Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 21 ஜூன், 2012

இயக்கங்களா​ல் நன்மையா?


அன்பான சகோதர /சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த சில வருடங்களாக நான் பல்வேறு நிகழ்வுகளில்  கலந்து கொண்ட போதும், மின்னஞ்சல் பதிவுகளின் மூலமாகவும்  பல நபர்களின் அறிமுகம் கிடைத்தது.
அந்த சந்திப்பிகளிலும் மின்னஞ்சல் பதிவுகளிலும் நமது சில சகோதரர்களின் கருத்துகள் இயக்கங்களால் இந்த சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை. இயக்கங்கள் இளைஞர்களின் உணர்சிகளை தவறாக பயன்படுத்துகிறது நம்மிடம் பிரிவினையை போதிக்கிறது வெறியை வளர்க்கிறது ஒற்றுமையை பாதிக்கிறது போன்ற விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். அவர்களுக்காகவும் அதே போன்ற சிந்தனைகள் கொண்டவர்களுக்காகவும் இந்த பதிவு.
எந்த இயக்கத்திற்கும் ஆதரவாகவும் அல்லது எதிராகவும் நான் இந்த பதிவை எழுத வில்லை.

விடுதலைப் போரில் இயக்கங்கள்

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீரகாவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி.
‘இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்’ என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.
வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது.
சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று யூகிக்க முடிகிறது.
வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10-ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர்.  காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார்.
இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.

சுதந்திரத்திற்கு பின் நமது  இயக்கங்களால் அடைந்த பலன்கள்பற்றி பாப்போம்

சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்கக்கோரி தேச அளவிலான போராட்டத்தை துவக்க முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அனைத்து முஸ்லிம்களையும் ஒ.பி.சி பிரிவில் உட்படுத்த வேண்டும் என்றும் முஸ்லிம் அமைப்புகளின் 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இதற்கான ஒருங்கிணைந்த கமிட்டி ஒன்றும் உருவாக்கப்பட்டது. இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்காக சட்டரீதியான போராட்டம் நடத்தப்படும் என பிரகடனப்படுத்தப்பட்டது.
இடஒதுக்கீட்டிற்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு விரோதமான சமீபகாலங்களில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி கேள்வி எழுப்பப்படும். இம்மாநாட்டில் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், அஹ்லே ஹதீஸ், ஆல் இந்தியா மைனாரிட்டி கமிட்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு அமைப்பின் பிரதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இவையெல்லாம் இயக்கம் என்ற போர்வையால் மட்டுமே முடிந்தது என்பதை நாம் பார்த்து வருகின்றோம்.

மேலும் இணைவைத்தலோடும், பித்அத் தோடும் கிடந்த சமுதாயம் இன்று குரான் ஹதீதை எளிமையாக புரிந்து கொண்டு விபசாரம், வட்டி ,வரதட்சனை போன்றவற்றை ஒதுக்கியும், ஜகாத், சதகா, பித்ரா இவைகளை முறையாக கொடுக்கவும் அவர்களை முன்வர வைத்தது இயக்கங்களே.
இடஒதுக்கீடு 3.5 %  பெற்று தந்தது. மேலும் 5 % உயர்த்த கோரிக்கை வலியுறுத்துவது  உலமாக்களின் நலவாரியம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் நல வாரியம், வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஓட்டுரிமை. வக்பு சொத்துகளை மீட்க தொடர்ந்து குரல் கொடுப்பது
பாபர் மசூதி இடத்தை பாசிஸ்டுகளால் அபகரிக்க படாமல் தடுப்பது. மீண்டும் அதில் கட்டுவதற்கு முயற்சிப்பது இவையெல்லாம் இயக்கங்கள் மூலமாகவே முடிந்தது.
தென் இந்தியாவில் பாசிஸ்டுகளால் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்ப்பட்டு கொண்டு இருந்தபோது கேரள மாநிலம் மாறாடு கலவரத்தின் மூலம் பாசிஸ்டுகளின் முயற்சி செய்த போது  தடுத்து  முற்றுபுள்ளி வைத்தது.

காவல்துறையின் அராஜகத்தை துணிச்சலாக எதிர் கொண்டு  கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு வெற்றி, சிறை கைதிகளை விடுவிக்க கோரி கோவையில் ஆர்ப்பாட்டம், பேரணி.
சமுதாயத்தின் நிலையை பிரதமர் வரை எடுத்து சென்றது .
மேலப்பாளையம் காதியானிகளுக்கு ஏதிராக ஓன்று சேர்ந்து மாநாடு.
ஒரு கட்சியாக இருந்து 2 ,3 என்ற நிலை மாறி  தற்போது இன்னொரு பிரிவின் மூலம் 3 தொகுதிகள். புதியதாக ஆரம்பிக்க பட்ட ஒரு பிரிவு 6 தொகுதிகள் தனித்து போட்டியிடுவதும்  இப்படி நமது சமுதாயம் முனேற்ற பாதையில் செல்கின்றதே தவிர வீழ்ச்சி அடையவில்லை சில தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டாலும். வரக்கூடிய காலங்களில் ஒன்றுபட்டால் இந்த நிலை மாறும். 
எந்த இயக்கங்களும் சமுதாயத்திற்கு எதுவும் தேவை இல்லை என்றோ இட ஒதுக்க்கீடு வேண்டாம் என்றோ எங்கள் சமுதாயம் நல்ல நிலையில் உள்ளது என்றோ கூறவில்லை மாறாக ஒவ்வொரு இயக்கமும் அவர்களுடைய தலைமையின் கருத்துகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்றது.
ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே நம்பி இருந்த காலம் போயி தற்போது முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க நிறைய கட்சிகள் வந்து விட்டது தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த பிரிவுகள் ஓரளவு முஸ்லிம்களுக்காக நல்லது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் அவர்களும் வெற்றிபெற துவா செய்வோம் புதிதாக ஆரம்பித்த தேசிய பிரிவு சில இடங்களில் வெற்றி பெறலாம் அல்லது கணிசமான வாக்குகளை பெறலாம் இதில் எது நடந்தாலும் வருகின்ற காலங்களில் அது  தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிடும்.  அப்போது எல்லோரும்  ஒன்றாக சேர்ந்தால் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி நிச்சயம். அதனால் இவைகளை நம்மை போன்றவர்கள் தான் ஒன்றிணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
எந்த இயக்கமோ அல்லது அரசியல் கட்சியோ பல பிரிவுகளாக உடைந்து வந்தாலும் அவைகள் நம்மிடம் தான் பொருளாதரத்தை எதிர்பாத்தும் ஆதரவு கேட்டும் வந்து ஆக வேண்டும். நாம் எல்லோரும் ஒரே சிந்தனையில் நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வாருங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி கொண்டும் அவர்கள் எல்லோரும் ஒன்றுபட துவா செய்வோமே!
எல்லாம் வல்ல அல்லாஹ் விரைவில் சமுதாயத்தை மேலோங்க செய்வானாக ….ஆமின்  
மேலே குறிப்பிட்ட இந்த பிரிவுகள் தென் இந்தியாவில்தான் (தமிழகம்,கேரளா ) உள்ளதே தவிர வட இந்தியாவில் இல்லை ஆனால் வட இந்தியாவில் உள்ள நமது சமுதாயத்தின் நிலையோ பாசிஸ்டுகளின் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்டு  வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை, கல்வி இல்லாமை, மார்க்க அறிவின்மை, வட்டி இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.  இதற்கு நல்ல உதாரணம் மண்டல் அறிக்கை, சச்சார் அறிக்கை ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை இவைகளை சொல்லலாம் . 
இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நாமோ அல்லது நமது சந்ததிகளோ நம்மை போன்று புலம்பி கொண்டு இல்லாமல் இந்த நாட்டில் உள்ள அனைத்து தரப்பு  மக்களுக்கும் சுதந்திரம், நீதி, பாதுகாப்பு போன்றவைகளை ஏற்படுத்தி வழிநடத்த இறைவனை வேண்டியவனாக பிரார்த்தித்து கொள்கிறேன்.
நமது எண்ணங்களும் முயற்சிகளும் நிறைவேற துவா செய்தவனாக …
Thanks: Thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக