Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 19 ஜூலை, 2012

பேரூராட்சியில் நமது உறுப்பினர்கள்...


 

நமதூர் பேரூராட்சியில் சாதாரண கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சம்சுல் பஜ்ரியா முஹம்மது தஸ்லீம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவ லர் பரமேஸ்வரி, துணைத்தலைவர் முகமது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் மீராமொய்தீன், ஜாகீர் உசேன், ராணி, தாஜ்தீன், மெஹருன்னிசா, சுதாதேவி, ஷேக்தாவூத், பதுருன்னிசா, நூருல்ஹூதா, ஜூனாபாபு, ரபியதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

லப்பைக்குடிக்காடு பேரூ ராட்சி பகுதியில் தமிழக அரசின் மருத்துவ காப்பிட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டதில் பயனாளிகளின் சொந்த ஊர் வருவாய் கிராமமான பென்னகோணம் வடக்கு என்று அச்சாகியுள்ளது. எனவே அதை மாற்றி லப்பைக்குடிக்காடு பேரூராட்சியென மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்தை கேட்டு கொள்வது. பேரூரா ட்சி பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகை யில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும் என்று தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. குமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக