பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது ö வெளியிட்ட அறிக்கை: சென்னை மருத்துவ கழகத்தால் கோரப்பட்ட லேப் டெக்னீசியன் பணியிடத்துக்கான மாநில பதிவு மூப்பு தேதி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர் பட்டியல், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவு மூப்பில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பதிவுதாரர்கள், பட்டியலில் தங்களது பெயரை சரிபார்த்து கொள்ளலாம்.
பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 2005ம்
பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 2005ம்
ஆண்டு மார்ச் 3ம் தேதியும், தாழ்த்தப்பட்டோரில் அருந்ததினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 2002ம் ஆண்டு மே 29ம் தேதி, ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் 1995ம் ஆண்டு டிச., 6ம் தேதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 1997ம் ஆண்டு செப்., 26ம் தேதி, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பை சேர்ந்தவர்கள் 1998ம் ஆண்டு மே 4ம் தேதி, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 1994ம் ஆண்டு அக்., 10ம் தேதி மற்றும் இதர வகுப்பை சேர்ந்தவர்கள் 1996ம் ஆண்டு மார்ச் 15ம் தேதியும் பதிவு மூப்பு இருக்க வேண்டும்.
பதிவு மூப்பிற்குள் தங்களின் லேப்டெக்னீயன் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள பதிவுதாரர்களின் அனைத்து கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் மற்றும் ஆன்லைன் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் ஜூலை 5ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட தேதிக்குப் பின் வரும் பதிவுதாரர்களின் கோரிக்கைகள், எந்த காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக