Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 3 ஜூலை, 2012

TNPSC – GROUP IV – தேர்வு – சில தகவல்கள்


T.N.P.S.C – GROUP IV – தேர்வு சில தகவல்கள்
தமிழ்நாடு அரசுப் பணிகளில் இளநிலை பணியாளர் நிலையில் உள்ள 10,793
பணியிடங்களுக்கு தகுதியுடைவர்களை தேர்வு செய்வதற்காக, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC நடத்தும் GROUP IV தேர்வுகள் ஜூலை 7 ம் தேதி நடைபெறுகிறது. 244 ஊர்களில் 5 ஆயிரம் மையங்களில் 12.5
லட்சம் பேர் தேர்வை எழுது உள்ளார்கள்.


இத்தேர்வில் வெற்றி பெற உதவும் சில தகவல்களை திரட்டி தருகிறார் www.labbaikudikadunews.blogspot.com  நிருபர்

1. தேர்வு துவங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக தேர்வுக்கூட இருக்கையில் அமர வேண்டும்.
2. விடைத்தாளில் விடைகள குறித்துக் காட்ட நீலம் மற்றும் கறுப்பு நிற பால்பாயிண்ட பேனைவை மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்.
3. விடைத்தாள் பெற்றதும் அது சரிவர அச்சடிக்கப்பட்டுள்ளதா என்பதையும், அதற்கு ஒர் எண் இருக்கிறதா என்பதையும் சரிபார்த்து கொள்ளவும்.
4. அந்த தேர்வில் தவறான விடைகளுக்கு நெகடிங் மதிப்பெண்கள் கிடையாது. வினா தாள் பெற்றவுடன், தெரிந்த பதிலை மட்டும் உடன் எழுத வேண்டும். தெரியாத பதிலுக்காக நேரத்தினை விரயம் செய்ய வேண்டாம்.
5. தேர்வில் காப்பி அடித்தல், மற்றவர்களிடமிருந்து பொருட்களை வாங்குதால் தவறு. ஏனெனில் எல்லா தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
தேர்விற்காக தயாராகி விட்டவர்களே.. இந்த தேர்வில் வெற்றியோ, தோல்வியோ முயற்சி செய்து பாருங்கள்.. வாழ்க்கையில் இதுவும் ஒரு அனுபவம் தானே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக