Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 9 ஜூலை, 2012

ஐக்கிய அரபு எமிரேட்டில் மாடர்ன் உடைகளுக்கு எதிர்ப்பு


ஐக்கிய அரபு எமிரேட்டில் வெளிநாட்டினர் மாடர்ன் உடைகள் அணிவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களில் 10 சதவீதத்துக்கு மேல்தான் எமிரேட் குடிமக்கள். மற்றவர்கள் ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்பட எந்த இடத்துக்கு சென்றாலும் வெளிநாட்டினர் அரை குறை ஆடையுடன் வலம் வருகின்றனர். இதற்கு உள்ளூர் மக்கள் டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அபுதாபியை சேர்ந்த அஸ்மா அல்முஹாய்ரி என்ற இளம்பெண், ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்த போது வெளிநாட்டு பெண்களின் உடைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.  வெளிநாட்டு இளம்பெண்களை பார்த்தேன். அவர்கள் அணிந்திருந்த உடை ஷார்ட்ஸ் என்று கூட சொல்ல முடியாது. அது உள்ளாடை போல மிகமிக குட்டையாக இருந்தது. இதை பார்த்து உள்ளூர் சிறுமிகளும் உடை உடுத்த ஆசைப்படுகின்றனர். இது கலாசாரத்தை சீரழிப்பதாக உள்ளது. ஷாப்பிங் மாலில் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக பலர் வருகின்றனர். இதுபோன்ற இடங்களில் அரை குறை ஆடையுடன் அலைவது மற்றவர்களை பாதிக்கிறது என்றார்.

அந்த பெண்களுடன் பேசி பயனில்லை என்பதால், அல்முஹாய்ரியும், மற்றொரு எமிரேட் பெண் ஹனான் அல்ரேயாஸ் என்பவரும் சேர்ந்து தங்களுடைய எதிர்ப்பை டுவிட்டரில் காரசாரமாக வெளியிட்டுள்ளனர். இதற்கு உள்ளூர் மக்கள் பெரும் ஆதரவு அளித்து, தங்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குட்டை பாவாடை, குட்டை பேன்ட் அணிவதற்கு தடை கொண்டு வர வேண்டும் என்ற பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

நாங்கள் பெரும்பான்மை மக்களாக இருந்தால், எங்கள் எதிர்ப்புக்கு பலன் இருக்கும். சிறுபான்மை மக்களாக இருக்கிறோம். பொது இடங்களில் முத்தம் கொடுக்க கூடாது, இரவு நேர கிளப்புகளுக்கு தடை போன்ற சட்டங்களை வெளிநாட்டினர் மீறி வருகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட்டரில் கருத்து பரவி வருகிறது. மது குடித்து விட்டு கடற்கரையில் உறவு வைத்து கொண்ட ஜோடியையும் டாக்சியில் உறவு வைத்துக் கொண்டவர்களையும் போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். பைக்கில் சென்றவரை பார்த்து நடுவிரல் காட்டிய பாகிஸ்தானியர் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் செக்ஸ் வைத்து கொண்டதாக வெளிநாட்டினர் மீது ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் வெளிநாட்டினர் தொடர்ந்து சட்டத்தை மீறி செயல்படுகின்றனர் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக