Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 3 ஜூலை, 2012

நமதூரில் மான் இறந்தது


நமதூர் ஜமாலி நகரில் ஒரு வாலிப பருவ மான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது நமதூர் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏர்படுத்தியது.


ஜமாலிநகர் ஏரிக்கு செல்லும் வழியில் மான் ஒன்று இறந்துகிடப்பதை அறிந்த பொதுமக்கள் நமதூர் பஞ்சாயத்து அலுவலகதிற்கு தகவல் தெரிவித்தனர். பின்பு அவர்கள் அதை நேரில்சென்று உறுதி படுத்தி காட்டு இலாக்காவிற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்பு அவர்கள் ஒரு ஆட்டோவில் அந்த மானை ஏற்றி V.களத்தூர் Forest Officerரிடம் ஒப்படைத்தனர்.
இதை நேரடியாக பார்த்த நமது வெப்சைட் நிருபர் கூறுகையில்
  • இந்தமானின் குடும்பங்கள் இந்த ஏரியாவில்தான் வசித்துவருகிறது.
  • இதற்க்கு சகோதர சகோதிரி மூன்று பேர் உள்ளனர்.
  • இதன் தாய்மான் இதைத்தேடி இந்த இடத்திற்கு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.
  • இந்த மானின் குடும்பங்கள் இதை தேடி அலைந்து கொண்டுஇருக்கும். என்று நமது நிருபர் பதிலளித்தார்.
  • இந்த மானின் வயது எத்தனை இருக்கம் என்று கேட்ற்றதர்க்கு அதை இப்போதைக்கு வெளிட முடியாது என்று கூறிவிட்டார்.
நன்றி: நமது நிருபர்

1 கருத்து: