பெரம்பலூர், ஜூலை 3: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11, 12-ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளங்கலை மற்றும்
முதுகலை பட்டப் படிப்புகள், எம்.பில், ஆராய்ச்சி படிப்பு பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தம், சீக்கியர், மற்றும் பாரசீக்கிய மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2012-13 ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்ம்ண்ய்ர்ழ்ண்ற்ண்ங்ள்ட்ற்ம் என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை புதியது அல்லது புதுப்பித்தல் விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றுகளுடன் கல்வி நிலையத்தில் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஐ.டி.ஐ, ஐ.டி.சி, என்.சி.வி.டி, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள், எம்.பில் ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ம்ர்ம்ஹள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தில், ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகை புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், பதிவு செய்த விவரங்களை ஆன்லைன் மூலம் கல்வி நிலையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் அளித்தால் மட்டுமே, ஆன்லைன் மூலம் கல்வி நிலையங்களுக்கு அனுப்பிய விவரங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
பின்னர், கல்வி நிலையங்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை பரிசீலித்து மேல்நிலைப்பள்ளி கல்வி விண்ணப்பங்களுக்குரிய புதியது மற்றும் புதுப்பித்தல் கேட்புப் பட்டியல்களை வருகிற ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குள்ளும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் புதியது மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்குரிய கேட்புப் பட்டியலை, வருகிற அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குள்ளும் ஆட்சியர் அலுவலத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் குறுந்தகட்டுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக