Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 24 ஜூலை, 2012

குழந்தை கடத்தல் திருடி நமதூரில் பிடிபட்டாள்.


பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை தங்கள் குழந்தைகள் பற்றி அல்லது வேறு யார்குலந்தைகள் பற்றியும் ஆள் தெரியாத நபர் விசாரித்தால் அவர்களிடம் கூறவேண்டாம் என கேட்டுகொள்ளபடுகிறது.
திருமாந்துறை கைகாட்டியில் நமது முஸ்லிம் பெண்ணிடம் தங்கள் குழந்தையை பற்றி ஆள் தெரியாத ஒருவள்  எங்கே படிக்கிறது எப்போது பள்ளி செல்லும் என்று விசாரித்தாள். அந்த குழந்தையின் தாய்க்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. அந்த குழந்தை நமதூரில் உள்ள ஒரு பள்ளிகூடத்தில் படிப்பதை அறிந்த அவள் அந்த குழந்தை செல்லும் பேருந்திலேயே ஏறிக்கொண்டாள். இதை பார்த்து நன்கு சந்தேகம் அறிந்த அந்த குழந்தையின் தாய் அடுத்த மினி பேருந்திலேயே அவளையும் அந்த குழந்தையையும் பின் தொடர்ந்தார்கள். 
நமதூர் வந்ததும் அவள் அந்த குழந்தையிடம் மிட்டாய் வாங்கித்தருகிறேன் என்று நைசாக பேசிகொண்டிருந்தபோது அந்த குழந்தையின் பெற்றோர் அவளை கையும் களவுமாக பிடித்தார்கள். பிறகு விசாரித்த போது அங்கிருந்த பொதுமக்கள் இவள் ஏற்கனவே பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் குழந்தை திருட்டு சம்மந்தமாக மாட்டியுர்கிறாள் இவளது புகைப்படமும் பெரம்பலூர் பொதுஇடத்தில் ஒட்டயுள்ளது என்று கூறினார்கள்.
பிறகு அவளை குழந்தையின் தாயும் பொதுமக்கள் அழைத்து சென்று 9 ஆம் வாடு கவுன்சிலர் ஷேக்தாவூத் அவரது கடையில் ஒப்படைத்தார்கள். அவர் அந்த குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூறி அந்த திருடியை பள்ளிவாசலில் ஒப்படைத்தார். பிறகு அங்கிருந்து காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதுவரை அவள் தனது பெயரையோ தனது முகவரியோ பற்றி யாரிடமும் கூறவில்லை மிகவும் தெனாவட்டாக பதில் உரைத்தாள் இருந்தும் பொதுமக்கள் யாரும் அவள்மேல் கைவைக்க (அடிக்க) வில்லை. இதுபோன்று வேறு எங்கயாவது நடந்தால் ரத்தம் பார்த்திருப்பார்கள். இதுதான் வந்தாரை வாழவைக்கும் லப்பைகுடிக்காடோ?
கிடைசியாக காவல்துறை வந்து அவளையும் அந்த பெற்றோரையும் விசாரித்துவிட்டு, அவளை தனது பைக்கில் ஏறுமாறு கேட்டார்கள் அவள் ஏறமருத்தாள்  பிறகு ஆட்டோவில் அந்த திருடியை காவல்துறை அழைத்து சென்றார்கள். உடன் சம்மந்த பட்ட குடும்பங்களும் அந்த ஆட்டோவில் ஏறி சென்றது.
அந்த குழந்தை காப்பாற்ற பட்டதை அந்த தாயோடு சேர்ந்து நாமும் அல்லாஹ்விற்கு நன்றி சொல்வோம்.
அல்ஹம்து லில்லாஹ் ( புகழ் அனைத்தும் அகிலங்கள் அனைத்தும் படைத்தது பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே )
நமது நிருபர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக