ஜமாலிநகர் மெயின் ரோடு
நமதூர் ஜமாலிநகர் முக்கிய சாலையான மெயின் ரோடு சிமெண்டு சாலை
போடப்பட்டு மிக குறிகிய காலத்திலேயே சாலை உடைசளும் விரிசலும் காணப்படுகிறது. இதனால்
அந்தவழியே செல்லகூடிய பள்ளிகுழந்தைகளுக்கும் பள்ளிவாசல் மற்றும் வீடுகளுக்கு
செல்லகூடிய பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் போக வர மிகவும் சிரமமாக உள்ளது.
இதைபார்த்த பொதுமக்கள் பலர் ஊர் பஞ்சாயத் துணை தலைவரிடம்
முறையிட்டும் அவர் அதை சரியான முறையில் பழுது பார்க்காமல் இருப்பது பொதுமக்களிடையே
மிகவும் அதிர்ப்தியை ஏற்படுதிள்ளது.
பொதுமக்களிடம்
அவர் கூறுகையில் சாலை போடப்பட்ட (contractor) ஒப்பந்ததாரர் காரனுடைய பணம் Rs:500000 நம்மிடையே இருக்கிறது. இதை அவர்கள் சரிபடுத்தி
விட்டால் மட்டுமே அந்த பணம் அவரிடம் கொடுக்கப்படும் என்றார்.
இதில்
ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த சாலையை முறையாக சரி செய்ய Rs 500000 மேல் ஆகும் என்பதுதான் நம்முடைய கருத்தாகவும் பொதுமக்களுடைய
கருத்தாகவும் உள்ளது.
இந்த நிலை பலவாரங்கள் கடந்தும், ஒப்பந்ததாரர் மூலம் இதை
சரிசெயவார்களா ? அல்லது அந்த பணத்தை கொண்டு இதை துணை தலைவர் சரி
செய்வாரா என்பது பொதுமக்களிடையே கேள்விக்குறியாக உள்ளது.
நன்றி: நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக