மவ்லூது பொருள் விளக்கம்
மவ்லூது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் என்பது பொருள்.
மவ்லூது என்ற பிறந்த நாளை புனிதர்களுக்கு கொண்டாடுவது எகிப்து நாட்டில் வாழும் கிருத்தவர்களின் வழக்கம்! இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லூது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்களின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர்.
வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லூது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாதுவது வாடிக்கையாகும்! இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத
முஸ்லிம்களில் சிலர் கொண்டாடி மவ்லூதை கொண்டாடி வருகின்றனர்.
மவ்லூது வகைகள்
மவ்லூது வகைகள்
கிருத்தவ மவ்லூதுகள்
1.மவ்லூத்-அல்-அத்ரா மவ்லூது
2.மேரி கிர்கிஸ் மவ்லூது
2.மேரி கிர்கிஸ் மவ்லூது
பெயர்தாங்கி முஸ்லிம் மவ்லூதுகள்
1.மீலாதுன் நபி,
2.சைய்யிதா ஜைனப் மவ்லுது
2.சைய்யிதா ஜைனப் மவ்லுது
3.சைய்யித் படாவி (SAYYID BADAWI) மவ்லூது
4.சைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது
4.சைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது
5.அல்-ரிஃபாயி மவ்லூது
6.ஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது
7.அபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது
7.அபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது
மவ்லூதும் சூஃபி, ஷியா, ஷைகுமார்களின் கூத்துக்களும்
மவ்லூதும் கூத்தும்
காலம் காலமாக கிருத்தவர்களை நடைமுறையை இன்றுவரை எகிப்து நாட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் பின்பற்றி மவ்லூது விழா கொண்டாடி வருகின்றனர் இந்த விழாவின் உச்ச கட்ட நாளான இறுதிநாளை LEILA-EL-KEBIRA அதாவது மிகப் பெரிய இரவு என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நம் தமிழ்நாட்டு வழக்கப்படி கூறுவதாக இருந்தால் சிவன்ராத்திரி! (கைசேதமே!)
காலம் காலமாக கிருத்தவர்களை நடைமுறையை இன்றுவரை எகிப்து நாட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் பின்பற்றி மவ்லூது விழா கொண்டாடி வருகின்றனர் இந்த விழாவின் உச்ச கட்ட நாளான இறுதிநாளை LEILA-EL-KEBIRA அதாவது மிகப் பெரிய இரவு என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நம் தமிழ்நாட்டு வழக்கப்படி கூறுவதாக இருந்தால் சிவன்ராத்திரி! (கைசேதமே!)
இந்த நாளின் இரவை மகத்துவமிக்க நாளாக கருதி சூஃபிக்களும் ஷைகுமார்களும் வண்ண வண்ண ஆடை உடுத்தி நகர ஊர்வளம் சென்று ஜிக்ரு செய்து ஆடிப்பாடி மகிழுவார்கள்.
முன்ஷிதீன் எனப்படும் பாடகர்களை வரவழைத்து ராகங்களுடன் மவ்லூது பாடி தம்புரைன் வாத்தியம் இசைத்து விடிய விடிய கூத்து கட்டுவார்கள். வாசனை திரவியங்களின் கமகமக்கும் நறுமனமும் இசையும், நடனமும் அங்கு கூடியிருப்பவர்களை தெய்வீக தன்மைக்கே அழைத்துச் செல்வதாக நம்புவார்கள்.
மவ்லூதை சிறப்பிக்க ஏற்பாடுகள்
மவ்லூது பாடும் பெண்கள்!
மவ்லூது பாடல்களை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக சூஃபிக்கள் கடுமையான பயிற்சி எடுப்பார்கள்! இந்த விழாவின் இறுதிநாளை (LEILA-EL-KEBIRA மகத்துவமிக்க நாள்??) நகரத்தின் மையப்பகுதியில் வைத்து நடத்தப்படும் இங்கு சூஃபிக்கள் மவ்லூது பாடல்களை பாடவதும் ஷைகுமார்கள் அதற்கு விளக்கம் கொடுப்பதும் என கூத்து அரங்கேரும். இந்த நிகழ்ச்சிகளுக்கு SOWAN (சோவன்) அதாவது தங்களுக்குள்ள திறமையான அறிவாற்றலை வெளிப்படுத்துதல் என்று பொருள்.
மவ்லூது பாடல்களை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக சூஃபிக்கள் கடுமையான பயிற்சி எடுப்பார்கள்! இந்த விழாவின் இறுதிநாளை (LEILA-EL-KEBIRA மகத்துவமிக்க நாள்??) நகரத்தின் மையப்பகுதியில் வைத்து நடத்தப்படும் இங்கு சூஃபிக்கள் மவ்லூது பாடல்களை பாடவதும் ஷைகுமார்கள் அதற்கு விளக்கம் கொடுப்பதும் என கூத்து அரங்கேரும். இந்த நிகழ்ச்சிகளுக்கு SOWAN (சோவன்) அதாவது தங்களுக்குள்ள திறமையான அறிவாற்றலை வெளிப்படுத்துதல் என்று பொருள்.
இந்த பாடல்களை பாடுபவர்களுக்கு MAWALIDIYA அதாவது மவ்லூது பாடும் குழுவினர் என்று பெயர். இவர்கள் ஒரு இடத்தில் பாடி முடித்து மற்றொரு இடத்திற்கு பாட செல்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இது நடைபெறுகிறது! ஒரு தெருவில் பாடி முடித்துவிட்டு மறு தெருவுக்கு சென்று கச்சேரி பாடுவது!
மவ்லூது பாடப்படும் இடமும் மக்கள் கூட்டமும்
மவ்லூது பாடப்படும் இடமும் மக்கள் கூட்டமும்
எகிப்து நாட்டில் மவ்லூது பாடப்படும் இடங்களுக்கு மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொள்வார்கள் மேலும் அங்கு இரவு நேர கூடாரம் அமைத்துக் கொள்வார்கள். பெரும்பாலும் இங்கு மக்கள் சுவையான உணவுகளை உண்பதற்காகவும், ஒருவகையான புகை பழக்கமான ஷிஸா என்ற (வாட்டர் பைப்) புகைக்கவும் வருகிறார்கள்.
உணவு, புகை மற்றும் ஜிக்ரு ஆகியவையே இந்த மவ்லூது கச்சேரிகளில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மவ்லூது விடிய விடிய நடத்தப்படுகிறது பெண்கள் அர்த்த-ராத்திரியில் புர்கா கூட இல்லாமல் தெருக்களில் ஆண்கள் முன் அமர்வதும், ஆண் கிலடுகள் பீடி, சிகரெட் குடிப்பதும் விமரிசையாக உள்ளது!
மவ்லூது பாடல்களின் யார் யாருக்கு பாடப்படுகிறது!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளன்று பாடப்படும் மவ்லூதுக்கு MOULID-EL-NABY மீலாதுன் நபி என்று பெயர்!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளன்று பாடப்படும் மவ்லூதுக்கு MOULID-EL-NABY மீலாதுன் நபி என்று பெயர்!
சைய்யிதா ஜைனப் மவ்லுது! நபிகளாரின் மூத்த மகளின் பெயரால் அவரது நினைவாக கட்டப்பட்ட சைய்யிதா ஜைனப் மசூதியில் (மண்ணரையில்) பாடப்படுகிறது! இது செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது!
சைய்யித் படாவி (SAYYID BADAWI) அதாவது எகிப்து நாட்டு துறவியின் பெயரால் மவ்லூது பாடுதல். இது டான்டா எனப்படும் நைல் நதிக்கரையில் பாடப்படுகிறது. அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!
சைய்யித் படாவி (SAYYID BADAWI) அதாவது எகிப்து நாட்டு துறவியின் பெயரால் மவ்லூது பாடுதல். இது டான்டா எனப்படும் நைல் நதிக்கரையில் பாடப்படுகிறது. அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!
சைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது காய்ரோவில் ஆகஸ்டு மாதம் கொண்டாடப்படுகிறது.
அல்-ரிஃபாயி மவ்லூது சிட்டாடெல் சதுக்கத்தில் செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது!
ஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது ஜுலை மாதம் தார்ப் அல் அஹ்மர் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது!
ஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது ஜுலை மாதம் தார்ப் அல் அஹ்மர் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது!
அபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது ஷாபான் மாதம் லக்ஸர் என்ற பகுதியில் கொண்டாடப்படுகிறது!
மவ்லூத்-அல்-அத்ரா மவ்லூது அன்னை மரியம் அவர்களின் நினைவாக அஸ்ஸைட் என்ற பகுதியில் காப்டிக் கிருத்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
மேரி கிர்கிஸ் மவ்லூது காப்டிக் கிருத்தவர்களால் வெஸ்டு பேங்க் என்ற நைல் மற்றும் லக்ஸர் பகுதியில் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!
மனிதர்களை புகழ்வது கூடுமா?
ஒரு தடவை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்னிலையில் சபையிலிருந்த மனிதரைப் பற்றி மற்றவர் புகழ்ந்து கூறினார். இதனைக் கண்டித்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ்ந்தவரைப் பார்த்து நீ உனது நண்பனின் தலையை வெட்டி விட்டாயே என கண்டித்ததோடு நீங்கள் யாரையாவது புகழ நினைத்தால் நான் இன்னாரை பற்றி இப்படி நினைக்கிறேன், ஆனால் அல்லாஹ்தான் அவரைப் பற்றி தீர்மானிக்க கூடியவன் என கூறுங்கள். யாரையும் தூய்மையாளர் என புகழாதீர்கள் என அறிவுறுத்தினார்கள்.[நூல்;புஹாரி-முஸ்லீம்]
கேடுகெட்ட மவ்லூது பாடல்களை பாடிக்கொண்டே நபிமார் களையும், நல்லடியார்களையும், மனிதர்களையும் கண்ணியப் படுத்துகிறோம் என்று பெருமையாக கூறிக்கொண்டு அவர்களின் தலைகளை வெட்டும் செயல்களை செய்கிறீர்களே! மவ்லூது ரசிகர்களே நீங்கள் இந்த கொலைக்கு ஒப்பான பாவத்தை சுமக்காதீர்கள்! மறுமையில் அல்லாஹ்வின் முன்னால் கைசேதப்பட்டு நிற்காதீர்கள்!
நபிகளாரின் எச்சரிக்கை
அன்புச்சகோதர சகோதரிகளே நபிகளாரின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அல்லது மறந்துவிட்டதா? மறந்து விட்டிருந்தால் மீண்டும் நினைவுபடுத்த இதோ கீழே அந்த மாநபியின் எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை கேளுங்கள்
”கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர் : உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ (3445)
”கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர் : உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ (3445)
இப்போது கூறுங்கள்! இந்த மவ்லூது பாடல்களை பாடலாமா? கிருத்தவர்களின் வழிமுறையை பின்பற்றலாமா? இதோ நபிகளாரின் மற்றுமொரு கடுமையான எச்சரிக்கை உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது சற்று செவிதாழ்த்திக் கேளுங்கள்!
”நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள்.” (புகாரி : 7319 3456)
”நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள்.” (புகாரி : 7319 3456)
இதோ அருள்மறை வசனங்கள் இதை படித்து நல்லுணர்வு பெற முயற்சி செய்யுங்கள்! அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
இணைவைத்தால் மன்னிப்பு கிடையாது
”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)
”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)
தாயத்தை கட்டாதீர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹமத் 16781)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹமத் 16781)
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)
இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ் கூறுகிறான்: -
”…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
”…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
”இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)
”இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)
இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)
இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன் 39:65,66)
இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
தீர்ப்பு நாளின் கைசேதமே!
அதற்கு பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், ”அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா? (அல்குர்ஆன்:34:33)
அதற்கு பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், ”அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா? (அல்குர்ஆன்:34:33)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
ஆங்கிலத்தில் ஆதாரம்: http://www.touregypt.net/featurestories/moulid.htm
அஸ்ஸலாமு அலைக்கும்..
பதிலளிநீக்குகுர் ஆன் மற்றும் ஹதிஸின் ஒரு பகுதியை மட்டும் பதிப்பது சரியல்ல..
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.(2;42)
(அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.(2:85)
கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர் : உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ (3445)
மேல் உள்ள ஹதிஸில் புகழ்வதை தடுக்கவில்லை, ஆனால் ஈஸா(அலை) அவர்களை கிருஸ்துவர்கள் அல்லாஹ்விற்கு இணையாக ஆக்கிவிட்டார்கள், அதே போல் நபி(ஸல்) அவர்களையும் அந்த அளவுக்கு புகழ்ந்து விடக்கூடாது என்றுதான் பெரும்பான்மையான இமாம்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்
மவ்லூத் ஓதுவதுப் பற்றி இஸ்லாம் கூறும் வழிமுறை:
விளக்கம்:
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (59:10)
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (47:19)
இறந்தவருக்கு யாசின் ஓதுங்கள்:
உங்களில் இறந்தவருக்கு யாசின் ஓதுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஃகல் இப்னு யஸார்(ரலி) அறிவிக்கிறார்கள்.(இமாம் அபூதாவுத்(ரஹ்),இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்) ,இமாம் இப்னுஹிப்பான்(ரஹ்) )
அன்பு சகோதரர்களே, யாசின் குர் ஆனின் ஒரு பகுதி என்றாலும் அதுவும் குர்ஆன் என்பதால் முழு குர் ஆனையும் ஓதிலாம் பல இமாம்கள் சட்டங்கள் வகுத்துள்ளார்கள், ஹதிஸ் தொகுத்த அந்த நல் இமாம்களின் பேச்சை கேட்கமால் தற்போது பொய்யன் (பிஜே) மற்றும் பலர் பேச்சை கேட்டு உங்கள் பெற்றொருக்கு செய்யும் அமல்களை செய்ய மறந்துவிடாதீர்கள்.. மேலும் சில அறியாதவர்கள் இதை பலகினமாக்க முற்படுவார்கள், ஆனால் நிச்சியாமாக அவர்கள் அறியாதவர்களாக தான் உள்ளார்கள், அதாவது இறக்கும் நிலையில் உள்ள ஒருவருக்கு யாசின் ஓதுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக ஒரு ஹதிஸும் உள்ளன, அஹ்லுஸ் சுன்னத் ஜமாத்தார்கள் அவ்வாறே அவர்கள் செயல்ப்பட்டு வருக்கின்றார்கள், அவர்கள் பலகினம், பலமானது என்று பார்ப்பதில்லை, அவர்கள் பார்ப்பது ஒன்றே ஒன்று நபி(ஸல்) அவர்கள் சொல்லி அந்த ஹதிஸி பின்பற்றுவதற்காக போட்டி போட்டு கொள்வார்கள், ஆனால் சிலர் அறியாதவர்கள் அதை பலகினமான ஹதிஸ் என எடுத்து வைத்து விட்டார்கள், ஆனால் அதை அவர்கள் எடுத்து கொண்டாலும், மற்றொரு உன்மை அறிந்து செயல் படுமாறு கேட்டு கொள்கிறேன், ஆனால் அந்த அறியாதவர்கள் மற்ற ஒரு செய்தியை மறைத்துவிட்டார்கள், இறந்தவருக்கு யாசின் ஓதுங்கள் என்று பலமான ஹதிஸ் என அவர்கள் அறியாமையில் தனது தலைவர் பேச்சை கேட்டு தனது பெற்றோருக்கு ஒரு யாசின் கூட ஓதமால் இருக்கின்றார்கள்.. தயவு செய்து உங்கள் பெற்றோர் இறந்தவராக இருந்தால் அவர்களுக்கு ஒரு யாசினவது ஓதுங்கள்.. அல்லா அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவனாக!!!..
இறந்த அவர்களுடைய பெற்றோருக்கு ஒருவன் குர்ஆன் ஓதிவதினால் பெற்றோருக்கு கிடைக்கும் பரிசு:
பதிலளிநீக்குஹஜ்ரத் மூஅத்(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, எவரொருவர் குர்ஆன் ஓதி, அதன் படி அமல் செய்கிறாறோ அவருடைய பெற்றோருக்கு கியாமத் நாளில் ஒரு கிரிடம் அணிவிக்கப்படும், அதன் ஒளி உலகில் சூரியன் உங்களுடைய விடுகள் இருந்தால் எவ்வளவு பிரகாசம் இருக்குமோ அதை அதிகமாக இருக்கும். எனவே அதன்படி அமல் செய்தவரைப் பற்றி (அவருக்கு கிடைக்கும்ம் பாக்கியங்களைப் பற்றி) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள், (இமாம் அஹ்மத்(ரஹ்), இமாம் அபூதாவுத்(ரஹ்)).
நீங்கள் குர்ஆன் ஓதி அமல் செய்தால் நிச்சியாமாக அல்லா உங்கள் பெற்றோருக்கு கிரிடம் அணிவித்து மகிழ்விப்பான்.
மேலும் உங்கள் பெற்றோரின் முன்,பின் பாவங்கள் அனைத்தும் மன்னிப்பான்.
ஒருவர்(பெற்றோர்) தம்முடைய குழந்தைக்கு குர்ஆனைப்பார்த்து ஓதக்கற்று தந்தால் அவருடைய முன்,பின் பாவங்கள் மன்னிக்கப்படும், இன்னும் ஒருவர் தம் குழந்தைக்குக் குர்ஆனை மனனம் செய்ய வைத்தால் அவர் கியாமத் நாளில் பெளர்ணமி நிலவு போன்று எழுப்பப்படுவார், அப்பொழுது அவருடைய குழந்தையிடம் நீ ஓதத் தொடங்கு என்று சொல்லப்படும், அவர் ஓர் ஆயத்தை ஓதியவுடன் அவருடைய தந்தைக்கு ஓர் பதவி உயர்வு வழங்கப்படும், இவ்வாறு குர்ஆன் ஷரிபை முழுமையாக அவர் ஓதி முடிக்கும் வரை தந்தையின் பதவி உயர்த்தப்பட்டு கொண்டே இருக்கும் என நபி(ஸல்) கூறினதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் தப்ரானி(ரஹ்))
வீணான பொய்யன் பிஜே பேச்சை கேட்டு உங்கள் பெற்றோருக்கு கிடைக்கும் அல்லாவின் வெகுமதியை தர மறந்து விடாதீர்கள், உங்கள் பெற்றோருக்காக நீங்களே ஓதுங்கள்..
நபி(ஸல்) அவர்களின் மீது, நல்லோர்களையும் மீது மவ்லுத் பாட்டு ஒதுதல்(புகழ் பாட்டு படித்தல்:
பதிலளிநீக்குஎனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் - ரஹ் - அவர்களிடம்) ''எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்" (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, ''எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்" என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், ''இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்" என்று கூறினார்கள் என்று ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்கள்.(இமாம் புகாரி(ரஹ்)) இறந்த தந்தைக்கு பிள்ளைகள் அவர்களுக்கு மவ்லுத் பாட்டு பாடுதல்(புகழ் பாட்டு பாடுதல்) என்னுடைய திருமனத்தின் காலை வேளையில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள், அப்போது எனக்கருகில் இரண்டு முஸ்லிம் சிறுமிகள் பத்ரு போரில் கொல்லப்பட்ட தங்களுடை தந்தைமார்களை பற்றி புகழ்ந்து இரங்கற்பாட்டு பாடினார்கள், அவர்கள் பாடும் போது அதில் (வரிக்களில்) எங்களுக்கிடைய ஒரு நபி இருக்கிறார், அவர் நாளை நடவிருப்பதை நன்கு அறிவார் என்று கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள், ''இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்" என்று கூறினார்கள் என்று ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்கள்(இமாம் இப்னுமஜா(ரஹ்))
இறந்தவர்களை புகழ்ந்தால்(மவ்லுத் பாட்டு பாடினால் ) அவர்கள் சொர்க்கம் நிச்சியம்:
பதிலளிநீக்குஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''உறுதியாகிவிட்டது" என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ''உறுதியாகிவிட்டது?'' எனக் கூறினார்கள். உமர்(ரலி) ''எது உறுதியாகிவிட்டது?'' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், ''இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்" எனக் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்(இமாம் புகாரி(ரஹ்))
மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர்(ரலி) உடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்ததும் உமர்(ரலி), ''உறுதியாகிவிட்டது'' என்றார். பிறகு இன்னொரு ஜனாஸ கடந்து சென்றது. அப்போதும் மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசினர். உடனே உமர்(ரலி), ''உறுதியாகிவிட்டது'' என்றார். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. மக்கள் அவரின் தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் உமர்(ரலி), ''உறுதியாகிவிட்டது'' எனக் கூறினார். நான் ''இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எது உறுதியாகிவிட்டது?'' எனக் கேட்டதும். ''எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சி கூறினால் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் ''மூவர் சாட்சியாயிருந்தால்..?'' என்று கேட்டோம். அதற்கவர்கள் ''மூன்று பேர் சாட்சி கூறினாலும் தான்" என்றனர். மீண்டும் ''இருவர் சாட்சியாக இருந்தால்..." என நாங்கள் கேட்தற்கு இரண்டு பேர் சாட்சி கூறினாலும் தான்" என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன்" என்று உமர்(ரலி) கூறினார் என அபுல் அஸ்வத் அறிவிக்கிறார்கள்(இமாம் புகாரி(ரஹ்)) நபி(ஸல்) அவர்களின் மீது மவ்லுத் பாட்டு பாடுதல்(புகழ் பாட்டு பாடுதல்): ஹஸ்ஸான் பின் தாபித்(ரலி): அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஹஸ்ஸான் பின் தாபித்(ரலி) மஸ்ஜிது நபவியில் ஒரு மின்பர்(மேடை) ஏற்படுத்தினார்கள், அவர்கள் அம்மேடையில் நின்றுக்கொண்டு நபி(ஸல்) அவர்களை பற்றி புகழ்ந்தும், அவர்களை எதிர்போருக்கு மறுப்பளித்தும் வந்தார்கள், நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள், அல்லா ஹஸ்ஸான் அவர்களுக்கு ரூஹீல்குத்ஸ் எனும் ஜிப்ரிலை கொண்டு ஒத்தாசை புரிக்கின்றான், அவர் ரஸூல் கரிம் நபி(ஸல்) புகழும் கால மெல்லாம் என்று அவர்களைப் பற்றி அருளினார்கள்.(இமாம் புகாரி(ரஹ்),இமாம் மிஷ்காத்(ரஹ்))
நபி(ஸல்) அவர்களின் மீது மவ்லுத் பாட்டு பாடுதல்(புகழ் பாட்டு பாடுதல்):
பதிலளிநீக்குஹஸ்ஸான் பின் தாபித்(ரலி): அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஹஸ்ஸான் பின் தாபித்(ரலி) மஸ்ஜிது நபவியில் ஒரு மின்பர்(மேடை) ஏற்படுத்தினார்கள், அவர்கள் அம்மேடையில் நின்றுக்கொண்டு நபி(ஸல்) அவர்களை பற்றி புகழ்ந்தும், அவர்களை எதிர்போருக்கு மறுப்பளித்தும் வந்தார்கள், நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள், அல்லா ஹஸ்ஸான் அவர்களுக்கு ரூஹீல்குத்ஸ் எனும் ஜிப்ரிலை கொண்டு ஒத்தாசை புரிக்கின்றான், அவர் ரஸூல் கரிம் நபி(ஸல்) புகழும் கால மெல்லாம் என்று அவர்களைப் பற்றி அருளினார்கள்.(இமாம் புகாரி(ரஹ்),இமாம் மிஷ்காத்(ரஹ்))
இறந்தவர்களுக்காக இறந்த அதே நாள் இறந்தவர்களுக்கு புகழ் பாட்டு பாடிய ஹஸ்ஸான் பின் தாபித்(ரலி):
ஜைத் பின் தாபித்(ரலி) இறந்த பிறகு மர்வான்(ரலி) அவர்களுக்கு ஜனஸா தொழுகை நடத்தினார்கள், மிகப் பெரிய மார்க்க கவிஞர் ஹஸ்ஸான் பின் தாபித்(ரலி) அவர்கள் ஜைத் பின் தாபித்(ரலி) அவர்களின் மீது இரங்கற்பாட்டு பாடி அன்றைய தினம் மனக் கவலையை வெளிப்படுத்தினார்கள்(ஜைத் பின் தாபித்(ரலி) வாழ்க்கை வரலாறு)
இஸ்லாத்தை பற்றி புகழ்ந்து பாடியவர்களை கண்ணியப் படுத்துதல்:
கஃப் பின் சுஹைர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் சமுகம் வந்து இஸ்லாத்தை பற்றி 25 தூய வரிகளில் ஒரு பாடலை பாடுகின்றார்கள், அப்பாடல் வரிகளை செவியுற்றே நபி(ஸல்) அவர்கள் தம் மேலங்கி எடுத்து கஃப் பின் சுஹைர்(ரலி) அவர்களுக்கு போர்த்தி கொளருவம் படுத்தினார்கள்(கஃப் பின் சுஹைர்(ரலி) வரலாறு)
நல்லடியார்களை புகழ்தல் நபி(ஸல்) அவர்களின் அங்கிகாரம்:
ஒரு முஸ்லிம் மனிதர் நலவனவற்றை செய்கிறார், அவரை முஸ்லிம் மனிதர்கள் புகழ்கிறார்கள், அவரைப் பற்றி எனக்கு சொல்லுங்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது அதற்கு நபி(ஸல்) அவர்களது முஃமினான மனிதருக்கு துரிதமாக கிடைக்கும் சுபச் செய்தியாகும் எனக்கூறினார் என அபூதர்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்)) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்))