Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 18 ஜூன், 2012

ஆளப் பிறந்த கூட்டமா? அடங்கி வாழப் பிறந்த கூட்டமா?


ஆளப் பிறந்த கூட்டமா இல்லை அடங்கி வாழப் பிறந்த கூட்டமா?
எழப் பிறந்த கூட்டமா இல்லை அழப் பிறந்த கூட்டமா?
வாழப் பிறந்த கூட்டமா இல்லை வீழப் பிறந்த கூட்டமா?


வேதத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் என்றான் இறைவன் இவர்கள்
பேதத்தைப் பற்றிக் கொள்கிறாகள்
மார்க்கத்தைப் பேணுங்கள் என்றால் மூர்க்கத்தைப் பேணுகிறார்கள்
ஒட்டிக் கொண்டு வாழுங்கள் என்றால் வெட்டிக் கொண்டு சாகிறேன் என்கிறார்கள்

கொள்கை என்பது வேட்டி பதவி என்பது துண்டு
துண்டு போகலாம் ஆனால் வேட்டி போகக் கூடாது என்பார்கள்
நம்மவர்களோ பதவிக்காக உம்மத்தை துண்டு துண்டுகளாக ஆக்குகிறார்கள்
இஸ்லாமியக் கொள்கையைக் கூறு போட்டு
பதவி கிடைக்குமா என பார்க்கிறார்கள்

குரூப் குரூப் ஆக பிரிந்து நின்று இஸ்லாத்தின் உறுப்புகளை வெட்டிச் சாய்க்கிறார்க
என் சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரியும் என்றார்கள் ஏந்தல் நபி
தமிழகத்தில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட (கட்சிகள்?)
பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறார்கள்
மற்றவர்கள் பதவிக்கு வர பரிந்து நிற்கிறார்கள் பல்லாக்கு தூக்க வரிந்து நிற்கிறார்கள்

கல்வியில் மிகவும் பின் தங்கி நிற்கிறோம் - மார்கத்தில்
கலகம் பண்ணுவதில் முன் வந்து நிற்கிறோம்
இந்தியாவில் எந்தச் சமுதாயமும் செய்யாத சாதனை
முஸ்லீம்களுக்கே அதிக இயக்கங்கள் என்பது வேதனை

அரசியல் என்பது பணம் பதவி பண்ண உத்தி மக்களைப் பிரிப்பது தான் அவர்கள் புத்தி
மார்கக்கல்வி உலகக்கல்வி இவையிரண்டையும் பற்றி நிற்பதில் தான் முஸ்லிம்களே நமது சக்தி
வேண்டாம் முஸ்லிம் அரசியல்கட்சிகள் என்ற சகதி
இல்லையென்றால் இறுதி நாளின் இறைவன் முன்
இஸ்லாத்தை உடைத்தவர்கள் அணியில் நிற்பது உறுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக