Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 7 ஜூலை, 2012

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜூலை 9ம் தேதி 2,50,000 லட்சம் கம்ப்யூட்டர்களை 'காவு' வாங்கப் போகும் வைரஸ்!




உலகம் பூராவும் இதே பேச்சாக இருக்கிறது. ஜூலை 9ம்தேதி திங்கள்கிழமையன்று உலகம் பூராவும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடைபெறப் போவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்கள் காலியாகப் போவதாகவும் அந்த எச்சரிக்கைப் பேச்சு கூறுகிறது.


எந்த பிளாக்கைப் பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. அன்றைய தினம் கம்ப்யூட்டர்களின் பேரழிவு தினம் என்றும் பீதியைக் கிளப்புகிறார்கள்.





இந்த கம்ப்யூட்டர் வைரஸுக்கு அலூரியன் மால்வேர் என்று பெயர். ஆனால் இதுகுறித்து கம்ப்யூட்டர் நிபுணர்கள் கூறுகையில், இந்த வைரஸால் சிலர் மட்டுமே பாதிக்கப்படக் கூடும். ஆனால் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்படும் என்பதெல்லாம் வதந்தியே. இன்டர்நெட் சேவையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய இன்டர்நெட் சேவையாளர்கள் தயாராகவே உள்ளனர். எனவே யாரும் பீதியடையத் தேவையில்லை என்று அவர்கள் ஆறுதலாகப் பேசுகிறார்கள்.

மேலும், இதற்கு முன்பு இதுபோல பீதியைக் கிளப்பிய ஜீயஸ், ஸ்பைஐ ஆகிய அதி பயங்கர கம்ப்யூட்டர் மால்வேர்களுடன் ஒப்பிடுகையில் இந்த அலூரியன் வைரஸ் சாதாரணமானதுதானாம்.

ஆனால் உலகம் முழுதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்களை அலூரியன் வைரஸ் பாதிப்பது உறுதி என்று சிலர்அடித்துக் கூறுகிறார்கள். இதில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 45 ஆயிரம் கம்ப்யூட்டர்களுக்குப் பாதிப்பு வருமாம்.

ஜூலை 9ம் தேதி பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக