Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 23 ஜூலை, 2012

குட்டி கருத்து கதை

ஒரு ஊரில் அண்ணன் தம்பி இவர்கள் இருந்தனர். இவர்கள் குடும்பங்களில் பல வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. காரணம் அண்ணன் ஒரு ஜமாஅத் தம்பி ஒரு ஜமாஅத்.

ஆனால் இவர்களும் ஒரே கட்சியில் தான் பல வருடங்களாக இருக்கின்றனர். ஒருநாள் இவர்களுடைய கட்சி தலைவருக்கு அவமானம் இகழ்ந்தமையால் இருவரும் ஒரே கட்சியில் ஒரே இடத்தில் அவர்களுடைய கட்சிக்காக போராடுகின்றனர். இதில் அவர்களை காவல்துறை கைது செய்து சிறைசாலையில் அடைதானர்.
அந்த சிறைசாலையில் ஒரு மார்க்க பற்றுள்ள ( தவறான தீர்ப்பு மூலம் சிறைக்கு வந்த ) நபர் அந்த இரண்டு நபர்களையும் சந்தித்தார்.
அவர்களின் குடும்பங்களையும் பற்றி நான்றாக தெரிந்து கொண்டார். பிறகு அவர்களிடம் எதற்காக நீங்கள் சிறைக்கு வந்தீர்கள் ? என்று கேட்டார் அவர்கள் இருவரும் என்னுடைய கட்சிக்காக என்றனர். அப்போது மார்க்க பற்றுள்ள அந்த நபர் கேடற்றார் என்றைகாவது உங்கள் ஜமாதுக்காக, இஸ்லாத்திற்காக, நம்மை படைத்த அல்லாஹ்விற்காக வேண்டி நீங்கள் ஒன்றினைதீர்களா ?
அவர்கள் இருவரும் (அவமானத்தில்) ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.
அவர்சொன்னார் நீங்கள் யாருக்காக சிறைசாலை வந்தீர்களோ அவர்கள் மூலம் உங்களுக்கு (அல்லது) உங்கள் குடும்பங்களுக்கு என்ன நன்னமை ஏற்பட்டது? ஆனால் அல்லாஹ்விற்காக நீங்கள் அன்புகூர்ந்து அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொன்னாலே அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் இம்மையிலும்  மறுமையிலும் நன்மையை கொடுப்பான்.
அல்லாஹ்விற்காக உங்கள் இரு ஜமாத்துக்கள் மூலம் நீங்கள் ஒன்றிணைத்தால் நமது சமுதாயத்திற்கு இம்மையிலும் வெற்றி மறுமையிலும் வெற்றிகிடைக்கும் என்றார்.
அவர் கூறிய அடுத்த சில வினாடிகளில் உடனே இருவரும் சலாம் கூறி முந்தி கொண்டனர். ( ஒற்றுமையோடு விடைபெற்றனர்)
அந்த மார்க்க பற்றுள்ள நபருடைய பணிகள் அந்த சிறைச்சாலை முழுவதும் தொடர்ந்தாது.
ஒரு முஸ்லிம் இருந்தாலும் ஆயிரம் நன்மை இறந்தாலும் ஆயிரம் நன்மை!
நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக