Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 28 ஜூலை, 2012

கூவமாக மாறிவரும் நமதூர்


நமதூரில் பாதாள சாக்கடை இல்லாதமையால் வாய்க்கால் நீர் அசுத்தமாகி வருகிறது. இதனால் அந்த ஓரங்களில் குடியிருப்பவர்களுக்கும், அந்தவழியாக சென்றுவருபவர்களுக்கும், மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நிலை நீடித்தால் நமதூரில் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை உடனடியாக அரசாங்கத்திடம் சேர்க்கும் விதத்தில் சேர்த்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், பாதாள சாக்கடை திட்டம் உடனடியாக அமுலுக்கு கொண்டுவரும்படியும், நமதூர் பஞ்சாயத் அலுவலர் பரமேஸ்வரியையும், துணை தலைவர் பாரூக் அவர்களும் முயற்சி எடுப்பார்களா? என்பது நமதூர் கவுன்சிலர்களுக்கே தெரியாமல் இருப்பது நமக்கு வேடிக்கையாக உள்ளது.
நடப்பு தலைவர் பாரூக் அவர்கள் இந்த பாதாள சாக்கடை திட்டத்தை முன்னிருத்திதான் நமதூர் மக்களிடையே ஒட்டு சேகரித்தார், ஜமாஅத் ஆதரவோடும் வெற்றியும் பெற்றார். ஆகையால் பொதமக்கள் விடும் கோரிக்கை என்னவென்றால், சொன்ன வாக்குறுதியில்  இந்த திட்டத்தை மட்டும் அமுல்படுத்தி நமதூருக்கு பதலசாக்கடை திட்டம் ஏற்படுத்தி தந்தாலே போதும், வேறு எதுவும் வேண்டாம் என்பது நமதூர் பாமர மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதை சம்மந்த பட்ட அவர்கள் நமதூர் இரண்டு ஜமாதுக்களையும் அழைத்து பொதுமக்களின் முன்னிலையில் இத்திட்டம் எந்தநிலையில் உள்ளது, மேற்கொண்டு  எப்படி அமுல்படுத்துவது  என்று பேசி முடிவெடுத்தால் மட்டுமே இதை அமுல்படுத்த முடியும் என்பது நமது கருத்தாக உள்ளது.
 நமது நிருபர்.

1 கருத்து:

  1. ASALAMU ALAIKUM
    NO AWARENESS ABOUT ENVIORNMENTAL ISSUES
    THOSE WHO THROUGH GARBBAGE AND DRAIN THEIR TOILETS IN TO CANNEL THEY SHOULD PUNISHED BY MUNICIPALITY
    GIVE SOME PERIOD TO THEM TO BUILD TOILETS FOR THEIR HOUSESS AFTER THAT TIME MUNCIPALITY WILL FINE THEM CUT THE WATER SUPPLY OR LEGAL ACTION AGAINST THEM

    பதிலளிநீக்கு