Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

புரட்சிகர எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொலை! – பின்னணியில் இந்துத்துவா?

ஹம்பி : ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கி இன்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாண் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை 2 மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். அதில் ஒருவன் வெளியிலேயே நிற்க இன்னொருவன் அவரது வீட்டின் கதவைத் தட்டியுள்ளான். தெரிந்தவர்கள் யாரோ வந்திருப்பதாக நினைத்து கதவைத் திறந்த அவரை, சுட்டுக் கொன்று விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். இதனால், இந்துத்துவவாதிகளின் தனிப்பட்ட எதிரியாக மாறியிருந்தார். எனவே, இந்தக் கொலையின் பின்னணியில் இந்துத்துவவாதிகள் இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். அண்மையில், அவரது வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் அமைப்பினர் அவரது வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
2006-ம் ஆண்டு ‘மார்கா 4’ என்ற இவரது 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்புக்காக, இவருக்கு தேசிய சாகித்ய அகாடமி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடகாவின் மிகச்சிறந்த கல்வெட்டு எழுத்தாளரும் ஆவார். இவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு சமூக ஆர்வலர்களும் முற்போக்கு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக