பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பள்ளி வளாகங்களிலேயே பதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,950 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 7,559 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே, அவர்களது கல்வித்தகுதியினை தாங்கள் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தங்களுடைய கல்வித் தகுதியை வேலை வாய்ப்பக இணையதளம் ( ஷ்ஷ்ஷ்.tஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீஜீu.ரீஷீஸ்.வீஸீ) மூலம் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.
பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்கு வரும் பொழுது ரேஷன்கார்டு மற்றும் சாதிச் சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும். மேலும் தங்களது ரேஷன் கார்டில் பதிவுத்தாரரின் பெயர் இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தற்போது புதியதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை, பதிவு செய்யும் நாளிலேயே உடனுக்குடன் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித்தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை வேறு ஒருவேலை நாளில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்யது கொள்ள வேண்டும். 10ம் வகுப்பு தவறிய மாணவ, மாணவிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த பதிவு வருகிற 5ம் தேதி வரை 15 நாட்கள் செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக