Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 4 ஜூலை, 2012

வளைகுடாவை நோக்கி அமெரிக்க போர்க் கப்பல்கள்!


US moves new forces to Gulf to ward
வாஷிங்டன்/இஸ்தான்புல்:இஸ்தான்புல்லில் உலகின் வல்லரசு நாடுகளின் அணுசக்தி நிபுணர்கள் ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்கா வளைகுடா பகுதியை நோக்கி கூடுதல் போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இத்தகவலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய்க் கப்பல்கள் செல்வதை ஈரான் தடுக்கும் என்ற பீதி உருவானதை தொடர்ந்து போர்க் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

ஈரான் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படும் என்பதற்கான செய்தியை அளிப்பதும் இந்த போர்க் கப்பல்களை அனுப்பியதன் பின்னணியில் உள்ளது.
கண்ணிவெடிகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் கப்பல்களையும், உளவு விமானங்களையும் வளைகுடா பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அதேவேளையில் மேற்கத்திய நாடுகளின் நிர்பந்தத்திற்கு ஈரான் அடிபணியாது என்ற செய்தியும் டெஹ்ரானில் இருந்து வருகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதங்கள் துவங்கும் என ஈரான் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அணுசக்திக் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஐரோப்பிய யூனியன் ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய தடைகளை திணித்துள்ளதாகவும், இது முற்றிலும் சட்டவிரோதமானதும், பொருத்தமில்லாததுமாகும் என்று ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரமீன் மெஹ்மான் பரஸ் தெரிவித்துள்ளார்.
அணுசக்திக் குறித்த பேச்சுவார்த்தைகளின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணமே இதன் பின்னணியில் உள்ளது என்று மெஹ்மான் பரஸ் குற்றம் சாட்டியுள்ளார். பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கலாம் என வெளிப்படையாக கூறும் மேற்கத்திய நாடுகள் தடைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் நேர் விபரீதமான திசையில் பயணிப்பதாக பரஸ் சுட்டிக்காட்டுகிறார்.
மாஸ்கோ, பாக்தாத் ஆகிய நகரங்களில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 1-ஆம் தேதி இஸ்தான்புல்லில் இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளனர்.
Thanks : Thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக