நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஹாஜிர்களை நோக்கி கூறினார்கள் "உங்களுக்கு மத்தியில் ஐந்து விஷயங்கள் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்கு அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
- எந்தவொரு சமுதாயத்தில் மானக்கேடான (விபசாரம் போன்ற) பாவங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றதோ
அந்த சமுதாயத்தில் அவர்களின் மூதாதையர்களிடம் காணப்படாத பயங்கர நோய்கள் அவர்களுக்கு மத்தியில் தோன்றும்.
- எந்தவொரு சமுதாயம் தனது சொத்துக்குரிய ஸகாத்தைக் கொடுக்கவில்லையோ
அவர்களுக்கு மழைபொழிவது தடுக்கப்படும். மிருகங்கள் இல்லையென்றால் அவர்களுக்கு மழை பொழிவிக்கப்பட மாட்டாது.
- எந்தவொரு சமுதாயம் அளவைஇ நிறுவையைக் குறைத்து மோசடி செய்கிறதோ
அந்த சமுதாயம் பஞ்சம்இ வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் அரசாங்கத்தின் கொடுமை முதலியவற்றால் பிடிக்கப்படுவார்கள்.
- எந்தவொரு சமுதாயத்தலைவர்கள் அல்லாஹ் இறக்கியருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ
அந்த சமுதாயத்தின் மீது அவர்களது எதிரிகளை அல்லாஹ் ஆதிக்கம் செலுத்த செய்வான். அவர்கள் அவர்களிடமுள்ள சொத்து செல்வங்களையெல்லாம் அழித்து விடுவார்கள்.
- எந்தவொரு சமுதாயம் அல்லாஹ்வின் வேத நூலையும் அவனது நபியின் வழிமுறையையும் செயலிழக்கச் செய்கின்றார்களோஇ அவர்களுக்கு மத்தியில் அல்லாஹ் உட்பூசல்களையும் போராட்டங்களையும் உருவாக்கிவிடுவான் " எனக் கூறினார்கள். (நூல்கள்: அஹ்மத்இ இப்னு மாஜா.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிலிருந்தெல்லாம் பாதுகாவல் தேடினார்களோ அந்த அனைத்து விஷயங்களும் இன்று நம் சமுதாயத்தில் பரவலாக காணப்படுகிறது. எனவே நம்முடைய சமுதாயம் இதிலிருந்தெல்லாம் விலகி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் வெறும் வாயளவில் இல்லாமல் செயல்வடிவில் வாழ்ந்தால் நிச்சயமாக இந்த சமுதாயம் வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழுச்சி பெறும் இன்ஷா அல்லாஹ்.http://nidur.info
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக