ஒரு காலத்தில் நமதூர் பெண்கள் ஊர் நிர்வாகத்திற்கும் ஜமாதிர்க்கும் கட்டுப்பட்டு தேவையில்லாமல் வெளியூர் செல்வதை கூட தவறு என்று நினைத்தார்கள். அப்படிதான் தங்கள் பிள்ளைகளும் வளரவேண்டும் என்பது நமதூர் மக்களின் ஆசையும் கூட.
அனால் ஒரு சிலர் செய்யும் தவறு நமது ஊர் அல்ல நமது சமுதாயத்தையே குறிக்கின்றன. இதற்கான காரணங்கள் தங்கள் அறிந்ததே.
- சினிமா மோகம் (அது போல வாழவேண்டும்).
- மற்றவர்களை போல மனோஇச்சையை பின்பற்றி அல்லாஹ்வை மறந்து வாழ்தல்.
- பெற்றோர்கள் கொடுக்கும் சுதந்திரம்.
- எதிரிகள் விரிக்கும் வலை.
- இன்றைய கலாச்சாரம் (கூட நட்பு)
- மரணத்தின் (நரகத்தின்) பயம் இல்லாமை. என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இதற்க்கு முற்று புள்ளி வைக்ககூடிய பொறுப்பு முதலில் நிர்வாக தலைவருக்கே சார்ந்தது அது வீட்டின் தலைவராக இருந்தாலும் சரி ஊர் தலைவராக இருந்தாலும் சரி.
இன்றைய கால கட்டத்தில் நம்பிள்ளைகளை எச்சரிக்கையாக வளர்க்கவேண்டும் என்பது நம்மீது அல்லாஹ் விதித்த கடமை. இது இப்படி இருக்க இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள் (கோழைகள்) சிந்தனை முழுவதும் இஸ்லாமிய பெண்களை சுற்றியே வருகிறது. அப்படிப்பட்ட சம்பவம் எடுத்துகாட்டாக காபிர்களோடு ஒரு இஸ்லாமிய பெண் ஒருத்தி உணவு அருந்திகொண்டு இருக்கிறாள், அவளிடம் கேட்டால் நான் முஸ்லிம் அல்ல என்று பதிலளிக்கும் நிலைதான் இன்று. அந்த காபிர்களிடம் கேட்டால் என்னுடைய Mobile எண் எப்படித்தான் அவளிடம் கிடைத்தது என்றே எனக்கு தெரியாது கடந்த 5 நாட்களாகதான் பழக்கம் அதனால் தான் இன்று சிறிய பார்டி வைத்தோம் நானும் என்னுடைய நண்பர்களும் ஒன்றாக உணவருந்தினோம் என்று கூறும் நிலை அவர்கள் மத்தியில் நிலவுகிறது.
இப்படிப்பட்ட சம்பவம் எந்த ஊரில் நடந்தாலும் சரி அது முஸ்லிம் மக்களைத்தான் குறிக்கிறது. ஆனால் இஸ்லாம் ஒருபோதும் இதற்க்கு வழிவிடாது என்பதுதான் அசைக்கமுடியாத உண்மை. இப்படிப்பட்ட சம்பவங்கள் களைந்தெறிய அந்தந்த ஊர் இஸ்லாமிய இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது பாமர மக்களின் கேள்வியாக உள்ளது.
நன்றி: நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக