Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 19 ஆகஸ்ட், 2015

இந்தியாவை இறுக்கும் தூக்குக் கயிறுகள்! – கீரனூர் ஷாநவாஸ்

அவருடைய கழுத்தில் தூக்குக் கயிறு ஏறும் முன் தன் மகள் சுபைதாவுடன் (21) பேச வேண்டுமென்பது கடைசி ஆசை. மரணத்தின் முன் பேசும் பொழுதே தம் மகளிடமும் பேசினார் கரைபுரண்ட கண்ணீரோடு: ‘மகளே… மரணத்தின் மேடையில் நின்று கொண்டு சொல்கிறேன். நான் உன்னையும் நம் குடும்பத்தையும் கொலைப் பழியுடன் விட்டுச் செல்லவில்லை. நான் குற்றமற்றவன். நீ திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். நான் விடைபெறுகிறேன். என்னை மன்னித்து விடு” என்று தம் மனதில் இருந்த கனத்த அந்தக் கண்ணீரின் பாரம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று.

53 வயதான யாகூப் மேமன் இப்போது இல்லை. மும்பையில் 13 இடங்களில் தொடர்வெடிகுண்டு வெடித்ததன் மூலம் 257 அப்பாவி உயிர்கள் பலியாகின. மேலும் 700க்கும் மேற்பட்டோர் படுகாயமாக தன் உடல் உறுப்புகளை இழந்தனர். தேசத்தின் பொருளாதார தலைநகர் மும்பையில் இந்த தொடர் குண்டுவெடிப்பு பல பேரின் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டது.
1994-ம் ஆண்டில் யாகூப் மேமன் கைது என்றும், சரணடைந்தார் என்றும் சி.பி.ஐ. இருவேறு கொணங்களில் குழப்பினாலும் அவரின் தண்டனையில் தெரிகிறது அவர் சரணடைந்தார் என்று.
2007-ம் ஆண்டில் தடா நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது. இந்தியாவின் குடியரசுத் தலைவரும் யாகூபின் கருணை மனுவை நிராகரித்து தூக்கிலிடவும் பட்டார் குற்றமற்ற நிரபராதி யாகூப் மேமன்.
இந்தக் கொலைக்கு எதிராக பல முழக்கங்கள், போராட்டங்கள் வாயிலாக சமூக இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்பினாலும் அவை அரசின் செவியிலோ, நீதிமன்றத்தின் செவியிலோ விழவில்லை.
‘மரண தண்டனை எதிர்ப்பு’ என்ற பரந்த கோரிக்கையின் கீழ் அனைத்து குரல்களையும் தாண்டி யாகூப் வழக்கை குறிப்பாக அணுகிய குரல்கள் கவனிக்க தகுந்தவை. இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவராக இருந்த பி. ராமனின் குரல். 2007-ல் யாகூபிற்கு தடா நீதிமன்றம் தண்டனை விதித்த சமயத்தில் ராமன் ரெடிஃப் (rediff) இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
பிறகு அவரே இப்போது வெளியிட வேண்டாம் என்று குறிப்பும் எழுதியுள்ளார். 2013-ல் ராமன் இறந்து விட்ட நிலையில் அவரது உறவினர்கள் ஒப்புதலுடன் அக்கட்டுரையை யாகூப் தூக்கிற்கு முன்பாக வெளியிட்டது ரெடிஃப் இணையதளம்.
“மேமன் சகோதரர்களும், மும்பை குண்டுவெடிப்பும்” என்ற தலைப்பை கொண்ட அந்தக் கட்டுரையில் மும்பை தொடர் குண்டுவெடிப்பில் யாகூப் சகோதரர்களின் தொடர்பை அவர் மறுக்கவில்லை. மாறாக, அவர் யாகூப் மீது வேறொரு கொணத்தில் பிரிந்து செல்கிறார். ‘பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ கண்காணிப்பின் நடவடிக்கைகளில் கடும் அதிருப்தியை கொண்ட யாகூப் மேமன் மும்பை காவல்துறையிடம் சரணடைய முடிவெடுத்தார். நண்பர்கள் மற்றும் தன் வழக்கறிஞர்களை சந்தித்து தன் முடிவை குறித்து ஆலோசனை கேட்க காட்மண்டு வருகிறார். அவர்கள் சரணடைய வேண்டாம். உனக்கு நீதி கிடைக்காது என்றும், நீ கராச்சிக்கு திரும்பி விடு என்றும் எச்சரித்தனர். அதன் படி கராச்சிக்கு செல்ல விமானம் ஏறும் முன்பாக நேபாள காவல்துறை சந்தேகத்தின் பேயரில் கைது செய்யப்பட்டார். பின்பு சி.பி.ஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்த யாகூப் தன் குடும்பத்தினரை வரவழைத்து இந்தியாவில் சரணடைந்தார். இதன் பின்னணியில் யாகூபின் மரண தண்டனையை மீள்பரிசீலிக்கலாம்” என்றார் ராமன்.
குற்றமற்ற யாகூப் மேமன் தன் விளக்கங்களையும், வாதங்களையும் ஏற்காத இந்திய அரசிடம் ‘டைகர் மேமனின் சகோதரனாக பிறந்ததற்காக என்னை தூக்கிலிடுங்கள். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் குண்டுவெடிப்பின் சதிகாரனாக தூக்கிலிடுவதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்’ என்று கூக்குரலிட்டார் யாகூப்.
அனைத்தும் எடுபடாமல் அவர் தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் மீதும், நீதி அமைப்பின் மீதும் யாகூப் மேமன் வைத்த நம்பிக்கைதான்அவர் இழைத்த மிகப் பெரிய தவறு.
கண்ணியமாகவும்,நேர்மையாகவும் நடந்த கொண்ட யாகூபிற்கு இந்திய நீதி அமைப்பு தூக்குக் கயிற்றை பரிசாக வழங்கியது.
யாகூப் மேமனுக்கு தூக்கை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.ஆர். தவே, “பாவம் செய்தவர்களை அரசன் தண்டிக்க வேண்டும். இல்லையேல் அந்தப் பாவம் அரசனை தண்டித்து விடும்” என்று மநு நீதி வாக்கியத்தை மேற்கோள் காட்டியதுடன், “குண்டு வைத்தவர்கள் அம்புகள்தான். யாகூப் மேனன் போன்ற எய்தவர்களை தண்டிக்காமல் விட முடியாது” என்றும் குறிப்பிட்டார்.
1993-ல் மும்பை தொடர் குண்டுவெடிப்பு என்பது தனித்த சம்பவமல்ல. அது பாபரி மஸ்ஜித் இடிப்பிலிருந்து தொடங்குகிறது. 1992-ல் டிசம்பர் 6 அன்று பாரதீய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க் பரிவார் பயங்கரவாத கும்பலால் திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டதுதான் இந்த பாபரி மஸ்ஜித் இடிப்பு.
அதன் பிறகு நாடே கலவரமானது. மும்பையில் நடந்த கலவரத்தில் 9000 கோடி மதிப்புள்ள சொத்துகள் இந்துத்துவ ஃபாசிச சக்திகளால் சூறையாடப்பட்டது. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. அதில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் என்றால் அது மிகையாகாது.
மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை “நான்தான் தொடங்கி வைத்தேன்” என்றும், “அறிவித்த தாக்குதல்கள் முடிவுக்கும் வந்தன” என்றும் தன் பத்திரிகையின் வாயிலாக பால்தாக்கரே வெளிப்படையாகவே எழுதினார். கலவரத்தை எய்தவரே யாரென்றும் எழுதியுள்ளார். ஆனால் பால்தாக்கரே மரணம் வரை அவருக்கு இந்திய நீதி அமைப்பு பாதுகாப்புதான் வழங்கியது; தண்டனையை அல்ல.
2002-ல் குஜராத்தில் நடந்த வரலாறு காணாத அளவில் முஸ்லிம்களை திட்டமிட்ட படுகொலைக்கு அம்பு எய்தவர் யார்…? அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன…?
2006-ல் மஹாராஷ்ட்ரா மாலேகானில் ஒரு மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை தொழுகை முடியும் தறுவாயில் வெடித்த குண்டு 38 உயிர்களை காவு வாங்கியது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் 2008-ல் மீண்டும் மாலேகானில் வெடித்த குண்டில் 5 உயிர்கள் பலியாகின.
இந்தச் சதி வேலைகளின் பின்னணியில் பிரக்யாசிங், தயானந்த பாண்டே போன்ற சாமியார்களும், அசீமானந்தா என்கிற RSS முழுநேர ஊழியரும் கைது செய்யப்பட்டனர்.
அசீமானந்தா என்ற RSS ஊழியர் தொடர் குண்டுவெடிப்புக்கும் RSSக்கும் உள்ள தொடர்பை புட்டு புட்டு வைத்தார்.
2007-ல் டெல்லி லாகூரில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்த குண்டால் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சதியின் பின்னணியை RSSன் முழுநேர ஊழியர் சுனில் ஜோஷி போலீஸில் அம்பலப்படுத்த சாத்தியம் உள்ளது என்ற நிலையில் அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சுனிலை கொன்றதும் RSS பயங்கரவாத கும்பல்தான் என்பதையும் அசீமானந்தா வாக்குமூலமாக சொன்னார்.
இருப்பினும் இந்தக் குற்றங்களுக்கு பின்னணியிலுள்ள யாரும் தண்டிக்கப்படவில்லை. மும்பை தொடர் குண்டுவெடிப்பு மட்டுமல்ல; மாலேகான் மஸ்ஜிதில் பலியானவர்களும் அப்பாவிகள்தான். அவர்களுக்கான நீதியை யார் வழங்குவது?
அஃப்ஸல் குரு, அஜ்மல் கசாப், யாகூப் மேமன் போன்றோருக்கு மட்டும்தான் இந்த இந்திய அரசாங்கமும், நீதி அமைப்பும் தீர்ப்பு கூறுமா…? இவர்களுக்கு மட்டும்தான் கூட்டு மனசாட்சி கூடுமா…? இவர்களது கழுத்துகளை மட்டும்தான் இந்தியாவின் தூக்குக் கயிறுகள் இறுக்குமா…?
ஃபாசிச சங்க் பரிவார் பயங்கரவாத கும்பலுக்கெதிராக இந்த நீதி அமைப்பும், அரசாங்கமும் எங்கே சென்றன…? யார் இவர்களுக்கு தண்டனை வழங்குவது…? யார் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது…?
கீரனூர் ஷாநவாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக