Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 7 ஜூலை, 2012

ஒரு காலம் இருந்தது ...


       
ஒரு காலம் இருந்தது. அதில் ஊரை முன்னிருத்திதான் தலைவர்கள் வேலை செய்திறுந்தார்கள். அதில் காவல் துறையை சோ்ந்தவர்கள் கூட ஊர் உள்ளே வரவேண்டும் என்றால் மாட்டுப்பாலம் வந்து அங்கிருந்து ஜமாத் தலைவர் அனுமதி பெற்று தான் உள்ளே வருவார்கள். ஆனால் இன்று 
அப்படியே தலைகீலாக மாறிவுள்ளது.இதற்கு யார் காரணம். ஜமாத்தார்களா அல்லது இன்று நாங்கள் தான் நபிவழியை பின்பற்றுகிறோம் என்று ஆலுக்கு ஆல் ஒரு பள்ளி வாசல் , மர்கஸ் என்று கட்டி இருப்பவர்களா? அல்லது சமுதாயத்தின் ஒற்றுமை என்று பேசி கொண்டு தங்களுக்குள்ளே அடித்து கொள்பவர்களா?



இதில் வேடிக்கையான ஒரு விசயம் என்னவெனில் தங்களை தாங்களே பேரியக்கம் ? என்று கூறுபவர்கள் அடுத்தவர்களை விமர்சனம் செய்யும் இவர்கள் இப்போது தங்கள் தலைவர் ஊர் வருகையை ( அடுத்தவர்களை எந்த அடிப்படையில் விமர்சனம் செய்தார்களோ அதோ அளவுகோளில் இவர்கள் இப்போது ) விளம்பரம் பேனர்கள் , வால்போஸ்டர்கள் மற்றும் ஊர் முழுவதும் கொடி என்று ஊரில் எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் பார்க்க முடிந்தது.

இதை நாம் சுட்டிகாட்டுவது குறைசொல்வதற்காக அல்ல . ஏனெனில் தங்கள் இடம் மீடியா உள்ளது என்பதற்காக தாங்கள் செய்யும் முறனான விசயங்களை சுட்டிகாட்டுவதே இதன் நோக்கம்.

அடத்ததாக பாரம்பரியமாக உள்ள சுன்னத்துவல் ஜமாத் தங்களுக்கு உள்ள அதிகாரம் கொஞ்சகொஞ்சமாக அரசாங்க ரீதியாக பிடிங்கி கொண்டு வருவதை ( உதாரணத்திற்கு திருமண சட்டம் ) கண்டும் காணாமல் இவர்கள் இருப்பதை பார்த்தால் பின்னால் வரக்கூடிய தலைமுறைக்கு மிகப் பெரிய அனிதியை சொய்து கொண்டு இருக்கிறார்கள். 

இது எல்லாம் ஒருபுறம் இருக்க நம்முடைய மக்கள் எதை பற்றியும் கவலை படாமல் வாழ்ந்து வருகின்றளர்.

அல்லாஹ் தன்திருமறையில் கூறுகின்றான்

   ( நபியே!) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்.( உங்களுடைய தீர்ப்பை ) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் சில ( கொடிய ) பாவங்களின் காரணமாக அல்லாஹ் ( அவர்களைத் தண்டிக்க ) அவர்களுக்குக் கஷ்டத்தை தர விரும்புகின்றான். நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.


                                                                                                                                                                      அல்குர்ஆன்  5: 49


                                                                                                                                                                                             நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக