சனி, 21 ஜூலை, 2012
எல்லை பலகை புதிதாக வைக்கப்பட்டுள்ளது
நமதூர் எல்லை பலகை புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இதில் தனது கட்சி வண்ணத்தில் (து.)தலைவர் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கருத்தும் இடம்பெற்றுள்ளது
நடப்பவைகள் எல்லாம் நல்லவையாக இருக்கும்"
மேற்குபக்கம் எல்லை பலகை
வைத்து சுமார் 20 நாட்கள் ஆகும் ஆனால் இதுவரை கிழக்கு பக்கம் எல்லைபலகை வைக்கவில்லை!அந்தபலகை பஞ்சாயத் அலுவலகத்தில் வெளியே உள்ளது. எதுவரை வைப்பது என்பது புரியாமலா ? அல்லது சில சர்ச்சை காரணத்தினாலா ?
என்பது புரியாமல் உள்ளது.
நமது நிருபர்
வெள்ளி, 20 ஜூலை, 2012
"நேரமில்லை" – ஓர் இஸ்லாமியப் பார்வை!
நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!
நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூஷன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது.
ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை!
அலட்சியம் செய்யப்படும் அல்லாஹ்வின் கட்டளைகள்....
எம்மால் அலட்சியப்படுத்தப்படும் திருமறை வசனங்களிலிருந்து இன்று உங்களுக்கு நான் தெளிவூட்ட நினைப்பது ஸூரத்துல் ஜும்ஆவின் 9-11 வரையுள்ள வசனங்களின் முக்கியத்துவம் பற்றியதாகும்.
"ஈமான் கொண்டவர்களே! வெள்ளிக் கிழமைகளில் தொழுகைக்காக நிங்கள் அழைக்கப்பட்டால் உங்கள் வியாபாரத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பால் விரையுங்கள். நிங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள். (நபியே) ஒரு வியாபாரத்தையோ அல்லது வேடிக்கையையோ அவர்கள் பார்த்துவிட்டால் அதனளவில் சென்று விடுகின்றனர்.
சிதறிக் கிடக்கும் பெரும்படை....!
பொதுக் கருத்தில் ஒன்றுபடவே முடியாது என்ற கருத்து இருக்குமானால் ' நீங்கள் பிரிந்து விடாதீர்கள்' என இறைவன் சொல்வது ஏன்? 'உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவான கருத்தின் பால் உடன் படுவோம் வாருங்கள்' யூத கிறிஸ்தவர்களையே அல்லாஹ் அழைக்க சொல்வது ஏன்? யூத கிறிஸ்தவர்களோடு பொதுவான கருத்தில் ஒன்று பட முடியும் என்றால் பொதுவான கருத்தில் முஸ்லிம்களாகிய நாம் ஏன் ஒன்று பட முடியாது!
அல்லாஹ்வை நம்பாத மறுமையை நம்பாத அரசியல் கட்சிகளான, இரு வேறு துருவங்களான கம்யுனிஸ்ட் ,பாரதிய ஜனதா பெட்ரோல் விலை விசயத்தில் ஒன்றிணையும் போது, பல்வேறு கருத்துடைய தமிழக கட்சிகள் இலங்கை தமிழர் விசயத்திலும், முல்லைப் பெரியாறு விசயத்திலும் ஒன்றிணைய முடியும் என்றால் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பும் முஸ்லிம்களாகிய நாம் ஏன் ஒன்று பட முடியாது? சிந்தியுங்கள்! செயல் படுங்கள! ஒன்றுபடுங்கள்.
நன்றி: onlinesengiskhan
நோன்பாளிகள் கவனத்திற்கு..
நோன்பு
- “மறுமைக்கு மட்டும்ல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்”
- “வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு”
- “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்”
நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த பத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிரு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.
வியாழன், 19 ஜூலை, 2012
நோன்பின் சட்டங்கள்!
உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. [அல் குர் ஆன் 2:184]
நோன்பு என்பது இஸ்லாமிய மாளிகையை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாக விளங்கும் நோன்பை முஸ்லிம் சமுதாயம் சரியான முறையில் விளங்கிப் பேணிக் கொள்வது இஸ்லாத்தை நிலைநாட்டுவதும், ஈமானை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் அருட்கொடையாகும்.
வளைகுடாவில் ரமதான் துவக்கம்!
20.07.2012 முதல் ரமதான் துவங்குவதாக ஸவுதி, யு.ஏ.ஈ, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2: 182)
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2: 184)
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2: 184)
பேரூராட்சியில் நமது உறுப்பினர்கள்...
நமதூர் பேரூராட்சியில் சாதாரண கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சம்சுல் பஜ்ரியா முஹம்மது தஸ்லீம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவ லர் பரமேஸ்வரி, துணைத்தலைவர் முகமது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் மீராமொய்தீன், ஜாகீர் உசேன், ராணி, தாஜ்தீன், மெஹருன்னிசா, சுதாதேவி, ஷேக்தாவூத், பதுருன்னிசா, நூருல்ஹூதா, ஜூனாபாபு, ரபியதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நம்பாதீர்கள் சகோதரர்களே!
மானம்கெட்ட அரசியல்வாதிகளையும் பொட்டத்தனம் கொண்ட மீடியாக்களையும் நம்பாதீர்கள் சகோதரர்களே!

ஷரியத் பாதுகாப்புக்கு வேண்டி நாம் கூடியது சுமார் 6000 துக்கு மேல் இருக்கும். மேடையில் இருப்பவர்கள் அறிவித்தது சுமார் 10000 பேர்கள்.
நாம் மேடையில் வைத்த கோரிக்கையை பற்றி இதுவரை ஒரு அரசியல் தலைவர்களும் பேசவில்லை, ஒரு மீடியாக்களும் போடவில்லை. தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நடுநிலையான ஆட்கள் இருந்தும் அவர்கள் RSS, VHP எனப்படும் பயங்கரவாத கைகும்ம்பலில் இந்த அரசியல்களும், மீடியாக்களும் சிக்கிகொண்டது என்பது உலகம் அறிந்தது ஆனால் ஒருசில முஸ்லிம்களை தவிர ஏனென்றால் அவன் தான் யாருக்கும் தீங்கு இல்லாமல் வாழவேண்டும் என்று நினைக்கிறான். நன்மையை எவுகின்றனே தவிர தீமையை கண்டு விலகிகொல்கிறான்.
இப்படிப்பட்டவர்கள் உலகை ஆண்டிருக்க முடியாது. எப்படிப்பட்ட சமுதாயம் உலகை ஆண்டது என்றால். நன்மையை ஏவி தீமையை தடுத்த கூட்டம்தான் இந்த உலகை ஆண்டது. அப்படிபட்டவர்களிடம்தான் நமது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தார்கள்.
முஸ்லிம்களே விழித்துகொள்வோம்!. இனியும் நாம் ஒன்றினையாமல் பிரிந்தே கிடந்தால் நமக்காக குரல்கொடுக்க யாரும் வரமாட்டார்கள்.
அல்லாஹ்தால கொடுத்த அறிவை முழுமையாக பயன்படுத்துவோம். எதிரிகளை நடுங்க செய்வோம்.
இயக்க தலைவர்கள் பிரிந்துகிடந்தால் அவர்களுக்கு இந்தவிசயத்தில் கட்டுபடாதீர்கள். ஒருசில தவறு உள்ளே இருக்கத்தான் செயும் அதை கருத்தில்கொண்டு பிரிவைனாடினால், பிரிந்துகொண்டே செல்லவேண்டியதுதான்.
நம்முடைய பலத்தை வாழ்ந்துகொண்டிருக்ககூடிய இந்த சமுதாயம் பார்த்ததில்லை, ஆனால் எதிரிகள் நம்முடைய பலவீனத்தை நன்றாக தெரிந்திருக்கிறார்கள்.
நம்முடைய பலத்தை இந்த உலகத்திற்கு காட்ட ஒன்றிணைவோம்.
முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே!
நன்றி : நமதுநிருபர்
ரமலான் மாத நிகழ்வுகள்
இது ஹிஜ்ரா காலண்டரின் 9வது மாதம்.
ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்: ஷஅபானின் இறுதி நாளில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களே, இதோ இப்பொழுது உங்கள் முன் ஒரு மாபெரும் மாதம் வருகிறது. இது அதிகமதிகம் அருள் சொரியப்பட்ட மாதம். இதில்தான் 1000 மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அடங்கியிருக்கிறது. இந்த மாதத்தில் பகல் வேளை முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டுள்ளது.”
புண்ணியமிக்க மாதத்தை சந்தைமயமாக்கிவிடாதீர்கள்!
மனித வாழ்வின் எல்லா துறைகளிலும் சந்தையியல் சக்திகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. சந்தை வசப்படுத்துவது தயாரிப்புகளையும், சேவைகளையும் மட்டுமல்ல. மாறாக, ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமாக வீட்டு முற்றத்தில் உற்றாரும், உறவினர்களும் சேர்ந்து நடத்தும் திருமணங்களை கூட நகைக்கடைகளும், துணிக்கடைகளும் தங்களின் சரக்குகளை விற்றுத்தீர்க்கும் களமாக மாற்றிவருகின்றன.
2009 ஜூலையை மறக்க முடியுமா ?ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணி...
ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணி !!!

நீதிமன்றில்..
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
காவல் துறை கண்முன்பு
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட
சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?
இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்'நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.
பர்மா முஸ்லிம் இனப்படுகொலை: முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!
முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப்பிடுகிறான்.
முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.
புதன், 18 ஜூலை, 2012
ஹஜ் வழிகாட்டி + தொழுகை நினைவூட்டல்

முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும், மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு உதவும் வகையிலும் புதிய திறன்பேசி பயன்பாட்டு நிரலி (Smart Phone Application) ஒன்றை ஜெர்மானிய கணினி அறிஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்ற ஹபீபுர்ரஹ்மான் தஸ்தகீரி என்னும் அந்த இளம் அறிஞர் இரு நாள்களுக்கு முன் "The Global Post" நாளிதழுக்கு அளித்த செய்தியில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். "ஹஜ்ஜுக் காலத்தில் யாத்ரிகர்களுக்கு வழியறிய உதவுவதாகவும், மார்க்கக் கடமைகளை நினைவூட்டக் கூடியதாகவும் கருவியொன்று வடிவமைக்க விரும்பினேன்" என்றார் அவர் "கடந்த 2006 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் உம்ரா செய்ய வாய்ப்பு கிடைத்த போதிலிருந்து இது பற்றி சிந்தித்து வந்துள்ளேன்".
தனது பயன்பாட்டு நிரலிக்கு "அமீர்" என்று பெயர் சூட்டியுள்ளார் ஹபீபுர் ரஹ்மான். பொதுவாக, ஒரு பயணத்தில், இயக்கத்தில் தலைமைத் தாங்கிச் செல்பவருக்கு அரபுமொழியில்
அமீர் என்று கூறுவார்கள்.
உம்ரா, ஹஜ் ஆகிய புனிதக் கிரியைகளின் போது, தங்கியிருக்கும் இடம் திரும்புவதில் புனிதப் பயணிகள் படும் சிரமத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹபீபுர் ரஹ்மான், "நாங்கள் எங்களை நன்கு தயார்படுத்திக்கொண்டிருந்தோம்; அப்படியிருந்தும் தங்கியிருந்த இடத்தை அடைவதில் சிரமம் கண்டோம்" என்று நினைவு கூர்ந்தார்.
ஆஃப்கானிஸ்தானத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹபீபுர் ரஹ்மான், பெற்றோர் தம் ஜெர்மானிய குடியமர்வுக்குப் பின்னர் மெய்ன்ஸ் நகரில் பிறந்தவர்.
அமீர் என்கிற இப்புதிய நிரலியின் மூலம், கலந்துரையாடலாக ஹஜ்ஜு, மற்றும் உம்ரா கிரியைகளின் சரிபார்ப்புப் பட்டியலையும் காணமுடியும்.
இரண்டு வருட கால ஆய்வின் முடிவின் இந்நிரலியை தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஹபீபுர் ரஹ்மான், தன் ஆய்வில் ஆஸ்திரேலிய முஸ்லிம் அறிஞரும், ஹஜ்ஜு பற்றி நிறைய நூல்கள் எழுதியுள்ளவருமான அபூமுனீர் இஸ்மாயில் டேவிட்ஸ் என்பவரை கலந்தோலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு க்ளிக்கில் கிப்லா (தொழ வேண்டிய திசை) காட்டும் அல் கிப்லா என்ற இன்னொரு நிரலியையும் இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய பயன்பாட்டு நிரலி இஸ்லாமிய மார்க்க வகையிலும் நுட்ப வகையிலும் பிழைகள் ஏதுமில்லாமல் அமைவதில் கவனம் செலுத்தியதாகக் கூறும் ஹபீபுர் ரஹ்மான் தனது கருவி தற்போது துருக்கி, ஆங்கிலம், அரபு, ஜெர்மன் மொழிகளில் செயலாற்றுகிறது என்பதையும் தெரிவித்துள்ளார். " மற்ற மொழிகளிலும் ஆய்வு தொடர்கிறது"
"ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ஃபோனில் இந்நிரலி செயல்படத் தக்கதாக உள்ளது" என்றும் 'ஆண்ட்ராய்ட்' வகை பேசிகளிலும் விரைவில் செயற்படத் தொடங்கும் என்றும் 32 வயதேயான ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
-சத்தியமார்க்கம்
முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய போராட்டம்
பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது.
செவ்வாய், 17 ஜூலை, 2012
ரமலானை வரவேற்போம்!!!
புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்.
ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும், வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குக்கான ஒரு பயிற்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒருவசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.
இஸ்லாம் எங்கள் உயிருக்கு சமம்.

நமதூரில் நமது உயிரிலும் மேலான ஷரியத்சட்டத்தை பாதுகாக்கவேண்டி இன்று பெரம்பலூர் புதிய பேருந்து அருகே மாவட்ட கலக்டர் , RDOரேவதி, மற்றும் சுகாதாரத்துறை பேச்சியம்மா ஆகியோரை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.

உலமாக்கள் பேரவை மற்றும் அணைத்து இயக்கங்கள் இணைந்து அழைப்பு கொடுத்தமையால் நமது இரண்டு மகால்லம் ஒருமனதாக முடிவெடுத்து அணைத்து இயக்கங்களின் ஆதரவோடு ஊரிலிருந்து சுமார் 15 மேற்பட்ட வாகனங்கள் கிளம்பி சென்றது. அதுசமயம் நமதூர் கடைகாரர்கள் தமது கடைகளை அடைத்து ஆர்பாட்டத்திற்கு கிளம்பி சென்றனர். ஒருசிலர் கடைகளை அடைத்து இங்கிருந்தே ஆதரவு தெரிவித்தனர்.
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாபுலர் பிரான்ட் ஆப் இந்திய மற்றும் முஸ்லிம் லீக் ஒன்றிணைத்து ஷரியத்சட்டத்தை பாதுகாத்திட ஒற்றுமையோடு செயல்பட்டது சிலருக்கு வெறுப்பாக அமைந்தாலும் என்டேன்றும் ஒற்றுமையோடு செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
நமது நிருபர்
அல்லாஹ் அக்பர் ... இணைந்தது எங்கள் சமுதாயம்....
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தில் கண்ட அருமையான காட்சிகள்
துபாய்:அமெரிக்க கப்பற்படையின் வெறிச்செயல் – துப்பாக்கிச்சூட்டில் தமிழர் பலி!
துபாய்:அமெரிக்க கப்பல் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிப்புற கடற்பகுதியில் வைத்து மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் பலியானார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ராமநாதபுரத்தைச் சார்ந்த சேகர்(வயது 26) என்பவர் அமெரிக்க கப்பற்படையின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் ஆவார். மணிகண்டன், முத்துக்கண்ணன் ஆகியோருக்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டது.
திங்கள், 16 ஜூலை, 2012
நமதூர் ரிஸ்வான் பட்டமளிப்பு விழா
நமதூர் ரிஸ்வான் பட்டமளிப்பு விழா
இன்று 16.07.2012 லப்பைக் ஜாமியா ரவ்ளதுஸ் ஸாலிஹாத் நிஸ்வான் (பெண்கள் அரபிக் கல்லூரி) யின் 26 வது ஆண்டு நிறைவு விழாவும் , 23 வது பட்டமளிப்பு விழா கிழக்கு ஜீம்ஆ பள்ளி கீழ்வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மற்றும் மேற்கு ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் 5 மாணவிகளுக்கு ஸனது பட்டம் (முபல்லிகா) வழங்க பட்டது.
குறிப்பு இந்நிகழ்ச்சி வாயிலாக நாளை நடைபெறும் பெரம்பலூரில் கன்டண ஆர்பாட்டத்திற்கு இரண்டு ஜமாத் வாயிலாக அழைப்பிதல் கொடுக்கபட்டது.
இன்று 16.07.2012 லப்பைக் ஜாமியா ரவ்ளதுஸ் ஸாலிஹாத் நிஸ்வான் (பெண்கள் அரபிக் கல்லூரி) யின் 26 வது ஆண்டு நிறைவு விழாவும் , 23 வது பட்டமளிப்பு விழா கிழக்கு ஜீம்ஆ பள்ளி கீழ்வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மற்றும் மேற்கு ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் 5 மாணவிகளுக்கு ஸனது பட்டம் (முபல்லிகா) வழங்க பட்டது.
குறிப்பு இந்நிகழ்ச்சி வாயிலாக நாளை நடைபெறும் பெரம்பலூரில் கன்டண ஆர்பாட்டத்திற்கு இரண்டு ஜமாத் வாயிலாக அழைப்பிதல் கொடுக்கபட்டது.
கல்லீரல்
குடியினால் வரும் உடல் ரீதியான நோய்களில் கொடுமையானது 'லிவர் சிரோஸிஸ்’(Lever cirrhosis). இதுதான் க்ளைமாக்ஸ். குடிநோய்களின் தலைவன் இவன். சுமார் 10 ஆண்டுகளாக தினமும் மது அருந்துபவருக்கு கட்டாயம் இந்த நோய் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலின் வயிற்றுப்பகுதியின் வலது பக்கத்தில் சுமார் ஒன்றரைக் கிலோ எடையில் முக்கோண வடிவத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்கும் உறுப்புதான் கல்லீரல். மூளை மற்றும் இதயத்துக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற உறுப்பு இது. ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
மது, பன்றி இறைச்சி, மரணம்- பர்மா முஸ்லிம்களுக்கு பெளத்த பயங்கரவாதிகள் அளிக்கும் சாய்ஸ்!
கெய்ரோ:கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.
முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரங்களை குறித்து ஆயிஷா ஸூல்ஹி அல் வதனுல் மிஸரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியது: “பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ளமு ஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.
ஞாயிறு, 15 ஜூலை, 2012
பெரம்பலூரில் த.மு.மு.க மற்றும் ம.ம.க பொதுக்குழு
பெரம்பலூர்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று 14.07.2012 நடந்தது.
கூட்டத்துக்கு த.மு.மு.க.மாவட்ட தலைவர் மீராமொய்தீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரஷீத்அஹமத் வரவேற்றார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான்மொய்தீன், மாவட்ட பொருளாளர் முஹம்மதுஇலியாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் குதரத்துல்லா, முஹம்மதுசித்திக், தொண்டணி செயலாளர் சித்திக் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மதுரபீக் பேசினார். இதில் பெரம்பலூர் ஒன்றிய அ மைப்பாளராக
சனி, 14 ஜூலை, 2012
ஷரிஅத் சட்டத்தில் அத்துமீறி தலையிடும் அரசு அதிகாரிகளுக்கு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம்
சென்னை:ஷரிஅத் சட்டத்தில் (முஸ்லிம் தனியார் சட்டம்) அத்துமீறி தலையிடும் தமிழக அரசு அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி AEM அப்துர் ரஹ்மான் தலைமையில் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூட்டாக தெரிவித்ததாவது; ‘பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சார்ந்த ராஜா முகம்மதுவின் மகன் சாகுல்ஹமீது என்பவருக்கும், அரும்பாவூரை சார்ந்த அப்துல் கபூரின் மகள் யுரேஷா பேகத்திற்கும் கடந்த 25.06.2012 அன்று
சுவர்க்கமும் நரகமும் செய்த தர்க்கவாதம்
சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின.
நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!”
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர்.
ரமளானை வரவேற்போம்!
நன்மைகளை அள்ளித் தரும் புனித ரமளான், மீண்டும் ஒரு முறை நம்மை சந்திக்க வருகின்றது. இது தொழுகை மற்றும் நோன்பின் மாதம். இறையச்சத்தை இதயத்தில் ஏற்றும் மாதம். தேவை உடையோருக்கு ஈந்துதவி, இறை உவப்பை பெறும் மாதம். தன்னையே அழித்துக் கொள்ளும் பாவம் புரிந்தாலும் அதற்காக பச்சாதாபப்பட்டு பாவமன்னிப்பைத் தேடி பெற்றுக் கொள்ளும் மாதம்.
இந்த மாதத்தையும், அதன் முக்கியத்துவத்தையும், அது ஏற்படுத்த வேண்டிய மாற்றத்தையும் பற்றி இறைமறையாம் அருள்மறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது:
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் 2 : 183)
கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்வோம்
கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது.
Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
வெள்ளி, 13 ஜூலை, 2012
முகலாய மன்னர்களின் நீதி
முகலாய மன்னர்களின் நீதி
பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர் எழுதியதாவது:
என் மகனே! இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதற்கு ராசாக்களின் ராசாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். கீழ்வரும் கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.
1. மத உணர்வுக்கு உரிய மதிப்புக் கொடு. மத மாச்சரியங்களுக்கு உனது மனது ஆட்பட அனுமதிக்காதே. சார்பற்ற நீதி வழங்கு.
ஜமாலியா நகர் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் ?
லெப்பைக்குடிக்காடு ஒர் பாலஸ்தீனம் போல் ஆக்கிறமிப்பு நடைபெறுகிறது. அன்று எப்படி இந்த உலக மகா ரவுடியான யுதர்களை உலக மொங்கும் கொலைசெய்யபட்டு தங்குவதற்கும் கேட்பதற்கும் நாதியற்றவர்களாக இருந்தவர்களை பாலஸ்தீன் மக்கள் அறவனித்தார்கள். ஆனால் இன்று அவர்களுடைய நிலமை உலகில் வேறு எங்கும் இதை போன்ற ஓர் அனிதீ நடைபெற்றது இல்லை . செந்த நாட்டில் அகதிகலாகவும் , அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.
இதை ஏன் இங்கு நாம் சுட்டிகாட்டுதற்கு காரணம் என்ன வெனில் , நமது மக்கள் அன்று எப்படி பாலஸ்தீன் மக்களுக்கு இடம் கொடுத்தார்களே அதை போல் இன்று வாடகை வீடு என்ற பெயரில் ஊரில் பல வருடங்களாக குடிஇருப்பவர்கள் அவர்களுக்கு உங்கள் வீட்டில் முகவரியில் ஓர் ரேசன் (குடும்ப அட்டை) கார்டு வாங்குகிறார்கள் . இதில் வேடிக்கை என்ன வெனில் தொடர்ந்து 20 வருடம் இருந்தவர்கள் எல்லாம் இன்று தனக்கு ஓர் இடம் வேனும் என்று கலெக்டர் இடம் சென்று மனு கொடுத்து உள்ளனர். இது ஓர் ஜனநாயக உரிமை . ஆனால் ஊரில் உள்ள புறம் போக்கை இடத்தை எனக்கு தாங்கள் நான் இத்தனை வருடம் இந்த ஊரில் வாழ்ந்து வருகின்றோன் என்று உங்கள் வீட்டு முகவரியை வைத்து உரிமை கொண்டாடுகின்றனர். இதில் தான் பிரச்சனை ஆரம்பம் ஆகின்றன. ஏனெனில் புறம் போக்கு இடம் பார்தால் ஜமாலியா நகரில் அமைந்துள்ளது. அன்று ஜமாலியா நகர் மனை போடும் போது இந்த இடமும் சேர்ந்து உள்ளது.
வியாழன், 12 ஜூலை, 2012
நமதூரில் மழை பொழிந்தது

நமதூரில் பரவலாக மிதமான மழை பொய்த்து. இதனால் பொதுமக்கள் அனைவரும் சந்தோசத்துடனும் மகிழ்ச்சயுடனும் காணப்பட்டார்கள்.
நமதூரில் சுமார் மாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டதோடு காட்சியளித்தது. பொதுமக்கள் அனைவரும் வழக்கம்போல மேகம் வரும் போகும் என்று அலட்சியமாக இருந்தனர். மாலை 6:30 மணிக்கு மேல் மலை பொளியத்துவங்கியது.

இதனால் பஸ் ஸ்டாப்பில் உள்ளவர்கள் கடை ஓரங்களில் ஒதிங்கினார்கள். மாடியில் துணி காயப்போடவர்கள் அவசர அவசரமாக காய்ந்ததுணியை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். அணைத்து தெருக்களிலும் குழந்தைகள் சத்தம் சற்று குறைவாகவே காணப்பட்டது.
நன்றி:நமதுநிருபர்.
பர்மா முஸ்லிம்களின் அவல நிலையை தயவுசெய்து பிறருக்கு எத்தி வையுங்கள்.
Muslims in Burma Are Killed.....Whole Media is Silent.....
நமது நிர்வாகிகள் நல்லவர்களா ? கெட்டவர்களா?
Al-Muminah School featured on Headlines Today, India
அல்லாஹ் அக்பர் ... அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர்...
நமதூர் ஜமாத் என்ன செய்து கொண்டு இருக்கிறது. பெண்கள் வழி தவறி சென்று கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் ஓர் முன்மாதிரியான இஸ்லாம் மற்றும் உலக கல்வியை மும்பையில் உள்ள Al-Muminah School பெண்களுக்காக செய்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
இப்போது நமதூருக்கு வருவேம். வழி தவறும் பெண்பிள்ளைகள் , முஸ்லிம் அல்லாத ஆண்களுடன் பெண்பிள்ளைகள் என்று நாளுக்கு நாள் வரும் செய்தியாக உள்ளது. இந்த செய்திகள் நம் அனைவரையும் முகசுலிக்க வைக்கிறது. இதில் பசங்களும் விதி விளக்கு அல்ல.
ஆனால் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் தன்னுடைய பெறுப்பை பற்றி மறுமையில் கோள்வி கேட்க படும் என்பதை கூட அறியாமல் இன்று நமதூர் மஹல்லா நிர்வாகிகல் உள்ளனர்.எப்படி அங்கே பிள்டிங் கட்டலாம் இங்கே கட்டலாம் என்றுதான் நிர்வாகிகள் இருக்கிறார்கள்.ஊரில் நடக்க கூடிய அனாச்சாரங்களை கண்டும் காணாமல் .
ஊரில் ஒரு கல்வி நிறுவனம் அமைக்க வேண்டும் என்று என்றாவது சிந்தித்தது உண்டா? ஹந்திரிக்கு எவ்வளவு சோரு ஆக்கலாம் , கல்யாணத்திற்கு எவ்வளவு பணம் வாங்களாம் என்று தான் இவர்களுடைய நிர்வாகம் சொன்று கொண்டு இருக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















