Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 8 ஆகஸ்ட், 2015

“மதுபான அரசியல்” – தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா? இதன் பின்னணியில் என்ன அரசியல் இருக்கிறது??

மக்களின் நல்வாழ்வின் மீது அக்கறை காட்டாத ஆளும் கட்சி, மக்களின் கோபத்தையும் ஆளும் அரசிற்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளையும் தமக்கு சாதகமாக்கி அதிகாரத்தை மீண்டும் பெற துடிக்கும் திமுக , இவைகளை புரியாமல் ஒருவித மயக்க நிலையில் இருக்கும் எதிர்கட்சி, மக்களின் மீது அக்கறை கொண்ட ஏனைய மாற்று அரசியல் கட்சிகளின் மதுவுக்கு மதுவிற்கு எதிரான நீண்ட போராட்டங்கள் என தமிழகத்தில் தேர்தல் நெருங்க இன்னும் குறுகிய காலமே இருப்பதால் மது அரசியலின் உண்மை நிலையென்ன என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்,

வேத காலத்தில் உயர்தட்டு பார்பனர்கள் மற்றும் அரசர்களின் அன்றாட தேவையாய் இருந்த சோமபானம் காலனிய இந்தியாவின் கலாச்சார முதிர்ச்சியின் தொடர்சியாய் ஆங்கிலேயர்கள் மற்றும் உயர்தர சீமான்களின் கேளிக்கை பொழுதுகளை ஆக்கிரமித்த மது ,சுதந்திர இந்தியாவில் ஆங்கிலோ சுதேசிகளின் கலாச்சார அடையாளமாய் முன்னிலைபடுத்தபட்டது, அன்றைய ஊடகங்களான நாடகம் சினிமா போன்றவைகள் இந்த உயர்தட்டு சீமான்களின் வாழ்வையே கருவாய் கொண்டு இயற்றபட்டதால் நாடகங்களிலும் சினிமாவிலும் மது தவிர்க்க முடியாமல் இடம் பெற தமது ஆதர்சநாயகனின் நடை உடை பாவனைகளால் கவரப்பட்ட சாமானிய மக்களோ கள்ளுக்கடைகளை துறந்து சீம சாராயத்தை தேட தொடங்கினர்,
உயர்தர மக்களிடம் விற்பனையான மதுவினால் அரசிற்கு கிடைத்த வருமானமும் ,உழைக்கும் மக்களின் சீமை சாராய மோகமும் ,அந்த சீமை சாராயத்தை விலைகொடுத்து வாங்க இயலாத உழைக்கும் மக்களை குறி வைத்த கள்ளச்சாராய சந்தையாக பெருக்கெடுத்து. 1983 தமிழகத்தில் அதிகமான கள்ளச்சாராய மரணங்களால் அன்றைய முதல்வரான mgr நல்ல சாராயத்தை அரசே காய்ச்சி விற்பதற்கும் அந்த சாராயத்தை அரசே சந்தை படுத்துவதற்கும் என இரண்டு நிறுவனங்களை தமிழக அரசின் சார்பாக ந நிர்மாணித்தார்.
சாராயம் அரசே காய்ச்சுவதற்காக டாஸ்கோ Tamil Nadu Spirit Corporation நிறுவனமும் இந்த நிறுவனத்தின் உற்பத்தியை சந்தை படுத்துவதற்கு என்று டாஸ்மாக் Tamil Nadu State Marketing Corporation என்ற நிறுவனங்கள் தொடங்கபட்டன.
1987 ஆம் ஆண்டு மதுபான உற்பத்தி நிறுவனமான டாஸ்கோவில், தனியார் நிறுவனங்களும் மதுபான உற்பத்தியில் அனுமதிக்க பட்டது ,அதேநேரத்தில் கூடுதலான மது உற்பத்தியை சந்தை படுத்தும் வகையில் அந்த விற்பனைகளை முறைபடுத உயர் தர விடுதிகளில் (star hotels) உரிய அனுமதி பெற்று மதுபான மையங்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது,
முதலில் இவ்வாறு ஜனரஞ்சக படுத்தப்பட்ட மதுவிற்பனை அரசியல் செல்வாக்கு உடையவர்கள் அவர்களின் பினாமிகள், போன்றவர்கள் உரிமம் பெற்று விரும்பிய வகையில் மாநிலத்தின் அணைத்து பகுதிகளிலும் மது விற்பனைக்கு திறந்து விடப்பட்டது,
1996 ஜெயாவின் பதவி பறிபோய் எண்ணற்ற ஊழல் குற்றசாடுகளால் வழக்குகளை ஜெயா சந்தித்து கொண்டிருந்த போது மறுமுனையில் மாநிலத்தை ஆண்ட திராவிட முன்னேற்ற கழகத்தினர் தமிழகத்தில் மதுபான விற்பனையை தமது கட்டுபாட்டில் கொண்டுவந்தனர் 2001 அதிகாரத்தை கைப்பற்றிய ஜெயா தன்னை வழக்குகளால் இழுத்தடித திமுகவை பழிதீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார், அதன் ஒருபகுதியாக மாநிலத்தின் அனைத்து பார்களும் அரசே ஏற்று நடத்தும் வகையில் ( monopoly liquar market) டாஸ்மார்க்கின் நேரடி விற்பனை மையங்கள் மாநிலம் முழுக்க திறக்க பட்டன, டாஸ்மார்க்கில் விற்பனை ஆகும் மதுவினை டாஸ்கோ உற்பதிசெயும்,சில்லறை விற்பனை மட்டுமே அரசு செய்யும் , டாஸ்மார்க் தனக்கு தேவையான மதுவினை கோட்டா அடிப்படையில் டாஸ்கோ நிறுவனங்களுக்கு ஆர்டர் தரும் டாஸ்கோ நிறுவனங்களோ திமுக மற்றும் அதிமுக தலைமைக்கு நெருங்கிய நபர்களால் நடத்த படுகிறது ,மதுவிலக்கு அமல் படுத்தபட்டால் நேரடியாக பாதிப்பது இந்த அரசியல்வாதிகள்தான் தலைமைகள் தான்
மறுமுனையில் மாநிலத்தின் மது விற்பனை அதனால் வரும் லாபம் அசுர வளர்ச்சியை கண்டது. மாநில அரசின் அறிக்கையின் படி தமிழக வருவாயில் டாஸ்மாக் 2002-03-3,800 கோடியில் தொடங்கிய வருமானம் வருடத்திற்கு 2௦ % வளர்ச்சியில் பயணித்து 2012-13- Rs 21,000 கோடியாக வளர்ச்சி அடைந்து நிற்கிறது. இதில் கிடைக்கும் லாபத்தில் இருந்தே திமுக மற்றும் அதிமுக அரசுகள் இலவச தொலைகாட்சி ,மின்விசிறி போன்றவைகளை வழங்குகின்ற இலவச அறிவுப்புகளை வழங்குகிறது.
மதுபான அரசியல்
பெருக்கெடுத்து ஓடும் மதுபான விற்பனையலே தமிழக அரசு வருவாய் சீராக செயல் படுவதாக பிம்பம் கட்டமைக்க படுகிறது,அந்த பிம்பம் உண்மையா?,ஏன் அப்படி பட்ட பிம்பம் கட்டமைக்க படுகிறது என்பதை அறிவதற்கு முன்னால் தமிழகத்தில் நடக்கும் மதுபான அரசியல் குறித்து அறிதல் அவசியம் ஆகிறது.
எம்ஜிஆர் காலத்தில் மொத்தம் ஐந்து நிறுவனங்கள் மட்டுமே டாஸ்மாக் மதுவை உற்பத்தி செய்ய அனுமதிக்கபட்டது. இன்று பனிரெண்டு நிறுவனங்கள் அனுமதிக்க படுகிறது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் தமிழகத்தை ஆளும் கட்சிகள் மாரிமாரி வரும்பொழுதும் குறுப்பிட்ட ஆளும்கட்சி தலைமைக்கு நெருக்கமான நிறுவனங்கள் லாபம் பார்க்கின்றன.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மதுபான உற்பத்தியில் கொடிகட்டி பரந்த United Spirits Ltd USL (இது விஜய் மல்யாவிற்கு சொந்தமான நிரறுவணம்) தமிழகத்தின் 20 சதவிகித மதுபான சந்தையை தன்கட்டுபாட்டில் வைத்திருந்தது அண்ணா திராவிட முனேற்ற கழக ஆட்சி அமைத்தபின் திராவிட முனேற்ற கழக தலைமைக்கு நெருக்கமான United Spirits Ltd சந்தை சரிந்து அண்ணாதிராவிட முன்னேற்ற கழக தலைமைக்கு நெருக்கமான Midas Golden’s gain (இது சசிகலா குடும்பத்து மதுபான ஆளை,இது 2002 நிர்மானிக்க பட்டது அதாவது ஜெயலலிதா டாஸ்மாக் அரசாணையை உயர்த்தி பிடித்த உடன் ,இதில் ஜெயலலிதாவிற்கு பங்கு இருக்கிறது சில காலம் துக்ளக் ஆசிரியர் சோ இந்த நிறுவனத்திற்கு தலைமை அதிகாரியாக பணிபுரிந்தார்) நிருவனத்தின் சந்தை மதிப்பு 7 % இருந்து 16 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது. அதேவேளையில் சசிகலா ஜெயலலிதா சச்சரவின் காரணமாக ஜெயா சசிக்கு இடையில் இடைவெளியால் இந்த ஆளை 2011 ஜெயலலிதாவின் முழு கட்டுபாட்டில் வந்தது, இந்தகாலகட்டத்தில் United Spirits Ltd சந்தை மதிப்பு மீண்டும் 20 சதவிகிதத்தை எட்டியது பின்பு டாஸ்மாக் மூலம் மிடாஸ் ஆலைக்கு அதிக ஆர்டர் தர தேசிய அளவில் பினடைவை சந்தித்து கொண்டிருந்த விஜய் மல்லையாவின் United Spirits Ltd தமிழகத்தில் எழும்பவே முடியாத அளவு வீழ்ந்து போனது,
இந்த நேரத்தில் கருணாநிதியின் கலைஞர் தொலைகாட்சியின் மேனேஜிங் டைரக்டர் சரத்குமார் பெயரில் SNJ Distilleries and AM Distilleries மதுபான ஆலைக்கு உரிமம் பெறப்பட்டது . இவ்வாறு மாறி மாறி இரு இயக்கங்களும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் வாழ்வை சீரழித்து லாபம் பார்த்து கொண்டிருக்கிறது அதே வேளையில் தமக்கு போட்டியான நிறுவனங்களுக்கு ஆர்டர் தருவதிலும். கொள்முதல் செய்த பொருட்களுக்கு காசோலை துரிதமாக வழங்காமல் தாமத படுத்தி அதிகார பலத்தின் துணைகொண்டு போட்டியாளர்களை சிரதன்மை இலக்க செய்கிறது ஆளும் வர்க்கம்.

மதுவிலக்கு சாத்தியமா:
ஒரு ஆண்டுக்கு 26000 கோடி லாபம் எனில் ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் ஒரு லட்சத்தி இருபது ஆயிரம் கோடி வரும் ஒரு துறையை எந்த அரசு இழக்க, ஒருவேளை அரசிற்கு நஷ்டம் வந்தாலும் தமக்கு வரும் லாபத்தை எந்த ஒரு தனி நபரும் இழக்க தயார் ஆவார்களா, என்ற பின்புலத்துடனையே கருணாநிதியின் மது விளக்கு அறிக்கையை நாம் காண வேண்டிஉள்ளது,
கருணாநிதியின் அறிக்கையானது தேர்தல் நெருங்கும் நேரத்தில் மதுவிற்கு எதிரான கோபத்தை தமக்கு ஆதரவாக அறுவடை செய்வதற்காக என்பது வெளிப்படையான உண்மையே, மறுமுனையில் மதுவிலக்கு சாத்தியமா என்றால் சாத்தியம் என்பதே பட்டவர்த்தனமான உண்மை.
எதனால் மதுவில் இருந்து இவ்வளவு லாபம் என்றால் மது விற்பனையின் சந்தை சூழ்நிலையே, liquer market in tamil nadu is monopoli market
தமிழகத்தின் மக்கள் தொகை 72,147,030
ஆண்கள் எண்ணிக்கை 36,137,975
பெண்கள் எண்ணிக்கை 36,009,055

இவ்வளவு பெரிய மக்கள் தொகையில் சொற்பமான சதவிகித மக்கள் மட்டுமே பயன்படுத்தும் மதுவினால் இந்த வருமானம் எனில் 100 சதவிகித மக்களும் பயன்படுத்தும் பொருட்களை தேர்ந்துடுத்து தமிழக அரசு டாஸ்மாக் போல் மோனோபோலியாக எடுத்து விற்பனை செய்யும் பட்சத்தில் மதுவினால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுகட்ட முடியும்.
- அப்பாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக