Al-Muminah School featured on Headlines Today, India
அல்லாஹ் அக்பர் ... அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர்...
நமதூர் ஜமாத் என்ன செய்து கொண்டு இருக்கிறது. பெண்கள் வழி தவறி சென்று கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் ஓர் முன்மாதிரியான இஸ்லாம் மற்றும் உலக கல்வியை மும்பையில் உள்ள Al-Muminah School பெண்களுக்காக செய்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
இப்போது நமதூருக்கு வருவேம். வழி தவறும் பெண்பிள்ளைகள் , முஸ்லிம் அல்லாத ஆண்களுடன் பெண்பிள்ளைகள் என்று நாளுக்கு நாள் வரும் செய்தியாக உள்ளது. இந்த செய்திகள் நம் அனைவரையும் முகசுலிக்க வைக்கிறது. இதில் பசங்களும் விதி விளக்கு அல்ல.
ஆனால் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் தன்னுடைய பெறுப்பை பற்றி மறுமையில் கோள்வி கேட்க படும் என்பதை கூட அறியாமல் இன்று நமதூர் மஹல்லா நிர்வாகிகல் உள்ளனர்.எப்படி அங்கே பிள்டிங் கட்டலாம் இங்கே கட்டலாம் என்றுதான் நிர்வாகிகள் இருக்கிறார்கள்.ஊரில் நடக்க கூடிய அனாச்சாரங்களை கண்டும் காணாமல் .
ஊரில் ஒரு கல்வி நிறுவனம் அமைக்க வேண்டும் என்று என்றாவது சிந்தித்தது உண்டா? ஹந்திரிக்கு எவ்வளவு சோரு ஆக்கலாம் , கல்யாணத்திற்கு எவ்வளவு பணம் வாங்களாம் என்று தான் இவர்களுடைய நிர்வாகம் சொன்று கொண்டு இருக்கிறது.
ஆனால் ஊரில் முஸ்லிம் தாங்கிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவைகளின் தறத்தை பார்த்தால் ஆண்டு விழா என்ற பெயரில் சிறுவர்கள் மற்றும் பெண்பிள்ளைகளை சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆட வைத்து கலாச்சார சீர்அழிவை உண்டு பண்னுகிறார்கள்.இதில் பெற்றவர்களும் விதிவிழக்கள்ள . தன்னுடைய பிள்ளைகளை பொது இடத்தில் ஆடுவதை பெறும்பாலும் பெற்றவர்கள் விரும்புகின்றனர்.
ஆனால் ஒரு பள்ளி கூடம் இஸ்லாம் நெறிமுறையில் நடைபெறுவதாக நமது தூபாய் நிருபர் தெரிவித்தார். அது தாருஸ்ஸலாம் மழலையர் பள்ளி . நல்ல விசயங்களை யார் செய்தாலூம் சுட்டிகாட்டுவது நமது கடமை.
இவர்கள் நோற்று வந்தவர்கள் தான். ஆனால் நாங்கள் தான் பாரம்பரியமான ஜமாத் என்று
கூறிகொண்டு மக்களை முட்டாளாக ஆக்கிகொண்டு இருக்கிறார்கள் இரண்டு சுன்னத்துவல் ஜமாத். நோற்று வந்தவர்கள் ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பிக்கிறார்கள் என்றால் ஏன் சுன்னத்துவல் ஜமாத் ஆல் ஆறம்பிக்க முடிய வில்லை.மக்கள் தான் இதற்கு பதிள் செல்ல வேண்டும்.
இப்போது நமது வாசகர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். நமது
ஊரில் மஹல்லா முலமாக ஓரு கல்வி நிறுவனம் துவக்குவது சாத்திய படுமா? உங்களுடைய
ஆலோசனைகள் எங்களுக்கு எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ் சிறந்த ஆலோசனைகள் நமது
இணைய தளத்திள் வெளியிடபடும்.
அல்லாஹ் தன்திருமறையில் கூறுகின்றான்
நன்மைக்கும் ( அல்லாஹ்வுடைய ) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக
இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் ( அநியாயத்திற்கும் ) நீங்கள் ஒருவருக்கொருவர்
உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால் அல்லாஹ்
வேதனை செய்வதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான்.
அல்குர்ஆன் 5:2
- நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக