Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 30 ஜூன், 2012

உமரின் பாதையை முர்ஸி பின்தொடர வேண்டும் – அல் அஸ்ஹர் இமாம்!


Egypt's president-elect Mohamed Morsi, centre, leaves after performing Friday noon prayers at Al Azhar mosque, in Cairo
கெய்ரோ:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் பாதையை எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸி பின்பற்ற வேண்டும் என்று அவ்காஃப் (மார்க்க விவகாரம்) அமைச்சரும், அல் அஸ்ஹர் கத்தீபுமான(இமாம்) முஹம்மது அப்துல் ஃபதீல் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் இதனை அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: “அல்லாஹ்வின் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுப்பதில் யாருக்கும் உமர் அஞ்சியதில்லை. நீதிதான் அவரது அளவுகோல். தனது கவர்னர்,

பெரம்பலூர் RDO ரேவதி மற்றும் சமுக நலத்துறை அதிகாரி பேச்சியம்மாள் கண்டித்து SDPI கண்டன ஆர்ப்பாட்டம்!






ரமலான்வருக...


வெள்ளி, 29 ஜூன், 2012

SDPIபோஸ்டர்


கண்ணீர் அஞ்சலி

நமதூர் மாணவன் இறப்பால் கல்லூரி மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டினார்கள்.

ஜமாலி நகரில் தார் சாலை


நமதூர் ஜமாலி நகரில் அனைத்து தெருக்களிலும் தார் சாலை போடப்பட்டு உள்ளது.
இதைப்பற்றி பொதுமக்கள் கூறுகையில் 
போக்குவரத்து சென்று வர மிகவும் வசதியாக உள்ளது.
மக்கள் அச்சமின்றி நடமாட தோதுவாக உள்ளது.
இதுப்போன்ற நலவான திட்டம் நமதூருக்கு வருவது, ஊர் முன்னேற்ற பாதையில் செல்ல மிகவும் வழி வகுக்கும்.
ஆனால் சாலையின் தரத்தை பற்றியும் கல் மற்றும் தாரின் அளவுகள் பற்றியும் கவுன்சிலர்களுக்கே தெரியாமல் இருப்பது மக்கள் மனதில் வேடிக்கையாக உள்ளது.
எது எப்படியோ அப்பைக்கு அப்போ எதாவது நல்லவிசயம் நடந்தால் சரிங்கோ 
நன்றி: நமது நிருபர்


வியாழன், 28 ஜூன், 2012

ஊட்டச் சத்துக்கள் (Nutrients)


உணவு பொருள்களில் கீழ்க் கண்ட ஊட்டச்சத்துகள் உள்ளன:
1. கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)
2. புரதங்கள் (Proteins)
3. கொழுப்பு (Fat)
4. வைட்டமின்கள் (Vitamins)
5. தாதுப்பொருட்கள் (Minerals)
6. தண்ணீர் (Water)
1. கார்போஹைட்ரேட்கள்
கார்போஹைட்ரேட்கள் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள்:
1. அரிசி 2. கோதுமை 3. சோளம் 4. மக்காச் சோளம் 5. நவதானியங்கள் 6. உருளைக்கிழங்கு 7. மரவள்ளிக்கிழங்கு 8. கேரட் 9. சர்க்கரை வள்ளிக்கிழங்கு 10. இனிப்பு வகைகள்.

ஆய்வகம், சோதனைக்கூடம் தொழ்நுட்ப பணியாளர் தேவை


கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்


இம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.
பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் அந்த KG புத்தகத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டன.

புதன், 27 ஜூன், 2012

கல்வி உதவித்தொகை

  கல்வி உதவித்தொகை



மாணவ மாணவி கல்வி உதவித்தொகை வேண்டி பெற்றோர்களுக்கு வசதியாக நமதூர் வாசிகளே வருமான சான்றிதல் மற்றும் ஜாதி சான்றிதல்களை எடுத்து கொடுக்கின்றனர். இதில் பலர் வியாபார நோக்கிலும் சிலர் சேவை அடிப்படை இல் எடுத்து கொடுக்கின்றனர் இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்களும் சென்ற ஆண்டைபோல் இந்தவருடமும் பொது சேவைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர்.


நன்றி: நமது நிருபர்

ரமலானை வரவேற்போம்.


சாலை தூய்மை படுத்துதல்




பென்னகோணம் சந்தில் சாலை முழுவதும் மணல் சேர்த்ததை அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பணியை முழுமையாக சாலைமுழுவதும் முடிக்காமல் சாலை ஓரத்தில் மட்டும் முடித்துவிட்டு சென்றுவிட்டனர்.
பென்னகோணம் சந்து சாலைமுழுவதும் சுத்தம் செய்வார்களா? என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.



நன்றி: நமது நிருபர்

கோடைவெயில் தாக்கம் இன்னும் குறையவில்லை !

 கோடைவெயில் தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதால் நன்னாரி சர்பத், ஜிகுருதண்ட ரோஸ்மில்க், ரஸ்னா, ஐஸ் மோர் வியாபாரத்தை மிஞ்சியது 7up Pepsi
நன்றி: நமது நிருபர்

நமதூர் பஞ்சாயத் அலுவலகம்


முக்கிய அறிவிப்பு 
உங்களுக்கு தெரிந்த நபர் யாராக இருந்தாலும் நமதூர் பஞ்சாயத் அலுவலகத்தை அணுகவும்.

நமக்கென்று ஒரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்


அறிமுகம்


ஊடகம் என்பதை தரவுகள், தகவல்கள், செய்திகள் என்பவற்றைச் சேகரித்து வைத்துப் பரவலாக வழங்கும் மிகச் சக்தி வாய்ந்த தொடர்பாடல் சாதனம் என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.

இது அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் என்று வகைப்படுத்தப்படுகின்றது. இவற்றுள் சாசனம், புத்தகம், பத்திரிகை, சஞ்சிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான அனைத்தும் உள்ளடங்குகின்றன. இன்றைய அறிவியல் யுகத்திலே ஊடகமொன்று இல்லாத சமுதாயம் உயிரில்லாத உடம்புக்கு ஒப்பானதாகும். காரணம், ஒரு சமுதாயத்தின் இருப்பையும் (existence) உயிர்ப்பையும் (dynamism) நிர்ணயிப்பதில் ஊடகத்தின் பங்கு மகத்தானதாகும். எந்த ஒரு சமுதாயமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன்னுடைய தனித்துவ அடையாளங்களைப் (identity) பேணிக்கொள்ளவும் மட்டுமின்றி, 

இந்த மவ்லூது பாடல்களை பாடலாமா?


மவ்லூது பொருள் விளக்கம்
மவ்லூது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் என்பது பொருள்.
மவ்லூது என்ற பிறந்த நாளை புனிதர்களுக்கு கொண்டாடுவது எகிப்து நாட்டில் வாழும் கிருத்தவர்களின் வழக்கம்! இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லூது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்களின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர்.
வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லூது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாதுவது வாடிக்கையாகும்! இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத 

செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும்



மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல்.
புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட 
இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

செவ்வாய், 26 ஜூன், 2012

டெங்கு குறித்த சந்தேகத்திற்கு பரிசோதனை, கண்காணிப்பு அவசியம் மக்களுக்கு அறிவுரை


பெரம்பலூர்,:  டெங்கு குறித்து சந்தேகமிருந்தால் சிறப்பு பரிசோதனை, தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டுமென பொதுமக்களுக்கு திருச்சி மருத்துவ நிபுணர் அறிவுரை வழங்கினார்.
 திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் பெரம்பலூரில் டெங்குநோய் விழிப்புணர்வு குறித்து இந்திய மருத்துவ கழக ஆலோசனை கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது.
காவேரி மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் செல்லையா வரவேற்றார். இந்திய 

திங்கள், 25 ஜூன், 2012

மார்பகப் புற்று நோயா இனி ஆபரேசன் இல்லா சிகிச்சை!


மார்பகப்புற்றுநோய் வந்தவர்கள் இனி மார்பகத்தை நீக்கவேண்டிய கட்டாயம்
இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதி நவீன ரேடியேசன் தெரபி
முறையில் உறுப்புகளை அகற்றாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும்
என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாறு புகட்டும் பாடம்

islamic warrior
உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு 

ஊரில் காணப்பட்ட சுவரொட்டி


சனி, 23 ஜூன், 2012

உலகை அச்சுறுத்தும் உயிர்க் கொல்லி நோய்


resize_20110916093338

உலகில் காணப்படும் ஆட்கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது.

வெள்ளி, 22 ஜூன், 2012

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா வின் சமுக மேம்பாட்டு துறை ...



பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி கல்வித்தகுதி பள்ளிகளில் பதிய ஏற்பாடு பதிவு பணி 15 நாள் நடைபெறும்


பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பள்ளி வளாகங்களிலேயே பதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பவே அடிவயித்த கலக்குதா?

Thanks: Facebook 

வியாழன், 21 ஜூன், 2012

சாதிப்பாரா துணைத்தலைவர் ?

நமது நிருபர்

அமைச்சரே! வரலாறு ரொம்ப முக்கியம்...



நீயா நானா,,,?


இயக்கங்களா​ல் நன்மையா?


அன்பான சகோதர /சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த சில வருடங்களாக நான் பல்வேறு நிகழ்வுகளில்  கலந்து கொண்ட போதும், மின்னஞ்சல் பதிவுகளின் மூலமாகவும்  பல நபர்களின் அறிமுகம் கிடைத்தது.
அந்த சந்திப்பிகளிலும் மின்னஞ்சல் பதிவுகளிலும் நமது சில சகோதரர்களின் கருத்துகள் இயக்கங்களால் இந்த சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை. இயக்கங்கள் இளைஞர்களின் உணர்சிகளை தவறாக பயன்படுத்துகிறது நம்மிடம் பிரிவினையை போதிக்கிறது வெறியை வளர்க்கிறது ஒற்றுமையை பாதிக்கிறது போன்ற விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். அவர்களுக்காகவும் அதே போன்ற சிந்தனைகள் கொண்டவர்களுக்காகவும் இந்த பதிவு.
எந்த இயக்கத்திற்கும் ஆதரவாகவும் அல்லது எதிராகவும் நான் இந்த பதிவை எழுத வில்லை.

ஷஅபான் மாத நிகழ்வுகள்


இது ஹிஜ்ரா காலண்டரின் 8வது மாதம்.
ஷஅபான் என்ற பதத்தின் பொருள் : தொடர்ந்து உயர்வது (இடைவிடாமல் அதிகரிப்பது)
ஷஅபான் பிறை பிறந்து விட்டால் எண்ணிலடங்கா அருள்கள் நம் மீது பொழிய ஆரம்பிக்கின்றன. மழை துவங்கும்பொழுது சொட்டு சொட்டாக ஆரம்பித்து பின்னர் சோ வெனப் பெய்வது போல் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருள்கள் ஆரம்பித்து பின்னர் அருள் மழை சோ வெனப் பொழியும் இந்த மாதத்தில்.
இறுதியில் அருள்களின் மாதமான ரமலானில் கொண்டு போய் நம்மை இட்டுச் செல்லும் இந்த மாதம்.

செவ்வாய், 19 ஜூன், 2012

வி.களத்தூரில் பரபரப்பு


வி.களத்தூரில் பரபரப்பு :ஆர்,டி ,ஒ வை கண்டித்து வால் போஸ்டர் ஒட்டப்பட்டது!


வி.களத்தூரில் சந்தன கூடு விழா நடத்த விடாமல் தடுத்த  பெரம்பலூர் மாவட்ட RDO ரேவதி மற்றும் மங்களமேடு காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோரை கண்டித்து பெரம்பலூர், மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பு வால் போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதனை அறிந்த வி.களத்தூர் VAO உடனடியாக ஒட்டப்பட்ட அனைத்து போஸ்டர் களையும் ஊழியர்கள் மூலமாக அப்புறப்படுத்தினர்.

இந்த போஸ்டர் லப்பைகுடிகாடிலும் ஒட்டப்பட்டு இருந்தது.
சந்தன கூடு நடத்துபவர்களுக்கு நாம் ஒருபோதும் ஆதரவு கொடுப்பவர்கள் அல்ல. அனால் இவர்கள் முஸ்லிம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே புறக்கணிக்க படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
எதிர் வரும் காலங்களில் இதுபோன்ற அனாச்சாரங்களை விட்டு நமது மார்கதிர்ககவும் நமது உரிமைககவும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை மாற்றியமைபானாக. ஆமீன்!

திங்கள், 18 ஜூன், 2012

ஆளப் பிறந்த கூட்டமா? அடங்கி வாழப் பிறந்த கூட்டமா?


ஆளப் பிறந்த கூட்டமா இல்லை அடங்கி வாழப் பிறந்த கூட்டமா?
எழப் பிறந்த கூட்டமா இல்லை அழப் பிறந்த கூட்டமா?
வாழப் பிறந்த கூட்டமா இல்லை வீழப் பிறந்த கூட்டமா?

பெரம்பலூர் : கலெக்டர் அறிவுறுத்தல்


பெரம்பலூர்: தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான நபர்கள் யாரேனும் சிகிச்சை பெறவந்தால் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்கவும், அதன் இனப்பெருக்கத்தை தடுக்கவும் அனைத்துதுறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது: 

ஞாயிறு, 17 ஜூன், 2012

கருத்து முரண்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்


-அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தனமானது, அவனது அருளும், சாந்தியும் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழி நடந்த ஸஹாபாக்கள், தாபீயீன்கள் தபவுத்தாபியீன்கள் அனைவர் மீதும் நிலையான சாந்தியும், சமாதானமும் நிலைக்கட்டுமாக!

சீரமைப்பின் அவசியம்

முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் மார்க்கம் தொடர்பான முரண்பாடுகளை இனம் கண்டு அவற்றை காத்திரமான வழிமுறைகள் மூலம் சீரமைப்பது தகுதியும், அறிவும் உள்ள இஸ்லாமிய அழைப்பாளர்கள் மீதுள்ள கடமையாகும்.
முன்னோர்களான அறிஞர்கள் நம்மை விட அறிவிலும், ஒழுக்கத்திலும், சட்டங்களை அகழ்ந்தெடுப்பதிலும் தமது காலங்களைத் தியாகம் செய்தவர்கள், அவர்கள் தமது பொன்னான நேர காலங்களை ஏன்? எதற்காக தியாகம் செய்தார்கள், எந்த அடிப்படைகளை எட்டுவதற்காக தம்மை அற்பணித்தார்கள் போன்ற கேள்விகளை நமக்கு நாம் எழுப்பிக் கொள்வதால் மார்க்கம் தொடர்பான நமது முரண்பாடுகளுக்கும் அலட்சியமாக நாம் விட்டுவிடும் மார்க்க அமச்ங்களுக்கும் தீர்வு காண வழி பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலவச கல்வி சட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளிடம் கட்டணம் வசூலித்தால் 10 மடங்கு அபராதம் கலெக்டர் எச்சரிக்கை


பெரம்பலூர்: இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளிடம் கட்டணம் வசூலித்தால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச கட்டாயக்கல்வி உரிமையை அமல்படுத்துவது குறித்து சுயநிதி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் தரேஸ்அஹமது பேசியதாவது:
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும், அருகில் உள்ள பள்ளியில் தொடக்க கல்வி முடியும் வரை இலவசமாக, கட்டாயமாக்க கல்வி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுயநிதிபள்ளிகளில் குறைந்தது 25 சதவீத குழந்தைகளுக்கு கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும் என்று இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இளமையில் கல்…


image_03உலகின் மிகப்பெரும் பொருளாதார ஜாம்பவானாக சீனா மாறி வருவதை அனைவரும் அறிவோம். அதே சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஸிங்ஸியாங் மாகாணத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு வன்முறைகளை பெரும்பான்னையினர் அறிவதில்லை. பத்திரிகை செய்திகள், சீனாவில் இருந்து வரும் மக்கள் தரும் தகவல்கள் மூலமாக அங்கு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் அநியாயங்களை நாம் சிறிது அறிகிறோம்.
சமீபத்தில் ஸிங்ஸியாங் மாகாண முஸ்லிம்கள் குறித்து வந்த ஒரு மின்னஞ்சலில் உள்ள செய்தி அதிசயமாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது.
பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதோ அல்லது மார்க்க கல்வி கற்கவோ கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது என்பதுதான் அந்த செய்தி. மஸ்ஜித்களுக்கு செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு உத்தரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் கலக்கமுற்றுள்ள மாணவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வதற்கே மிகவும் தயங்குகின்றனர். அது மட்டுமல்லாமல், தங்களின் வீடுகளில் தொழுவதற்கு கூட அவர்கள் மிகவும் தயங்குகின்றனர். எங்கே தாங்கள் வீடுகளில் தொழுவதை யாரேனும் கண்டுவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து தங்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இவர்களை தொழுகையை விட வைக்கிறது.

அன்பு குழந்தைகளின் எதிர்காலம்…


அன்பு குழந்தைகளின் எதிர்காலம்


குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். ஒவ்வொரு நாட்டின் வருங்கால தூண்கள். நாளைய தேசத்தை வழிநடத்த இருப்பவர்கள். இத்தகைய குழந்தை செல்வங்கள் சிறப்பான முறையில் வளர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் இவர்கள் மிகவும் எளிதாக வழி தவற வாய்ப்புள்ளது.
சிறு வயதில் குழந்தைகள் பழகும் பழக்கங்கள், அவர்களின் மனப்பான்மை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வழி தவறிய குழந்தைகளால் குடும்பத்திலும் நாட்டிலும் குழப்பமும் வேதனையும் தான் மிஞ்சும்.
தற்போதுள்ள சூழ்நிலைகள் அடுத்த தலைமுறையினர் சந்திக்க இருக்கும் குழப்பங்களை குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. குழந்தைகளுக்கு தேவையான துணிமணிகள், விளையாட்டு பொருட்கள் என எந்தவொரு பொருளை வாங்குவதற்கும் அதிகமான சிரமப்பட வேண்டியுள்ளது. எங்கு நோக்கினும் நாம் சிறிதும் விரும்பாத உருவங்கள்தான் விகாரமாக காட்சி தருகின்றன. பார்ப்பதற்கு எந்தவிதத்திலும் சகிக்காத ஸ்பைடர் மேன், பென்டன் வகையறாக்கள் தான் எங்கும் நீக்கமற உள்ளன. குழந்தைகள் அதிகமாக விரும்பும் பார்பி கேர்ள் பொம்மையும் இப்போது அரைகுறை ஆடையுடன்தான் வருகிறது.

சனி, 16 ஜூன், 2012

Mobile Phone தொலைந்துவிட்டதா?


உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.

இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 IMEI என்பது International Mobile Equipment Identity என்பதின் சுருக்கம் ஆகும்.

சரி. இந்த IMEI International Mobile Equipment Identity எண்ணை எப்படிக் கண்டறிவது.?


·              உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
·              உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.
·              அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
·              எப்போதாவது உங்கள் மொபைலை நீங்கள் இழக்க நேரிடும்போது இந்த எண் உங்களுக்கு உதவும். 
·              மேலும் தொலைந்து போன மொபைலை சட்டவிரோதமாக பயன்படுத்து பவர்களிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவும்.
IMEI எண் மொபைலை எப்படி கண்டுபிடிக்க உதவும்? அல்லது எப்படி பாதுகாக்க உதவும்?
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்கு cop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள்

அபு அப்துல்லா முகமது இபின் பதூதா

இபின் பட்டுடா (Ibn Battuta) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா ( வரலாறு )
இபின் பட்டுடா (Ibn Battuta) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும், அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன.இவர் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா. கிழக்கு ஐரோப்பா, மையக் கிழக்கு, இந்தியத் துணைக் கண்டம், நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, சீனா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார். இவர் கடந்த தூரம் இவருக்கும் முன் பயணம் செய்தவர்களும், இவரது கிட்டிய சமகாலத்தவரான மார்க்கோ போலோவும் கடந்த தூரங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானது. இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தியாவிலிருந்து-பாலஸ்தீனம் நோக்கி

முஹம்மது நபியை பற்றி அறிஞர்களின் கருத்து