Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 13 ஜூலை, 2012

ஜமாலியா நகர் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் ?




லெப்பைக்குடிக்காடு ஒர் பாலஸ்தீனம் போல் ஆக்கிறமிப்பு நடைபெறுகிறது. அன்று எப்படி இந்த உலக மகா ரவுடியான யுதர்களை உலக மொங்கும் கொலைசெய்யபட்டு தங்குவதற்கும் கேட்பதற்கும் நாதியற்றவர்களாக இருந்தவர்களை பாலஸ்தீன் மக்கள் அறவனித்தார்கள். ஆனால் இன்று அவர்களுடைய நிலமை உலகில் வேறு எங்கும் இதை போன்ற ஓர் அனிதீ நடைபெற்றது இல்லை . செந்த நாட்டில் அகதிகலாகவும்  ,  அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.


இதை ஏன் இங்கு நாம் சுட்டிகாட்டுதற்கு காரணம் என்ன வெனில் ,  நமது மக்கள் அன்று எப்படி பாலஸ்தீன் மக்களுக்கு இடம் கொடுத்தார்களே அதை போல் இன்று வாடகை வீடு என்ற பெயரில் ஊரில் பல வருடங்களாக குடிஇருப்பவர்கள் அவர்களுக்கு உங்கள் வீட்டில் முகவரியில் ஓர் ரேசன் (குடும்ப அட்டை) கார்டு வாங்குகிறார்கள் . இதில் வேடிக்கை என்ன வெனில் தொடர்ந்து 20 வருடம் இருந்தவர்கள் எல்லாம் இன்று தனக்கு ஓர் இடம் வேனும் என்று கலெக்டர் இடம் சென்று மனு கொடுத்து உள்ளனர்.  இது ஓர் ஜனநாயக உரிமை . ஆனால் ஊரில் உள்ள புறம் போக்கை இடத்தை எனக்கு தாங்கள் நான் இத்தனை வருடம் இந்த ஊரில் வாழ்ந்து வருகின்றோன் என்று உங்கள் வீட்டு முகவரியை வைத்து உரிமை கொண்டாடுகின்றனர்.  இதில் தான் பிரச்சனை ஆரம்பம் ஆகின்றன.  ஏனெனில் புறம் போக்கு இடம் பார்தால் ஜமாலியா நகரில் அமைந்துள்ளது. அன்று ஜமாலியா நகர் மனை போடும் போது இந்த இடமும் சேர்ந்து உள்ளது.

ஊரில் வாழைஅடிவாழையாக வாழ்ந்து வரும் மக்கள் இன்று பலரிடம் செந்த இடம் கூட கிடையாது. நாம் தான் எது பற்றியும் கவலை படுவது இல்லை.  இதிலும் ஓர் அளச்சிய போக்குடன் இருந்தால் ஜமாலியா நகர் முலுவதும் பிரச்சனை ஏற்படும். 
மீண்டும் மீண்டும் செல்லுகிறோம் 2 ஜமாத் நிர்வாகம் என்ன தான் செய்யுறீங்க? உங்களை நம்பி பல பேர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாடு வாழ் லெப்பைக்குடிக்காடு மக்கள் விரும்புகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் நல்ல செய்திகளுடன் சந்திப்போம் . ஆமின்... 


                                                                                                                                                                                     ---நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக