Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 26 ஆகஸ்ட், 2015

திருமன பதிவு சட்டமும் அழைக்களிக்கப்பட்ட முஸ்லிம்களும்


திருமன பதிவு சட்டமும் அழைக்களிக்கப்பட்ட முஸ்லிம்களும்


கட்டாய திருமன பதிவு சட்டம் 2005 ல் அமல்படுத்தப்பட்டது இதன்படி நம் ஜமத்தில் அல்லது முஹல்லாவில் நடத்தி பதிவு செய்யப்படும் திருமனத்தை அரசாங்க கெஜட்டில் பதிவு செய்வது அவசியம் ஆனால் இதை மிகவும் கடினமான ஒரு செயலாக ஏற்படுத்திவிட்டார்கள் இதில் சென்னை போன்ற இடங்களில் தலைமை காஜி கடிதம் வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்துவதும் அங்கே தலைமை காஜி கடிதம்
கொடுக்காமல் அழைக்களிப்பதும் வாடிக்கையாகிவிட்டது இது சம்மந்தமான புகார்கள்
தஹ்ஹித்ஜமாத் தலைமைக்கு வந்த வன்னம் இருந்தது. இதற்க்கு ஒரு முடிவுகட்ட முதல் கட்டமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் திருமன பதிவு
சம்மந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டது, இதற்க்கு வந்த பதில் மிகவும்
ஆச்சரியமாக உள்ளது மாப்பிள்ளை மற்றும் பெண்னின் புகைப்படம் புகைப்படம் உள்ள அடையாள ஆவனம் எங்கே திருமனம் பதிவு செய்யப்பட்டதோ அந்த பதிவேடு
அந்த திருமனத்தை நடத்தி வைத்த ஜமாத் அல்லது முஹல்லாவின் கடிதம்
இவை அனைதையும் கொடுத்தால்  22 நாட்களுக்குள் பதிவு செய்து கொடுக்க வேண்டும்.
திருமனம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் அதன் பிறகு 60 நாட்கள் 50 ரூபாய் அபராதம்கட்டி பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆவனங்களை எடுத்து
கொண்டு தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு
கொண்டபோது இதுவரை நடந்ததை விட்டு விடுங்கள் இனிமேல் இந்த வழிமுறைப்படி பதிவு செய்கிறோம் என்று ஏற்றுக்கொண்டனர். அடுத்ததாக திருமனத்தை பதிவு
செய்ய யார் யார் அலுவலகத்திற்க்கு வரவேண்டும்? என்ற கேள்விக்கு மாப்பிள்ளை அல்லது மாப்பிள்ளையின் தந்தை அல்லது உறவினர் யாராவது ஒருத்தர்
ஆவனக்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று பதில் வந்து உள்ளது
இதை அதிகாரிகளிடம் நமது நிர்வாகி கேட்ட போது அது சரிதான் இனி இதே போல நடந்து கொள்கிறோம் என்று பதில் வந்ததது இன்னும் ஒருபடி மேலேபோய்
ஆன்லைனில் கூட பதிவு செய்யலாம் என்று சட்டத்தில் உள்ளதாக தகவல் வந்துள்ளது
முஹல்லா தலைவர் வரவேண்டும்!! சாட்சி வரவேண்டும்!! அவன் வா இவன் வா!!
என்று இழுத்தடித்தது எல்லாம் சட்டத்துக்கு புறம்பானது என்பது ஆவனங்களின் அடிப்படையில் உறுதியாகி இருக்கிரது போலீசாக இருக்கட்டும் ரிஜிஸ்டராக
இருக்கட்டும் சட்டம் நமக்கு தெறியாவிட்டால் தலையில் ஏறிவிடுகிறார்கள்
சட்டத்தை தெறிந்துகொண்டு கேள்வி கேட்டால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுகிறார்கள்
விழிப்புடன் இருப்போம் தெறியாத மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்துவோம்.
நன்றி
தகவல் உதவி:
சேப்பாக்கம் அப்துல்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத்
தலைமையகம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக