Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 17 ஜூலை, 2012

இஸ்லாம் எங்கள் உயிருக்கு சமம்.



நமதூரில் நமது உயிரிலும் மேலான ஷரியத்சட்டத்தை பாதுகாக்கவேண்டி இன்று பெரம்பலூர் புதிய பேருந்து அருகே மாவட்ட கலக்டர் , RDOரேவதி, மற்றும் சுகாதாரத்துறை பேச்சியம்மா ஆகியோரை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.

உலமாக்கள் பேரவை மற்றும் அணைத்து இயக்கங்கள் இணைந்து அழைப்பு கொடுத்தமையால் நமது இரண்டு மகால்லம் ஒருமனதாக முடிவெடுத்து அணைத்து இயக்கங்களின் ஆதரவோடு ஊரிலிருந்து சுமார் 15 மேற்பட்ட வாகனங்கள் கிளம்பி சென்றது. அதுசமயம் நமதூர் கடைகாரர்கள் தமது கடைகளை அடைத்து ஆர்பாட்டத்திற்கு கிளம்பி சென்றனர். ஒருசிலர் கடைகளை அடைத்து இங்கிருந்தே ஆதரவு தெரிவித்தனர்.
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாபுலர் பிரான்ட் ஆப் இந்திய மற்றும் முஸ்லிம் லீக் ஒன்றிணைத்து ஷரியத்சட்டத்தை பாதுகாத்திட ஒற்றுமையோடு செயல்பட்டது சிலருக்கு வெறுப்பாக அமைந்தாலும் என்டேன்றும் ஒற்றுமையோடு செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக