பொதுக் கருத்தில் ஒன்றுபடவே முடியாது என்ற கருத்து இருக்குமானால் ' நீங்கள் பிரிந்து விடாதீர்கள்' என இறைவன் சொல்வது ஏன்? 'உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவான கருத்தின் பால் உடன் படுவோம் வாருங்கள்' யூத கிறிஸ்தவர்களையே அல்லாஹ் அழைக்க சொல்வது ஏன்? யூத கிறிஸ்தவர்களோடு பொதுவான கருத்தில் ஒன்று பட முடியும் என்றால் பொதுவான கருத்தில் முஸ்லிம்களாகிய நாம் ஏன் ஒன்று பட முடியாது!
அல்லாஹ்வை நம்பாத மறுமையை நம்பாத அரசியல் கட்சிகளான, இரு வேறு துருவங்களான கம்யுனிஸ்ட் ,பாரதிய ஜனதா பெட்ரோல் விலை விசயத்தில் ஒன்றிணையும் போது, பல்வேறு கருத்துடைய தமிழக கட்சிகள் இலங்கை தமிழர் விசயத்திலும், முல்லைப் பெரியாறு விசயத்திலும் ஒன்றிணைய முடியும் என்றால் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பும் முஸ்லிம்களாகிய நாம் ஏன் ஒன்று பட முடியாது? சிந்தியுங்கள்! செயல் படுங்கள! ஒன்றுபடுங்கள்.
நன்றி: onlinesengiskhan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக