Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெரம்பலூரில் த.மு.மு.க மற்றும் ம.ம.க பொதுக்குழு



பெரம்பலூர்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று 14.07.2012 நடந்தது.
கூட்டத்துக்கு த.மு.மு.க.மாவட்ட தலைவர் மீராமொய்தீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரஷீத்அஹமத் வரவேற்றார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான்மொய்தீன், மாவட்ட பொருளாளர் முஹம்மதுஇலியாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் குதரத்துல்லா, முஹம்மதுசித்திக், தொண்டணி செயலாளர் சித்திக் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மதுரபீக் பேசினார். இதில் பெரம்பலூர் ஒன்றிய அ மைப்பாளராக 


ஹிதாயத்துல்லா, வேப்பந்தட்டை ஒன்றிய பொருளாளராக சாதிக்பாட்ஷா, மாவ ட்ட மக்கள் தொடர்பாளராக ஹ யாத்பாஷா, மாணவர் இந்தியா மாவட்ட தலைவராக ஜஹாங்கீர் பாஷா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்ப ட்டனர். கூட்டத்தில் நகர பொருளாளர் ஜக்கரியா நன்றி கூறினார்.வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சபியுல்லா, ஒன்றிய தலைவர் செய்யது, ரபீக், தமீமுன்அன்சாரி பங்கேற்றனர்.

தகவல் த.மு.மு.க மற்றும் ம.ம.க



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக