறைந்து வருவதற்கான காரணம் அவர்கள் மத்தியில் 90களுக்குப் பின் கல்வியில் ஆர்வம் மிகுந்துள்ளதே.
4. இரண்டு மதங்களை ஒப்பிடுவதற்குப் பதிலாக ஒரே மதத்தில் உள்ள மேல் மற்றும் கீழ்த் தட்டில் உள்ள சாதிகளை ஒப்பிட்டாலும் இப்படித்தான் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். படிப்பாலும் செல்வத்தாலும் உயர்ந்த உயர் சாதியினர் மத்தியில் மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் குறைவாக உள்ளதையும், அடித்தள மக்கள் மத்தியில் இது அதிகமாக உள்ளதையும் காணலாம்.
5.மதமாற்றத்தால் முஸ்லிம்கள் மத்தியில் மக்கள் தொகைப் பெருக்கம் நிகழ்கிறது எனச் சொல்வது அபத்தம். இன்று சுமார் 10 மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் அமுலில் உள்ளது. எங்காவது இப்படி மத மாற்றம் நடந்தால் அது கடும் பிரச்சினையாக்கப் படுகிறது.
7. அப்படியே மத மாற்றம் நடக்கிறது என இந்துத்துவ சக்திகள் சொல்வார்களேயானால் ஏன் அப்படி நடக்கிறது, ஏன் இந்து மதத்தை விட்டு மக்கள் வெளியேறுகின்றனர் என்பதைச் சொல்பவர்கள் சிந்திக்க வேண்டும்.
8. வங்க தேசம் முதலானவற்றிலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவுகின்றனர் என பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்சினர் சொல்வதும் அப்பட்டமான பொய். எல்லைகளில் கடும் பாதுகாப்பும், இரட்டை முள் வேலிகளும், ஒளி பாய்ச்சும் வீளக்குகளும் இன்று பொருத்தப்பட்டுள்ளன.
9. முஸ்லிம் மக்கள்தொகைப் பெருக்க வீதம் இந்துக்களைக்காட்டிலும் அதிகம் எனச் சொல்வது அப்பட்டமான பொய். இத்தகைய பிரச்சாரம் விஷமத் தனமானது மட்டுமல்ல அயோக்கியத் தனமானதும் கூட
http://www.thehindu.com/…/census-2011-da…/article7579161.ece
MUSLIM POPULATION GROWTH SLOWS
Rukmani S V Singh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக