Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்! – ஹர்திக் படேல்

அகமதாபாத் : இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் படேல் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் இணைக்க வேண்டும். இரண்டில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என ஹர்திக் படேல் கூறியுள்ளார்
எங்கள் சமூகத்தினர் நன்கு படித்து 80%, 90% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்கூட அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற ஒரு நடைமுறை இருப்பதால்தான் எங்களுக்கு இந்த அவலம் நேர்கிறது.

நல்ல மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காததால் நாங்கள் எங்கள் குடும்ப தொழிலையே மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்படுகிறோம். வேலைவாய்ப்புகள் பட்டியல் இனத்தவரால் பறித்துக் கொள்ளப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தவருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் பொதுப் பிரிவிலும் வேலை பெறுகின்றனர்.
எனவே, இந்த அரசு ஒன்று இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் படேல் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் இணைக்க வேண்டும். இரண்டில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.
இந்த நாட்டின் அரசியலையும் இடஒதுக்கீடு போன்ற சில கட்டமைப்புகளையும் மாற்றியமைப்பதே என் லட்சியம். வெறும் அரசியல் செய்வதற்காக நான் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. என்னிடம் இருப்பது ரிமோட் கன்ட்ரோல் மட்டுமே. அதை நான் பற்றிக்கொண்டு என் முயற்சிகளை முன்னெடுத்துச் மாற்றத்துக்கு வித்திடுவேன். சர்தார் படேல், பால் தாக்கரே வழியே என் வழியும்.
இவரை சங்கபரிவார இயக்கங்கள் இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கட்டாய மத மாற்றத்தை அயோத்தியில் நிகழ்த்தி, அனைத்து கட்சியினரும் மத மாற்ற சட்டத்தை ஏற்றுக் கொள்ள செய்யப்பட நாடகம் போல இது இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பரிவார்களால் நடத்தப்படும் நாடகம் என விமர்சனம் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக