Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 30 ஜூன், 2012

உமரின் பாதையை முர்ஸி பின்தொடர வேண்டும் – அல் அஸ்ஹர் இமாம்!


Egypt's president-elect Mohamed Morsi, centre, leaves after performing Friday noon prayers at Al Azhar mosque, in Cairo
கெய்ரோ:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் பாதையை எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸி பின்பற்ற வேண்டும் என்று அவ்காஃப் (மார்க்க விவகாரம்) அமைச்சரும், அல் அஸ்ஹர் கத்தீபுமான(இமாம்) முஹம்மது அப்துல் ஃபதீல் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் இதனை அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: “அல்லாஹ்வின் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுப்பதில் யாருக்கும் உமர் அஞ்சியதில்லை. நீதிதான் அவரது அளவுகோல். தனது கவர்னர்,


தனது மகனுக்கு ஆதரவான முடிவை எடுத்தபொழுது கவர்னரான அம்ருப்னு ஆஸை தண்டிக்கவும் தைரியம் காட்டினார்.
இதர மதத்தினருடன் உமர்(ரலி) அவர்களின் அணுகுமுறை முன்மாதிரியானது. பைதுல் முக்கதிஸிற்கு சென்றபொழுது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது அச்சத்தைப் போக்கினார்கள். தவறான புரிந்துணர்வு ஏற்பட்டுவிடும் என்பதற்காக தொழுகை நேரம் வந்தவுடன் தொழுவதற்கு கிறிஸ்தவர்கள் கோரிய பிறகு அதனை உமர்(ரலி) மறுத்துவிட்டார்கள்.
நமது நாட்டில் பல்வேறு மதத்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் நீதியின் அடிப்படையிலான அணுகுமுறையை கையாள நமது புதிய ஆட்சியாளருக்கு சாதிக்க வேண்டும்.” இவ்வாறு அல் அஸ்ஹர் இமாம் தனது உரையில் குறிப்பிட்டார்.
Thanks: Thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக